கண்களில் ஏக்கத்தோடு சாந்தமாக மாறிய சிவாங்கி.. என்னாச்சினு பரிதவித்து போன ரசிகர்கள்
சென்னை : ஆற்றங்கரையில் அமைதியின் சொரூபமாக மாறிய சிவாங்கி யை பார்த்து ரசிகர்கள் ஷாக் அடைந்து விட்டார்கள்.
என்னாச்சு என்று தெரியவில்லை, என்றாலும் எப்போதுமே இவரை துரு துரு கேரக்டராக பார்த்து வந்த ரசிகர்கள் தற்போது மெல்லிய புன்னகையில் சாந்தம் தவழ பார்த்ததும் பலர் பீலிங்கை கொட்டுகிறார்கள்.
ஆற்றங்கரையோரத்தில் அழகு நிலாவாக சிவாங்கியை பார்த்ததும் பலர் ஆர்ப்பரித்து கொட்டும் கமெண்ட்டுகளால் இன்ஸ்டாகிராமே ஸ்தம்பித்து போய்விட்டது.

இப்படி பார்க்க முடியல
என்னமோ....என்ன மாயமோ தெரியலை முதல் முறையாக அமைதியின் சொரூபமாக மாறியிருக்கும் சிவாங்கியை பார்த்து பலர் இப்படித்தான் கமெண்டுகளை கொட்டுகிறார்கள். அப்படி என்னதான் மனக்கவலை ஏற்பட்டு இருக்கும் இப்படி ஏக்கமான பார்வையை பார்த்துக் கொண்டிருக்கிறாரே என்று பலர் ஏங்கிப் போய் கமெண்டுகளை போடுகிறார்கள். யாருக்கு எப்படியோ தெரியாது ஆனால் சிவாங்கிக்கு அவர் குழந்தைத்தனமாக துருதுருவென சேட்டைகளை செய்து கொண்டு இருப்பதுதான் அனைவருக்குமே பிடிக்கும். இவருடைய கேரக்டரை ரசிகர்கள் இவ்வளவு ரசிப்பதற்கு காரணமே இவருடைய குழந்தை மனசுதான்.யார் என்ன சொன்னாலும் கவலையில்லை என்று நெகட்டிவ் கமெண்டுகளை தள்ளிவிட்டு தானும் தனது திறமையை காட்டிக் கொண்டிருக்கும் சிவாங்கிக்கு ரசிகர்கள் அதிகம் தான்.

பாட்டில் கெட்டிக்காரி
இவர் விஜய் டிவியில் குழந்தை பாடகராக அறிமுகமாகி சூப்பர் சிங்கரில் பட்டையை கிளப்பி விட்டார். இந்த குழந்தைக்கு இவ்வளவு திறமையா? என்று பார்ப்பவர் எல்லாம் கூறிக் கொண்டிருந்தனர். அதுவும் இவருடைய குரலுக்கும் பாட்டுக்கும் சம்பந்தமே இல்லாத மாதிரி இவர் கலக்கி இருப்பதைப் பார்த்து பலர் அசந்து போயிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் ஒரு சிலர் இவரிடம் நேரிடையாக கேட்கவும் செய்திருக்கிறார்கள். இவருக்கு பாடும் போது மட்டும் அழகான வசீகரிக்கும் குரலாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இவருடைய பாட்டுக்கு பலர் அடிமைகளாகவே மாறிவிட்டனர். அந்த அளவிற்கு பாட்டினால் பலரையும் பரவசமடையச் செய்யும் திறமையை கைவசம் வைத்திருக்கிறார். அதனால்தான் இவர் எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் இவரிடம் ரசிகர்கள் பாட்டு பாட சொல்லியே கெஞ்சி வருகிறார்கள்.

வளர்ந்த குழந்தை
விஜய் டிவியில் ஒளிபரப்பான மற்றொரு நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக இவர் மீண்டும் காலடி எடுத்து வைத்ததும் இவருடைய ரசிகர்கள் ஆனந்தத்தில் குதிக்க ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு முன்பு வரைக்கும் இவருக்கு இருந்த ரசிகர்களை விடவும் இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு ரசிகர்கள் பலமடங்கு பெருகி விட்டார்கள். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இவர் அந்த அளவிருக்கு வாய் பேசியது இல்லை. இவர் பேசினாலும் ஒரு சில நேரங்களில் தான் பேசியிருக்கிறார். அதுவும் மா.கா பாவும் பிரியங்காவும் சேர்ந்து கலாய்த்து அடிக்கடி இவரை பேச வைக்க முயற்சி செய்வார்கள் ஆனாலும் இவரால் தெளிவாக பேச முடியாமல் இவர் திணறுவதை அழுவதை பார்த்து அனைவருமே அவரை கலாய்த்து தான் கொண்டிருந்தனர் ஆனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு இவர் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமாகிவிட்டார்

உண்மைய சொல்லுங்க பாஸ்
இந்த நிகழ்ச்சியில் இவர் அடிக்கடி அஸ்வினுடன் சேர்ந்து ஜாலியாக என்டர்டைன்மென்ட் பண்ணிக்கொண்டு இருப்பதைப் பார்க்கும்போது ரசிகர்களுக்கும் இவர்கள் இருவரும் உண்மையிலே காதலிக்கிறார்களா அல்லது கண்டன்டுக்காக இப்படி பேசிக் கொண்டிருக்கிறார்களா என்று பெரிய அளவில் யோசிக்கவே வைத்துவிட்டது. அதுமட்டுமல்லாமல் இவரும் அந்த நிகழ்ச்சியில் இவருடன் கன்டஸ்டன்ட்டாக களமிறங்கிய புகழும் ஒரு உண்மையான அண்ணன் தங்கச்சி ஆகவே மாறிவிட்டார்கள். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு தான் புகழுக்கும் பெரிய புகழ் கிடைத்திருந்தது. இந்த நிலையில் இவரும் அவருடன் சேர்ந்து கொண்டதால் இருவரும் அனைவருக்கும் பரிச்சயமான நபராக மாறி விட்டார்கள். இந்த நிகழ்ச்சியானது தற்போது முடிவடைந்து விட்டாலும் மீண்டும் எப்போது தொடங்குவார்கள் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். ஆனால் அடுத்த சீசனில் இவர் கலந்து கொள்வாரா இல்லையா என்பது கொஞ்சம் குழப்பமாகத்தான் இருக்கிறது.

வசீகரிக்கும் அழகு கண்கள்
ஏற்கனவே குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு சிவாங்கி பல புது பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் புகழுக்கும் திரைப்படங்களில் வாய்ப்பு வர இருவருமே சூட்டிங்கில் பிஸியாக மாறி விட்டார்கள். அதனால் இனி இந்த நிகழ்ச்சியில் தொடர்வாரா என்பது கேள்விக்குறிதான். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்றாலும் பரவாயில்லை அடிக்கடி சமூக வலைத்தளத்தில் போஸ்ட் போடுங்கள் என்று அவருடைய ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். ஆரம்பத்தில் இன்ஸ்டாகிராமில் பல போட்டோக்களை போட்டுக்கொண்டிருந்த சிவாங்கி தற்போது ஒரு சில நாட்களுக்குப் பிறகு இன்றுதான் போஸ்ட் போட்டு இருக்கிறார். இவருடைய போஸ்ட்டை பார்த்த ரசிகர்கள் குஷியாகி விட்டார்கள். யாருக்குமே பதில் அளிக்கவில்லை என்றாலும் ரசிகர்கள் தொடர்ந்து அன்பு மழை பொழிகிறார்கள். ஓணம் பண்டிகைக்கு பிறகு இவர் இன்றுதான் போஸ்ட் போட்டிருந்தாலும் வேற லெவலில் இருக்கிறது தலைவி என்று வாழ்த்துக்களை பொழியும் ரசிகர்கள் ஒருபுறம் என்றால் முகத்தில் எப்போதுமே தெரியும் அந்த ஸ்பெஷல் புன்னகையை காணவில்லையே என்று தேடும் ரசிகர்கள் ஒருபுறமும், கண்களில் ஏன் இந்த சோகம் என்று பாடும் ரசிகர்கள் இன்னொரு புறமும் கமெண்ட்டுகளில் கதக்களி ஆடுகின்றனர்.
-
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா












Click it and Unblock the Notifications