Prathichaya Review : அரசியலின் “கபட” நாடகத்தை காட்டிய, நிவின்பாலியின் பிரதிச்சாயா எப்படி இருக்கு? ஹானஸ்ட் ரிவ்யூ

Subscribe to Oneindia Tamil

சென்னை: மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் நிவின் பாலி நடித்த அரசியல் த்ரில்லர் திரைப்படமான "பிரதிச்சாயா" தற்போது ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. தற்போதைய அரசியல் சூழ்நிலையையும், பிரபலமான அரசியல் தலைவர்களின் குடும்பத்திற்குள் நடக்கும் பிரச்சனையையும் படத்தில் காட்டி இருக்கின்றனர். இந்த படம் எப்படி இருக்கிறது என்று விரிவாக பார்க்கலாம்.

Prathichaya Nivin Pauly Malayalam Cinema Political Thriller Movie Review OTT Release

அரசியல் பின்னணி கதை

இந்த படத்தை இயக்கியவர் பி. உன்னிகிருஷ்ணன். கேரளாவின் தற்போதைய அரசியல் சூழலை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு பெண்ணின் பாலியல் குற்றச்சாட்டால் களங்கமடைந்த ஒரு முதலமைச்சரின் கௌரவத்தை மீட்டெடுக்க அவரது மகன் எடுக்கும் முயற்சிகளே கதையின் மையம். டிஜிட்டல் மீடியா மற்றும் அரசியல் பிம்பம் எப்படி ஒருவரின் வாழ்க்கையை மாற்றுகிறது என்பதையும் படம் ஸ்ட்ராங்காக காட்டுகிறது.

நிவின் பாலி, ஜான் வர்கீஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தந்தையின் இமேஜை மீட்டெடுக்க அவர் எடுக்கும் முடிவுகள், அரசியல் யுக்திகள் மற்றும் அதனால் உருவாகும் பிரச்சனைகள் கதையை நகர்த்துகின்றன. மூத்த நடிகர் பாலச்சந்திர மேனன் முதலமைச்சராக நடித்துள்ளார். இவர்களுடன் ஷரஃப் யூதீன், சாய் குமார், ஹரிஸ்ரீ அசோகன், ஆன் அகஸ்டின், நீது கிருஷ்ணா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

Prathichaya Nivin Pauly Malayalam Cinema Political Thriller Movie Review OTT Release

படத்தின் கதை

அதாவது இந்த படத்தின் கதை என்னவென்றால் கேரளாவின் முதலமைச்சர் மக்கள் மத்தியில் நல்ல செல்வாக்காக இருக்கிறார். அவருக்கு எதிராக ஒரு வழக்கு நடக்கிறது அந்த வழக்கிலும் அவர் வெற்றி பெறுகிறார். அந்த சந்தோஷத்தில் அவர் ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் விவாதத்துக்கு போகிறார். போன இடத்தில் ஆரம்பத்தில் அவரிடம் அங்கு நல்லபடியாக பேசுகிறார்கள் பிறகு அந்த முதலமைச்சர் மீது ஒரு பெண் பாலியல் குற்றச்சாட்டு சொன்ன வீடியோவை நேரடி லைவில் வெளியிடுகின்றனர்.

இதனால் முதலமைச்சர் மீது அதுவரைக்கும் மரியாதையாக இருந்த மக்கள் அவர் மீது கல்லை எடுத்து எரிகிற அளவுக்கு வெறுப்பை காட்டுகின்றனர். இந்த வருத்தத்தோடு வீட்டிற்கு வந்த முதலமைச்சரிடம் தன்னுடைய பேத்தி கேட்ட கேள்வியால் மனதுடைந்து தூக்கத்திலேயே உயிர் பிரிகிறது. ஆனால் தன்னுடைய அப்பா மீது விழுந்த கலங்கத்தை துடைக்க வேண்டும் என்பதற்காக அவருடைய இரண்டாவது மகன் குடும்பத்தின் எதிர்ப்பையும், கட்சியில் இருப்பவர்களின் எதிர்ப்பையும் மீறி சில சூழ்ச்சிகள் செய்து முதலமைச்சர் ஆகிறார். அதற்குப் பிறகு அவருடைய தந்தையின் மீது விழுந்த பழியையும் துடைக்கிறாரா இல்லையா என்பது தான் கதை.

Prathichaya Nivin Pauly Malayalam Cinema Political Thriller Movie Review OTT Release

படத்தின் குறைகள்

ஆனால் சில இடங்களில் லாஜிக் மிஸ்டேக் இருக்கிறது. அதிலும் முதலமைச்சர் மீது பாலியல் குற்றச்சாட்டு சொன்னதும் மொத்த ஊரும் அவருக்கு எதிராக கொந்தளிக்கிறது. அவருக்கு தலையில் அடிபட்டு வீட்டிற்கு வருகிறார். ஆனால் அப்போது நடக்கும் சம்பவங்களை பார்க்கும்போது ஏதோ சீரியலில் ஸ்லோ மோஷனில் நடக்கும் செண்டிமெண்ட் காட்சிகள் போல இருக்கிறது. அது மட்டுமல்லாமல் படத்தின் ஆரம்பத்தில் இருந்தே ஹீரோவின் அப்பா இறந்து விடுவார் என்பதை காட்டும் வகையிலேயே பல குறியீடுகளும், டயலாக்குகளும் இருக்கிறது. இதனால் அடுத்து இதுதான் நடக்கப்போகிறது என்று ஈஸியாக யூகிக்க முடிந்து விடுகிறது.

Prathichaya Nivin Pauly Malayalam Cinema Political Thriller Movie Review OTT Release

படத்தின் பிளஸ், மைனஸ்

நிவின் பாலியின் நடிப்பு கேரக்டருக்கு உயிர் கொடுக்கிறது. குறிப்பாக, தந்தை-மகன் உறவை மையமாகக் கொண்ட காட்சிகள் படத்தின் பலம். அதுபோல திடீர் சாமின்னு பலர் உருவாகிறது போல ஹீரோவுக்கு அரசியலை பத்தி இன்ட்ரஸ்ட் இல்லா விட்டாலும் அம்மாவின் ஆசைக்காக திடீர் முதலமைச்சர் ஆகிறார். ஆனாலும் அந்த பதவிக்கு தகுந்த அறிவுடன் அவர் எதிரிகளின் சூழ்ச்சிகளை கண்டுபிடிப்பது சூப்பராக இருந்தது.

அதேசமயம், கதைக்களம் புதுமையாக இல்லாமல் பழக்கப்பட்ட மாதிரியும், திரைக்கதை வேகம் குறைவாக இருப்பது போன்று பல இடங்களில் பீல் பண்ண வைக்கிறது. அதுபோல ஆரம்பத்தில் எதிரிகளை மிரட்டலான வில்லனாக காட்டிவிட்டு, கடைசியில் டம்மி பீஸ் ஆக மாற்றி விட்டார்கள். வில்லன் கேரக்டரை இன்னும் கொஞ்சம் பெட்டராக கொடுத்திருந்தால் படம் விறுவிறுப்பாக இருந்திருக்கும்.

இந்த திரைப்படம் கடந்த மார்ச் 26, 2026 அன்று திரையரங்குகளில் வெளியானது. ஏப்ரல் 24, 2026 முதல் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் "பிரதிச்சாயா" ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. திரையரங்குகளில் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாத இப்படம், ஓடிடியில் புதிய உயிர் பெறும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக அரசியல் த்ரில்லர் வகை படங்களுக்கு ஓடிடி ரசிகர்கள் அதிகம் இருப்பதால், "பிரதிச்சாயா" அந்த வகையில் தன் ரசிகர்களை அடையும்.

மொத்தத்தில், "பிரதிச்சாயா" ஒரு அரசியல் பின்னணியுடன் கூடிய குடும்ப உணர்வுகளையும் இணைக்கும் திரைப்படமாக அமைந்துள்ளது. திரையரங்குகளில் தவறவிட்டவர்கள், தற்போது ஓடிடியில் இந்தப் படத்தை தாராளமாக பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+