பேசிட்டிருக்கும்போது அதையே பார்த்தா எப்படி.. காண்டான பிரியா பவானிசங்கர்
சென்னை: தன்னுடைய கவலையை பேசிக்கொண்டிருக்கும்போது தான் போட்டிருக்கும் ஆடையைப் பற்றி சந்தேகம் கேட்ட நெட்டிசன்களால் காண்டானார் பிரியா பவானி சங்கர் .
ஆனாலும் இந்த லொள்ளு ஆகாது என வரிந்து கட்டிக்கண்டு வந்த பிரியாவின் ரசிகர்கள். விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை சீரியலின் மூலமாக சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்தவர் பிரியா.
பிரியா பவானி சங்கர் அதற்கு முன்னர் செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை ஆரம்பித்து இருந்தாலும் தற்போது வெள்ளித்திரையிலும் கொடிகட்டி பறந்து வருகிறார் .

நல்ல வளர்ச்சி
இவருடைய வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் இவர் இவருக்கு சீரியலில் இருந்த வரைக்கும் இருந்த ரசிகர்களை விடவும் தற்போது பலமடங்கு ரசிகர்கள் இருக்கின்றனர் .பல மாடல் போட்டோஷூட் விளம்பரங்களிலும் நடித்துக் கொண்டிருந்தார். தற்போது இவர் திரைப்படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருப்பதால் சீரியலில் பக்கம் தலை காட்டாமல் இருக்கிறார்.

போட்டோ தரிசனம்
அடிக்கடி இன்ஸ்டாகிராமில் போட்டோ ஷூட் நடத்தி தன்னுடைய ரசிகர்களுக்கும் தரிசனத்தைக் காட்டி வருகிறார் .இவர் முதன்முதலில் அறிமுகமான சீரியலில் கதாநாயகன் அமித்திற்கும் கெமிஸ்ட்ரி நன்றாக செட்டாகி இருந்ததால் இந்த சீரியல் அனைத்து தரப்பினரையும் நன்றாக ரசிக்க வைத்திருந்தது. முதல் சீரியலிலே தன்னுடைய பெயரிலேயே இவர் நடித்திருந்தார் .

அடிக்கடி சண்டை
பிரியாவும் அர்ஜுனும் அடிக்கடி சண்டை போடுவதை பார்ப்பதற்காகவே பலர் இந்த சீரியலை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்தனர் .ஆனால் சீரியலில் இருந்து பாதியிலேயே இவர் விலகிவிட்டார் .இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும்போதே இவருக்கு மேயாத மான் படத்திலிருந்து நடிக்க வாய்ப்பு வந்ததால் சீரியலை விட்டு திரைப்படத்தில் சென்றுவிட்டார்.

விடாமல் துரத்தும் ரசிகர்கள்
ஆனால் அவருடைய சீரியல் ரசிகர்கள் இவரை பின் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றனர் .தற்போது இவர் சினிமாவிலும் பல முன்னணி நடிகைகளுக்கு நிகராக நடித்து வருகிறார். இவர் சீரியலில் நடிக்கும்போது இருந்ததற்கும் தற்போது அதிகமான ரசிகர்கள் இருந்தாலும் நெட்டிசன்கள் அதிகமாக தொடங்கிவிட்டனர் .பொதுவாக ஒருவர் வளர்ந்து வருகிறார் என்றால் அவரைப் பற்றி வெறுப்புகளும் மீன்ஸ்களும் வருவது வழக்கம்தான் .

கலாய்க்கும் நெட்டிசன்கள்
ஆனாலும் தற்போது இவர் சமூக அக்கறையோடு ஒரு வீடியோவை வெளியிடுவதை பார்த்து நெட்டிசன்கள் கலாய்த்து இருக்கிறார்கள் .அதனைப் பார்த்ததும் அவருடைய ரசிகர்கள் காண்டாகி நெட்டிசன்களை திட்டி தீர்த்தாலும் தற்போது பிரியாவும் தன்னுடைய பங்குக்கு இன்ஸ்டாகிராமில் அவர்களுக்காக ஒரு போஸ்ட் போட்டு இருக்கிறார் இதுதான் இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது.

நிதி திரட்டும் பிரியா
சமூக வலைத்தளத்தில் தற்போது அதிகமாக பார்க்கும் ஒரு செய்தியாக மித்ரா பைட்ஸ் அதாவது மித்ரா என்ற 2 வயது குழந்தைக்கு மருத்துவ செலவிற்கு சுமார் 16 கோடி தேவைப்படுகிறது எனவும் ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தில் இருக்கும் அவர்களுக்கு இது மிகப்பெரிய விஷயம் அதனால் உங்களால் முடிந்த அளவு பத்து ரூபாயோ நூறு ரூபாயை கொடுத்து உதவுங்கள் என்று பிரபலங்கள் பலரும் முன்னெடுத்து தங்களால் முடிந்த நிதி திரட்டி கொண்டிருக்கின்றனர் .

லுங்கியா கட்டிருக்கீங்க
அந்த வகையில் தான் நடிகை பிரியா பவானி சங்கர் அது குறித்து ஒரு வீடியோவை பதிவிட்டிருந்தார் .அதைப் பார்த்து பலரும் தங்களால் முடிந்த அளவிற்கு உதவி செய்கிறோம் என கருத்து தெரிவித்திருக்கின்றனர் .ஆனால் அவர் பேசிய அந்த வீடியோவில் ஒரு நெட்டிசன் நீங்க லுங்கியா கட்டி இருக்கீங்க ?அது என்ன பிராண்டு கொஞ்சம் எழுந்து நில்லுங்கள் என்று கமெண்ட் போட்டு இருக்கிறார் .

என்ன பிராண்ட் லுங்கி
இதுக்கு பிரியாவின் ரசிகர்கள் காண்டாகி அவர் எவ்வளவு பீல் பண்ணி பேசிக்கொண்டிருக்கிறார் இதுல போயி அவரை கலாய்ச்சி கமெண்ட் போட்டு இருக்கிறாரா என்ன லுங்கி என்று கேட்டுக் கொண்டு இருக்கிறீர்களே என திட்டி இருக்கிறார்கள். ஆனால் இந்த கமெண்டை பார்த்த பிரியா பவானி சங்கர் இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் இதுவே மற்ற நேரமாக இருந்தால் உங்களை விட நானே நீங்கள் சொன்ன காமெடிக்கு சிரித்திருப்பேன் .

அதை ஏன் பாக்கறீங்க
ஆனால் நான் ஒரு உயிரைக் காப்பாற்றுவது பற்றி சொல்லிக் கொண்டிருக்கிறேன் நீங்களோ நான் என்ன டிரஸ் போட்டிருக்கேன் என ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருக்கீங்க என அவரை திருப்பி கேட்டிருக்கிறார் .உங்களுக்கு முடிந்தால் உதவி செய்யுங்கள் இல்லையா அமைதியாக சொல்லுங்கள் எதில்தான் கலாய்க்க வேண்டும் சீண்ட வேண்டும் என்று இல்லையா உங்களால் முடிந்த உதவியை நீங்களும் அந்த குழந்தைக்கு செய்ய விரும்பினால் அவர்களுக்கு செய்யவும் என்று கூறியிருக்கிறார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications