விஜய் டிவியில் இருந்து வெளிவந்தது இதனால் தான்.. முதல் முறை மனம் திறந்த டிடி.. பலருடைய வலி இதுதானாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் அதிகமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த தொகுப்பாளர் டிடி சமீபத்தில் தான் எதனால் விஜய் டிவியில் இருந்து வெளியேறினேன் என்று பேசியிருக்கிறார்.

அதில் தான் ஒரு தொகுப்பாளராக இருந்தாலும் தன்னைப்போல தொகுப்பாளராக இருப்பவர்கள் பலருடைய சார்பாகவும் டிடி பேசி இருக்கிறார்.

Presenter DD has recently spoken about why she left Vijay TV

அதோடு தொகுப்பாளராக தான் பெற்ற சந்தோஷங்கள் மற்றும் கஷ்டங்கள் குறித்தும் அந்த பேட்டியில் பேசியிருக்கிறார். அதை குறித்து விரிவாக பார்க்கலாம்.

தொகுப்பாளர் டிடிக்கு பெரிய அளவில் அறிமுகம் தேவை இல்லை. அவர் சின்னத்திரையில் பல வருடங்களாக தொகுப்பாளராக பலருக்கும் பரீட்சையமானவர் தான். அதோடு இப்போது பல திரைப்படங்களிலும் முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார். இதனாலையே ரசிகர்களின் மத்தியில் பிரபலமாக இருந்து வருகிறார்.

அதோடு பல இசை வெளியீட்டு விழாக்களையும் பிரமாண்டமான கலை நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியிருக்கும் டிடி சமீபத்தில் விஜய் டிவியில் இந்த நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குவதில்லை. இது குறித்து தற்போது கலந்து கொண்ட பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.

அதாவது விஜய் டிவியில் பல வருடங்களாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த டிடிக்கு சில மாதங்களுக்கு முன்பு கால் அதிக நேரமாக நிற்க முடியாத வகையில் நோய் பாதிப்பு ஏற்பட்டது. அது குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் ரசிகர்களிடம் பகிர்ந்து இருந்தார். அதற்கு காரணம் மணிக்கணக்காக சூட்டிங் நேரத்தில் நின்று கொண்டிருப்பது தான் என்று டிடி கூறி இருக்கிறார்.

பொதுவாக விஜய் டிவியில் நான் தொகுத்து வழங்காத நிகழ்ச்சி இல்லை என்று சொல்லும் அளவிற்கு பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறேன். அப்போதெல்லாம் தொடர்ச்சியாக பல மணி நேரங்கள் சூட்டிங் நடந்து கொண்டிருக்கும் அப்போது முழுக்க முழுக்க தொகுப்பாளர்கள் நிற்க வேண்டும். அது எனக்கு மட்டுமல்ல தொகுப்பாளராக இருக்கும் அனைவருக்கும் இந்த மாதிரி நிலைமை தான்.

அதனால்தான் பல தொகுப்பாளர்கள் ஒரு கட்டத்துக்கு மேலே தொடர்ச்சியாக வேலை செய்ய முடியாத நிலைமைக்கு மாறி விடுகிறார்கள். அந்த வகையில் நானும் மாட்டிக்கொண்டேன். நான் ரொம்பவே ரசித்துப் பார்த்த வேலை என்றால் தொகுப்பாளர் வேலை தான். ஒரு கட்டத்தில் என்னுடைய உடல்நிலை சரியில்லாமல் போன போது எனக்கு நிகழ்ச்சிகள் குறைய தொடங்கிவிட்டது. அதனால் தான் நான் விஜய் டிவியில் இருந்து வெளியேறினேன்.

ஆனாலும் எனக்கு ஒரு சில இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. அதுவும் நடிகர் தனுஷ் போன்ற பெரிய நடிகர்களின் இசை வெளியீட்டு விழாவில் எனக்காக சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள். அதில் வெளியில் இருந்து பார்க்கும் போக்கும் போது நான் நின்று கொண்டிருப்பது போன்று இருக்கும் ஆனால் அங்கே எனக்கு ஒரு ஸ்டூல் தந்து அதில் நான் உட்கார்ந்து இருந்தேன். இப்படி எல்லா தொகுப்பாளர்களுக்கும் கொடுத்தால் ரொம்பவே நல்லா இருக்கும்.

அதோடு துணிக்கடை போன்ற பல இடங்களில் பல மக்கள் இப்போதும் நின்று கொண்டே வேலை பார்க்கின்றனர். அது இன்றைக்கு நமக்கு வருமானத்திற்காக வேலையாக பார்த்தாலும் நாளைக்கு அதனால் பல பாதிப்புகள் வர காத்திருக்கிறது. அதனால் தயவு செய்து உங்களால் பணியில் அமர்த்தபட்டவர்களுக்கு சில சலுகைகளை கொடுங்கள். அவர்களுக்கு ஒரு சேர் கொடுப்பதால் நீங்கள் குறைந்து போய் விட மாட்டீர்கள் என்று உருக்கமாக டிடி வேண்டுகோள் வைத்திருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+