Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பொட்டு அம்மன் படத்தில் வில்லனாக நடிச்சதால பாதிப்பு.. கே.ஆர்.விஜயா அப்படி கேட்டாங்க! நடிகர் ஓபன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 90ஸ் கிட்ஸ்களை மிரட்டிய பொட்டு அம்மன் திரைப்படத்தில் வில்லனாக நடித்த நடிகர் சுரேஷ் கிருஷ்ணா அந்த திரைப்படத்தில் நடிக்கும் போது தனக்கு ஏற்பட்ட அனுபவம் குறித்து தற்போது பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். இது இணையத்தில் பலருடைய கருத்துக்களை பெற்று வருகிறது. அந்த திரைப்படத்தில் வில்லனாக பலரையும் மிரட்டும் வகையில் நடித்த சுரேஷ் கிருஷ்ணா நிஜத்தில் ஹீரோ போல இப்போதும் ஜொலிக்கிறார்.

பொட்டு அம்மன் திரைப்படத்தில் வில்லனாக நடித்து மக்களை மிரள வைத்த நடிகரின் புகைப்படம் மற்றும் வீடியோ தான் சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது. பொதுவாக சினிமாவில் நடிக்கும் வில்லன்களை பார்த்தால் பலருக்கும் கோபமும், வெறுப்பும் வரும். ஒரு சில நடிகர்களை பார்த்தால் தான் பயம் வரும். அவர்களை பயங்கரமாக திட்டுவார்கள்.

pottu amman movie

இப்போதெல்லாம் பல பேய் படங்கள் வந்து கொண்டே இருக்கிறது. ஹாரர் திரைப்படங்கள் அதிகமாக ரிலீஸ் ஆகி கொண்டிருக்கிறது. ஆனால் 90s காலகட்டத்தில் ஒரு சில திரைப்படங்கள் வெளியானாலும் அது பார்க்கும் ரசிகர்களை மிரள வைத்து விடும். அந்த திரைப்படங்களில் நடித்த நடிகர்களை ரசிகர்களால் மறக்க முடியாது. அந்த வகையில் ஒருவர் தான் பொட்டு அம்மன் திரைப்படத்தில் வரும் வில்லனும். இவரைப் பார்த்தால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பயந்து போய் விடுவார்கள்.

pottu amman movie

அந்த திரைப்படத்தில் ரோஜாவின் குழந்தையை கொலை செய்வதற்காக கொடூரமான உருவத்தோடு நடித்து இருப்பார். அதற்குப் பிறகு அந்த வில்லனுக்கும் கடவுளுக்கும் நடக்கும் போராட்டம் அந்த திரைப்படத்தில் பலரையும் மிரள வைத்திருக்கும். அந்த திரைப்படத்தில் தன்னுடைய கொடூரமான உருவத்தாலும் நடிப்பாலும் 90 கிட்ஸ்களை அதிகமாக பயம் காட்டியவரின் பெயர் சுரேஷ் கிருஷ்ணா. இவர் நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளரவும் இருக்கிறார்.

pottu amman movie

பொட்டு அம்மன் திரைப்படத்தில் கே ஆர் விஜயா, ரோஜா, சுவலட்சுமி, வேணு மணிவண்ணன் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த பட்டத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் சுரேஷ் கிருஷ்ணா மிரட்டி இருப்பார். இவர் மலையாளத்தில் மிகப்பெரிய நடிகர் ஆனாலும் தமிழில் பொட்டு அம்மன் படத்தின் மூலம்தான் வில்லனாக பிரபலமடைந்தார். திரைப்படங்களில் மட்டுமல்லாமல் சீரியல்களிலும் நடித்திருக்கிறார். இந்த நிலையில் பல வருடங்கள் கழித்து இப்போது இவர் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.

இந்த வீடியோவை பார்த்ததும் இவரா அவர் என்று ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்கள். அதோடு இவரைப் பார்த்தா நாம பயந்தோம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் சுரேஷ் கிருஷ்ணா பேசுகையில், நான் பொட்டு அம்மன் திரைப்படத்தில் நடிப்பதற்காக தேர்வு ஆனபிறகு அந்த திரைப்படத்தில் போட்டு இருந்த மேக்கப் அதிகமான விஷயங்கள் நானே எனக்கு போட்டுக் கொண்டதுதான். என் கண்களுக்கு கீழே டிஷ்யூ பேப்பர் போட்டு அதற்கு மேலே மேக்கப் செய்திருப்பேன்.

ஒரு வாரத்திற்கு பிறகு என்னுடைய கண் பக்கத்தில் இருந்த தோல் எல்லாம் உலர்ந்து போய் எனக்கு கண்களில் இருந்து தண்ணீர் வர தொடங்கிவிட்டது. டாக்டரிடம் செக் பண்ண போகும் போது அவர் என்னை ரொம்பவே திட்டி விட்டார். கண்ணு ரொம்ப முக்கியம் படத்திற்காகவே இப்படி கண்ணை போட்டு பாடாயப்படுத்தி வைத்திருக்கீங்க என்று திட்டி இருந்தார். அதற்குப் பிறகும் அந்த படம் முழுக்க நான் அப்படித்தான் நடித்திருந்தேன்.

pottu amman movie

ஆனால் அவ்வளவு கஷ்டப்பட்டதால் தான் அந்த படம் வெளியாகி 30 வருடம் ஆகிவிட்டாலும் இப்போதும் என்னை ரசிகர்கள் நினைவில் வைத்திருக்கிறார்கள். அதுபோல அந்த படத்தில் நான் கே.ஆர் விஜயாவிற்கு கணவராக நடித்திருப்பேன். அவரே அதுபற்றி நீ என்னுடைய வயதில் பாதி தான் இருப்ப. நீ எனக்கு கணவரா நடிச்சிருக்கிற. என்னுடைய சினிமா வாழ்க்கையில் நீ தான் முதல் முதலில் என்னோட வயது குறைவாக இருந்தாலும் எனக்கு கணவராக நடித்தது என்று சொல்லியிருந்தார். அந்த படத்திற்காக என்னுடைய உடல் அமைப்பை மாற்றி நடித்திருந்தேன். நான்தான் அந்த கேரக்டரில் நடித்தது என்று சொன்னால் பலர் நம்ப மாட்டார்கள் என்று சுரேஷ் கிருஷ்ணா அந்த பேட்டியில் பேசியிருக்கிறார்.

நீங்கள் பொட்டு அம்மன் திரைப்படம் பார்த்திருக்கிறீர்களா? அதில் வில்லனை உங்களுக்கு நினைவிருக்கிறதா? அவர்தான் இந்த சுரேஷ் கிருஷ்ணா என்று உங்களால் நம்ப முடிகிறதா? கமெண்ட் தட்டி விடுங்க..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+