இயற்கை உபாதைகள் போகும்போது கூட இயக்குனர் கேட்ட கேள்வி..! வேதனையை பகிர்ந்த பூவே உனக்காக சீரியல் நடிகை
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பூவே உனக்காக சீரியலில் கதாநாயகியாக நடித்து வந்த ராதிகா ப்ரீத்தி, தான் எதனால் அந்த சீரியலில் இருந்து விலகினேன் என்பது பற்றி பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.
நடிகர் அசீமோடு ராதிகா ப்ரீத்திக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகத்தான் அவர் விலகி விட்டார் என்று பல்வேறு செய்திகள் பரவி வந்த நிலையில் அதை ராதிகா ப்ரீத்தி மறுத்திருக்கிறார்.

அதுபோல தனக்கு சீரியல் இயக்குனர் தரப்பில் இருந்து என்னவெல்லாம் பிரச்சனைகள் நடந்தது என்பது பற்றியும் அதில் பிரித்தி பேசியிருக்கிறார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பூவே உனக்காக சீரியல் ரசிகர்களின் மத்தியில் பிரபலம் அடைந்தது தான். இந்த சீரியலில் கதாநாயகியாக ராதிகா பிரித்தி நடித்து வந்தார். கதாநாயகனாக அசீம் நடித்து வந்தார். கிட்டத்தட்ட 460 எபிசோடுகளாக இந்த சீரியலில் ராதிகா ப்ரீத்தி கதாநாயகியாக நடித்து வந்தார். ஆனால் திடீரென்று அந்த சீரியலில் இருந்து விலகி இருந்தார்.
ஆனால் அதற்கு காரணம் கதாநாயகனாக நடித்து வந்த அசீம் தான் என்றும், இருவருக்கும் ஷூட்டிங் ஸ்பாட்டில் சண்டை ஏற்பட்டது என்றும் அதனால் தான் அவர் விலகி விட்டார் என்றும் பல கதைகள் பரவி வந்தது. குறிப்பாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் அசீம் இருக்கும்போது கூட இது பற்றி பலர் பேசிக் கொண்டிருந்தனர். ஆனால் அது பற்றிய ராதிகா ப்ரீத்தி மறுத்து பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.
அதில் எனக்கும் அசீமிற்க்கும் சண்டை என்ற செய்திகள் வலம் வந்தது. ஆனால் அது என் நண்பர்களுக்குள் வரும் சண்டை போன்று தான். அப்போதும் நடந்தது. ஆனால் அது எங்களுக்கு பிரச்சனையே கிடையாது. நிஜமான பிரச்சனை எனக்கும் தயாரிப்பு குழுவிற்க்கும் தான் நடந்தது. கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளாக எனக்கு சம்பளமே கொடுக்காமல் நடிக்க வைத்தார்கள்.

ஆரம்பத்தில் அந்த சீரியல் ஒளிபரப்பான பிறகு தான் நமக்கு பணம் வரும் அதுவரைக்கும் காத்திருக்க வேண்டும் என்று கூறினார்கள். அதற்கு பிறகு எப்பவாவது பத்தாயிரம், 20 ஆயிரம் என்று கொடுத்தார்கள். அதெல்லாம் தாண்டி சூட்டிங் ஸ்பாட்டில் எனக்கு நேர்ந்த அசவுகரியங்கள் தான் நான் சீரியலை விட்டு விலகுவதற்கு முக்கிய காரணம். சூட்டிங் ஸ்பாட்டில் ஒரு ஃபார்ச்சூனர் காரில் 10 பேரை ஏற்றிக் கொண்டு போவார்கள்.
சில நாட்களில் அதிகாலையிலேயே சூட்டிங் இருக்கும் என்று சொல்வார்கள். நாங்களும் கிளம்பி போனால் அங்கே யாருமே இருக்க மாட்டார்கள். நாங்கள் தான் முதல் ஆளாக போய் நிற்க வேண்டும். நிறைய நாட்கள் உள்ளே போய் கரண்ட் இல்லாமல் எதுவுமே இல்லாமல் அந்த இடத்தில் காத்துக் கிடந்து இருக்கோம்.
அதுமட்டுமல்லாமல் டாய்லெட் போக வேண்டும் என்றால் கூட நாங்கள் இயக்குனரிடம் அனுமதி வாங்கிக் கொண்டுதான் போக வேண்டும். அங்கு ஆண்கள், பெண்கள் என இருவருக்கும் ஒரே கழிவறை தான். அதில் சிறிது நேரம் ஆகிவிட்டால் சிறுநீர் கழிக்க எவ்வளவு நேரம் என்று மைக்கில் அனைவரும் காதில் படும்படி கேட்பார்கள். இந்த மாதிரி தர்ம சங்கடமான சூழ்நிலைகளை நான் அனுபவித்திருந்தேன். எத்தனையோ நாட்கள் நான் பொறுமையாக இருந்து பிறகு ஒரு கட்டத்தில் என்னால் தாக்கு பிடிக்க முடியாமல் தான் நான் அங்கிருந்து விலகி விட்டேன் என்று அந்த பேட்டியில் நடிகை ராதிகா ப்ரீத்தி பேசியிருக்கிறார்.
-
Bharathiraja: "கூட இருப்பவர்களையே நம்ப முடியாது..." ரசிகர்களை கலங்க வைக்கும் பாரதிராஜாவின் கடைசி பேட்டி -
"குடும்ப வாழ்க்கை” மொத்த சர்ச்சைகளுக்கும் போல்டாக முற்றுப்புள்ளி வைத்த நடிகை சுகன்யா.. பாராட்டும் ரசிகர்கள் -
திரிஷா பிரண்ட் நடிகை சார்மியோட மட்டும் ஃப்ரெண்ட்ஷிப் வச்சுக்காதீங்க! எச்சரித்த விஜய் சேதுபதி! பின்னணி காரணம் -
Bharathiraja: இறப்பதற்கு முன் பாரதிராஜா கூறிய கடைசி ஆசை? ரசிகர்களை கலங்க வைக்கும் நினைவுகள்! -
பாரதிராஜா, இளையராஜா வாழ்க்கையில் நடந்த "ஒரே” துயரம்.. நம்பிக்கை நாயகனுக்கு இப்படியா நடக்கணும்! -
உடைந்த பாரதிராஜா.. மகன் மனோஜ்ஜை மறக்க முடியாமல் தேம்பி தேம்பி அழுது, புத்திர சோகத்தாலேயே போன உயிர் -
"29 வயசுல உங்களுக்கு இந்த ஃபீலிங் வந்திருக்கா? Netflix-ல் டிரெண்டாகும் ‘29’ படம் ஏன் இளைஞர்களின் மனசை கலக்குது!" -
பாரதிராஜாவுக்கு திடீர் உடல்நலக் குறைவு.. தீவிர மருத்துவ கண்காணிப்பு! இமய இயக்குனருக்கு என்ன ஆச்சு -
மன்னிப்பு கேட்டும் ஓயாத சர்ச்சை... ரவி மோகனுக்கு என்ன ஆச்சு? நீதிமன்றத்துக்கு தெரியாதா? பிரபலம் கேள்வி -
100ஐ தொடாமல் போன சூப்பர் குட் பிலிம்ஸ் RB சௌத்ரி.. காற்றில் கரைந்த ரியல் ஜென்டில்மேனின் கடைசி ஆசை -
கடைசியில யாருமே இல்லாம போயிட்டீங்க இல்ல? இப்படி அனாதையா.. பாரதிராஜா உடலை கண்டு கதறிய கங்கை அமரன் -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன்












Click it and Unblock the Notifications