ஜீ தமிழ் நிகழ்ச்சி, ஒரு முள்ளு மேலே இருப்பது போல இருந்தது! நான் செய்த தவறு! பார்த்திபன் உருக்கம்
சென்னை: நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர் எனப் பன்முகத் திறமைகளைக் கொண்ட பார்த்திபன், தனது சமூக வலைதளப் பக்கத்தில், 'என் வாழ்வின் கார்காலம்' என்ற தலைப்பில் ஒரு சுவாரஸ்யமான பதிவை வெளியிட்டுள்ளார். ஜீ டிவியில் ஒளிபரப்பாகும் 'சிங்கிள் பசங்க' என்ற நிகழ்ச்சியில், ஜட்ஜாக இருக்கும் அனுபவத்தைப் பற்றி அவர், தனது தனித்துவமான பாணியில் பேசியுள்ளார்.

பார்த்திபனின் சினிமா பயணம்
நடிகர் பார்த்திபன், முதலில் இயக்குனர் பாக்யராஜிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். பின்னர், 1989-ம் ஆண்டு, 'புதிய பாதை' என்ற படத்தின் மூலம், இயக்குநராகவும், நடிகராகவும் அறிமுகமானார். இந்தப் படம், ஒரு பெரிய வெற்றியைப் பெற்றது. தனது நடிப்பு மற்றும் இயக்கத்தில், 'உள்ளே வெளியே', 'ஹவுஸ்ஃபுல்', 'குடைக்குள் மழை', 'ஒத்த செருப்பு சைஸ் 7' போன்ற பல வெற்றிப் படங்களைக் கொடுத்தார். குறிப்பாக, ஒரே ஒரு கதாபாத்திரத்தை வைத்து, ஒரு முழுப் படத்தையும் இயக்கி, நடித்த 'ஒத்த செருப்பு சைஸ் 7', இந்திய அளவில் பல விருதுகளை வென்றது.
குடும்பம்
பார்த்திபன், நடிகை சீதாவை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு அபிநயா, கீர்த்தனா என இரண்டு மகள்கள் மற்றும் ராக்கி என்ற ஒரு மகன் உள்ளனர். பார்த்திபனின் மகள் கீர்த்தனா, 'கண்ணே கலைமானே' என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதுபோல கன்னத்தில் முத்தமிட்டால் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாகவும் நடிப்பு பல விருதுகளும் பெற்று இருந்தார்.
சிங்கிள் பசங்க' ஷோவில் பார்த்திபனின் அனுபவம்
பார்த்திபன், 'சிங்கிள் பசங்க' நிகழ்ச்சியில் ஜட்ஜாக இருந்த அனுபவத்தைப் பற்றி, "அது ஒரு புது அனுபவம். ஒரு திட்டமிட்ட கொலையை, திட்டமில்லாத முறையில் செய்வதுபோல, அந்த இடத்திலேயே, எதிர்பாராத கமெண்ட்ஸ்களை, நெருப்பில்லாமல் புகையாக, அடுப்பில்லாமல் கடாயாக, கடாயில்லாமல் வடையாகச் சுட்டுத் தள்ளிக்கொண்டே இருந்தேன்," என்று நகைச்சுவையாகப் பதிவிட்டுள்ளார்.
நெருப்பு நாற்காலி
மேலும், அவர், "அந்த நிகழ்ச்சியில், நடுவராக இருப்பது ஒரு பெரிய வித்தைதான். நெருப்பு நாற்காலியில், முள் கிரீடமணிந்து, இரண்டு பெண் நடுவர்களுக்கிடையே இருப்பது ஒரு பெரிய பொறுப்பாக இருந்தது," என்று கூறியுள்ளார். "அடுத்த எபிசோடில், பார்வையாளராக அமர்ந்து அங்கிருந்தபடியே கமெண்ட்ஸ் அடிக்கலாம் என்று இருக்கிறேன். உண்மையில், ரசிகர்களே சிறந்த நீதிபதிகள்," என்று பார்த்திபன் கூறியுள்ளார்.
'கூலி' Vs ரசிகர்கள்: "யார் யார் எவ்வளவு கூலி பெற்றிருந்தாலும், ரசிகர்கள் எவ்வளவு கூலி வழங்குவார்கள் என்றுதானே, ஆகஸ்ட் 14-க்கு பட உலகமே காத்திருக்கிறது!" என்று, அவர், ரஜினியின் 'கூலி' படம் பற்றியும், ரசிகர்களின் பங்கு பற்றியும் ஒரு சுவாரஸ்யமான கருத்தைப் பதிவிட்டுள்ளார்.
பார்த்திபனின் பேட்டி
பார்த்திபனின் பேச்சும், பேட்டிகளும், எப்போதும் ஒரு தனித்துவமான பாணியில் இருக்கும். அவரது 'வார்த்தை விளையாட்டு', ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்படும் ஒன்று. அவர் இயக்கிய படம், அவரது இந்தத் தனித்துவமான பாணிக்கு ஒரு உதாரணம். சமூக வலைதளங்களில், தன்னுடைய கருத்துக்களை, நகைச்சுவையுடனும், ஆழமான கருத்துக்களுடனும் பதிவிடுவதில், பார்த்திபன் ஒரு முன்னோடியாகத் திகழ்கிறார். பார்த்திபனின் இந்த நகைச்சுவையான பதிவு, 'சிங்கிள் பசங்க' நிகழ்ச்சிக்கும், ரஜினியின் 'கூலி' படத்திற்கும், ஒரு புதிய கவனத்தை ஈர்த்துள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications