நடிகை அசினின் மறுபக்கத்தை காட்டும் போட்டோஸ்.. மகளுடன் இப்படியொரு வாழ்க்கை!
சென்னை: ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வந்த அசின் விஜய், சூர்யா, விக்ரம், கமல்ஹாசன் என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்ததோடு பாலிவுட்டிலும் அமீர்கான், சல்மான்கான் உள்ளிட்ட நட்சத்திரங்களுடன் நடித்து தனக்கான ஒரு இடத்தை பிடித்தார். ஆனால் சினிமாவில் பிஸியாக இருந்த காலத்திலேயே திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகி விட்டார்.
அதற்கு பிறகு பல வருஷங்களாக அசினை திரையில் பார்க்க முடியவில்லை. சோசியல் மீடியாக்களில் அவர் எந்த புகைப்படங்களையும் வெளியிடுவதில்லை. இதனால் அவர் எங்கே போனார்? என்ன ஆனார்? என்று எல்லோரும் தேடிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் தன்னுடைய மகள் அரினியின் சில புகைப்படங்களை பகிர்ந்திருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

நடிகை அசின் மகள் போட்டோஸ்
அசின் பகிர்ந்த போட்டோக்களில் அவருடைய மகள் ஆரஞ்சு நிற பட்டுப்பாவாடையில் ஓணம் கொண்டாட்டத்தில் அழகாக பூக்களை வைத்து அலங்கரித்துக் கொண்டிருக்கிறார். அவர் போடும் பூக்கோலம் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. ஒரு போட்டோவில் மலர்களுக்கு நடுவே அமர்ந்து லேப்டாப்பின் எதையோ பார்த்துக் கொண்டிருக்கிறார். மற்றொரு போட்டோவில் தரையில் அமர்ந்து பூ கோலம் போடும் காட்சிகள் இருக்கிறது.
இதனால் ரசிகர்கள் இந்த போட்டோக்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து அசினுக்கு இவ்வளவு பெரிய பொண்ணு இருக்காங்களா? இவங்க மகளை சமீபத்தில் வெளிய காட்டவே இல்லையே என்று சொல்லி வருகின்றனர். அதே நேரத்தில் இங்கே ஒரு சுவாரஸ்யமான விஷயம் இருக்கிறது. அசின் முதல் முறையாக மகளின் புகைப்படத்தை இப்போதுதான் வெளியிட்டார் என்று சொல்ல முடியாது. அசின் தனது மகள் புகைப்படங்களை ஏற்கனவே சில முறை பகிர்ந்து இருக்கிறார்.

அசின் குடும்ப புகைப்படம்
2018 ஆம் ஆண்டில் அரின் முதல் பிறந்த நாளை முன்னிட்டு அவரது புகைப்படத்தை வெளியிட்டார் அதற்கு பிறகு இப்போது அவருடைய மகளின் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இதனால் ஒருவேளை மகளும் சினிமாவுக்கு வரப்போகிறாரா? என்று சில கேள்விகள் எழுந்து வருகிறது. அசினின் சினிமா பயணம் மலையாளத்தில் தொடங்கியது.
அசினின் சினிமா வாழ்க்கை
2001 ஆம் ஆண்டு வெளியான நரேந்திரன் மகள் ஜெயகாந்தன் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதற்குப் பிறகு தமிழில் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து கஜினி, சிவகாசி, வரலாறு, தசாவதாரம், காவலன் என முன்னணி நடிகர்களுடன் நடித்துக் கொண்டிருந்தார். குறிப்பாக சூர்யாவுடன் நடித்த கஜினி திரைப்படம் அசினுக்கு மிகப்பெரிய ஒரு வெற்றியை கொடுத்தது.
குடும்ப வாழ்க்கை
அதே கதையின் இந்தி ரீமேக்கிலும் அமிர்தானுக்கு ஜோடியாக நடித்து ஹாலிவுட்டிலும் அறிமுகமானார். இப்படி சினிமாவில் பிஸியாக இருந்த நேரத்தில் 2016 ஆம் ஆண்டு தொழிலதிபர் ராகுல் சர்மாவை திருமணம் செய்து கொண்டார். மைக்ரோ மேக்ஸ் நிறுவனத்தில் இணை இயக்குனரான ராகுல் சர்மாவுக்கும் அசினுக்கும் பாலிவுட் நட்சத்திரம் அக்ஷய் குமார் மூலம் அறிமுகம் ஏற்பட்டதாக பின்னர் செய்திகள் வெளியானது. 2017 இந்த தம்பதிக்கு அனிரி என்ற பெண் குழந்தை பிறந்தது.
சமீப காலமாக எந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியிலோ அல்லது சினிமா சார்ந்த எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை என்பதால் அசின் மகளின் லேட்டஸ்ட் போட்டோ தான் இணையத்தை கலக்கி கொண்டு இருக்கிறது.


Click it and Unblock the Notifications
