மகன்களின் வாழ்க்கை! பிரபுதேவா இப்படிப்பட்டவர் தான்..டைவர்ஸ்க்கு பிறகு மனம் திறந்து பேசிய முதல் மனைவி
சென்னை: டான்ஸ் மாஸ்டர் ஆகவும் நடிகராகவும் பிரபலம் அடைந்த பிரபுதேவாவின் முன்னாள் மனைவி பிரபுதேவா பற்றி பல விஷயங்களை தனியார் youtube சேனலில் பகிர்ந்து இருக்கிறார். விவாகரத்துக்கு பிறகு பிரபுதேவா எப்படி நடந்து கொள்கிறார் என்றும் தன்னுடைய இரண்டு மகன்கள் குறித்தும் வெளிப்படையாக பேசுகிறார்.
பொதுவாக சினிமா மற்றும் சீரியல் என பலவற்றில் ஒன்றாக வேலை செய்பவர்கள் காதலித்து திருமணம் செய்திருக்கிறார்கள். ஆனால் ஒரு சிலர்தான் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியாக பயணித்து வருகிறார்கள். ஒரு சிலர் கருத்து வேறுபாடு காரணமாக பாதியிலேயே விவாகரத்து வாங்கிவிட்டு பிரிந்து விடுகிறார்கள். அதுபோல பலருக்கும் பரிச்சயமான நடிகர் பிரபுதேவாவும் முதல் மனைவியை விவாகரத்து செய்திருந்தார்.

பிரிந்த காதல்
பிரபுதேவாவை நடிகராக பலருக்கும் தெரிந்திருக்கும், டான்ஸ் மாஸ்டராகவும் பலருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் அவர் ஒரு இயக்குனர் என்பது ஒரு சிலருக்கு தான் தெரிந்திருக்கும் தான். ஆரம்பத்தில் குரூப் டான்சராக இருந்து பிறகு டான்ஸ் மாஸ்டராகவும், நடிகர் இயக்குனர் என்று பல முகங்களை கொண்ட பிரபுதேவா தன்னுடன் நீ குரூப் டான்ஸ் ஆக இருந்த ரமலன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
மதம் மாறி திருமணம்
ரமலான் பிரபுதேவாவிற்காக இந்து மதத்திற்கு மாறி திருமணம் செய்து இருந்தார். இந்த தம்பதிக்கு மூன்று ஆண் குழந்தைகள் இருந்தனர். அதில் மூத்த மகன் 15 வருடங்களுக்கு முன்பு உடல்நிலை குறைவால் காலமானார். பிறகு இரண்டு மகன்களையும் பிரபுதேவா பாதுகாத்து வளர்த்து வருகிறார். அதுபோல வில்லு படத்தை பிரபு தேவா இயக்கிய போது அந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த நயன்தாராவோடு பிரபுதேவாவுக்கு காதல் ஏற்பட்டது.
நயன்தாராவோடு பிரிவு
அந்த நேரத்தில் பிரபுதேவாவின் பெயரை நயன்தாரா தன்னுடைய கையில் டாட்டூ போட்டு இருந்தார். அது பெரிய அளவில் பேசப்பட்டது. பல நிகழ்ச்சிகளிலும் இவர்கள் இருவரும் சேர்ந்து கலந்து கொண்டனர். அந்த நேரத்தில் பிரபுதேவா தன்னுடைய முதல் மனைவியை விவாகரத்து செய்து இருந்தார். அதற்குப் பிறகு சில வருடங்களிலேயே நயன்தாராவோடு பிரச்சனை ஏற்பட அவர் பிரிந்து விட்டார்.
காதல் திருமணம்
அதற்கு பிறகு வேறொரு பெண்ணை பிரபுதேவா திருமணம் செய்திருந்தார். அந்த பெண்ணுக்கு சமீபத்தில் தான் ஒரு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. இந்த நிலையில் பிரபுதேவாவின் முதல் மனைவி ரமலத் தனியார் youtube சேனல் ஒன்றில் பிரபுதேவா குறித்து வெளிப்படையாக பேசி இருந்தார். அதில் அவர் பேசுகையில் நானும் பிரபுதேவாவும் காதலித்து தான் திருமணம் செய்து கொண்டோம்.
குடும்பத்தின் மீது அக்கறை
எங்களுக்கு மூன்று ஆண் குழந்தைகள் பிறந்தார்கள். அதில் மூத்த மகன் மீது நாங்கள் ரொம்பவும் பாசமாக இருந்தோம். ஆனால் அவர் எங்களை விட்டு பிரிந்து விட்டார். அதற்குப் பிறகு இரண்டு குழந்தைகளையும் பிரபு தேவா நன்றாக தான் வளர்த்து வருகிறார். எங்களுக்குள் விவாகரத்து நடந்து விட்டது, விவாகரத்துக்கு பிறகும் பிரபுதேவா குழந்தைகளை நன்றாக கவனித்துக் கொள்கிறார்.
முதல் மகன் நடிகர்
என்னிடமும் பேசிக்கொண்டு தான் இருக்கிறார். எது நடந்திருந்தாலும் எங்களுக்கு துணையாக பிரபுதேவா தான் இருக்கிறார். எந்த விஷயமாக இருந்தாலும் எங்களுக்கு தான் முதலில் சொல்வார். சமீபத்தில் கூட எங்களுடைய மகனும் பிரபுதேவாவும் டான்ஸ் ஆடியது பெரிய அளவில் பேசப்பட்டது. பிரபுதேவாவின் மகன் அவரைப் போலவே டான்ஸ் ஆடுகிறார் என்று பலரும் பாராட்டி இருந்தனர். எப்படி இருந்தாலும் அவருடைய அப்பாவின் ரத்தம் தானே மகனுக்கும் இருக்கும் அதனால் அவர் டான்ஸ் ஆடுவதில் பெரிய அதிசயம் எதுவும் இல்லை.
இரண்டாவது மகன் மருத்துவர்
கடந்த இரண்டு வருடங்களாகத்தான் என்னுடைய மகன் டான்ஸ் கற்றுக் கொண்டிருக்கிறார். அதுபோல என்னுடைய மகனுக்கு படங்களில் நடிக்கவும் அதிக வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. அதற்கு சரியான நேரம் வரும்போது அவரும் சினிமாவில் அறிமுகம் ஆவார். ஆனால் இரண்டாவது மகனுக்கு சினிமாவில் வருவது பிடிக்கவில்லை. அவருக்கு மருத்துவராக தான் பிடித்திருக்கிறது. அதற்காகத்தான் படித்துக் கொண்டிருக்கிறார்.

குறை எதுவும் இல்லை
பிரபுதேவா பற்றி நான் எந்த இடத்திலும் குறை கூற மாட்டேன். அவரும் என்னைப் பற்றி எந்த இடத்திலும் தவறாக பேசியது இல்லை. விவாகரத்து ஆன பிறகும் பெண்கள் குடும்பத்தை பிரபு தேவா தான் கவனித்து வருகிறார். இப்படி இருக்கும்போது நாங்கள் எதற்காக அவரைப் பற்றி குறை சொல்ல வேண்டும் என்று அந்த பேட்டியில் பிரபுதேவாவின் முன்னாள் மனைவி பேசியிருக்கிறார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications