பிரபு கிட்ட பொறுப்பு.. சிவாஜி கணேசன் அன்னை இல்லம் வாசலில் மகிழ்ச்சியோடு கட்டிய விநாயகர் கோயில்.. செம

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை: அன்னை இல்லம் ஜப்திதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.. வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய கோரி நடிகர் பிரபு தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை, நேற்றைய தினம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருக்கிறார் நீதிபதி. இந்நிலையில், அன்னை இல்லம் வீட்டின் வாசலில் உள்ள பிள்ளையார் கோயில் பற்றின சிறப்புகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அந்தவகையில், சமீபத்தில் பிரபல தயாரிப்பாளர் முக்தா ரவி, தன்னுடைய பேட்டியில், இந்த கோயில் பற்றி பேசியிருக்கிறார்.

அன்னை இல்லம் வீட்டிற்குள் எப்போதுமே பளபளப்பாக இருக்கும்.. தரையில் லேசாக அழுக்கு இருந்தாலும், உடனே அதை சிவாஜி சுத்தம் செய்ய சொல்வாராம்.. சிவாஜியின் பிறந்த நாளின்போது, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வீட்டுக்கு வருவார்கள். அன்றைக்கு மட்டும் வீட்டுக்குள் ரசிகர்கள் அன்னை இல்லத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

Television Annai Illam Sivaji Ganesan

அதேபோல, சிவாஜி வீட்டின் முன்பு இருக்கும் சிறிய பிள்ளையார் கோயிலும் அன்னை இல்லம் போலவே பிரபலமானது.. இதுகுறித்து Wow Tamizhaa யூடியூப் சேனலுக்கு சமீபத்தில் பேட்டி தந்திருந்த பிரபல தயாரிப்பாளர் முக்தா ரவி, இந்த கோயில் பற்றியும், நடிகர் திலகத்தின் கடவுள் பக்தி குறித்தும் கூறியிருந்தார்.

சிறந்த பக்திமான்

நடிகர் திலகத்துக்கு எப்போதுமே கடவுள் பக்தி.. கமலா அம்மாவுக்கும் பக்தி அதிகம்.. பட்டையாக விபூதி வைத்து கொண்டுதான் வெளியே கிளம்புவார்.. அதேபோல அவர் மேக்கப் போடும்போதுகூட, நெற்றியில் ஒரு பொட்டு வைத்து கொண்டு, 2 நிமிடம் கடவுளை வேண்டிய பிறகுதான், மேக்கப் போடுவார்.. சபரிமலைக்கு போவார். திருப்பதிக்கும் செல்வார்..

அதேபோல, நிறைய கோயில்களுக்கு உதவிகளை செய்திருக்கிறார்.. மாங்காடு, திருவேற்காடு கோயில்களுக்கு உதவியிருக்கிறார் நடிகர் திலகம்.. குருவாயூர், இலங்கை கோயில்களுக்கு நிறைய யானைகளை வழங்கியிருக்கிறார்..

அன்னை இல்லம் வாசலில் கோயில்

1960-க்கு முன்பு அன்னை இல்லம் வீட்டு வாசலிலேயே பிள்ளையார் கோயில் கட்டினார் சிவாஜி கணேசன்.. இது மிகவும் சக்தி வாய்ந்த கோயில்.. இன்று வரை இங்கு பூஜை நடக்கிறது..

எங்களது முக்தா பிலிம்ஸின் வெற்றிக்கு காரணமே இந்த பிள்ளையாரின் அனுக்கிரகம்தான்.. 1960களிலிருந்தே இந்த கோயிலுக்கு எங்கள் குடும்பத்தினர் வருவது வழக்கமாகும்.. ஒவ்வொரு படத்தின் ரிலீஸுக்கு முன்பும் கொழுக்கட்டை, நைவேத்தியம், செய்து வணங்கிவிட்டு செல்வோம். அதேபோல, படத்தின் 100வது நாளுக்கும் கொழுக்கட்டை செய்து பிரார்த்திவிட்டு போவோம்.

சக்திவாய்ந்த பிள்ளையார் கோயில்

பிள்ளைகள் பரீட்சைகள் சென்றாலோ, அல்லது வீட்டில் திருமணம் என்றாலோ அனைவருமே இங்குவந்துதான் வேண்டிக் கொள்வோம் நாங்கள் மட்டுமல்ல, நடிகர் சிவக்குமார் குடும்பம், சங்கர் கணேஷ், பானுமதி, டான்ஸ் மாஸ்டர் சோப்ரா, குட்டி பத்மினி என பலரும் இந்த கோயிலுக்கு வருவார்கள்.. ஜெயசுதா தினமும் இங்குதான் வருவார்.

மனோபாலா இந்த சாலை வழியாகத்தான் செல்வார்.. அதனால், நின்று பிள்ளையாரை வணங்கிவிட்டே செல்வார்.. மனோரமா தன்னுடைய வீட்டிலிருந்து வேறு வழியாக சென்றாலும், சிவாஜி வீட்டு வாசலில் உள்ள பிள்ளையாரை வணங்கிவிட்டுத்தான் செல்வார்.

ஒவ்வொரு முறை சிவாஜி சார் ஷூட்டிங் போகும்போதும் இந்த பிள்ளையாரை வணங்ங்கிவிட்டு செல்வார்.. சிவாஜி படங்களுக்கும் இங்குதான் பூஜை நடக்கும்.. 2010-ல் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.. தற்போதும்கூட நடிகர் திலகம் குடும்பத்தினர்தான் இந்த கோயிலை பராமரித்து வருகின்றனர்" என்று தெரிவித்திருக்கிறார்.

கும்பாபிஷேகம் - சிறப்பு

60 வருடங்களுக்கு முன்பு, தன்னுடைய சகோதரர்களுடன் சேர்ந்து இந்த கோயிலை சிவாஜி கணேசன் கட்டியிருந்தார்.. பிறகு இந்த பிள்ளையார் கோவிலை நடிகர் பிரபு புதுப்பித்து கட்டினார்.. பக்தர்கள் சுற்றி வந்து கும்பிடுவதற்கு வசதியாக தன்னுடைய வீட்டின் முன் பகுதி தோட்டத்தில் இருந்து கொஞ்சம் இடமும் ஒதுக்கியுள்ளார். இதற்கு கோபுரமும் கட்டப்பட்டு உள்ளது. கடந்த 2010-ல் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றபோது, ரஜினி, அஜித், மனோரமா என பலரும் வந்திருந்தது சிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+