பத்தினியா இருந்தா? எதிர்நீச்சல் சீரியலால் ஏற்பட்ட ட்விஸ்ட் பற்றி மனம் திறந்த பிரியதர்ஷினி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் நடந்த நிகழ்வுகள் பற்றி சீரியலில் ரேணுகாவாக நடிக்கும் பிரியதர்ஷினி பேசியிருக்கிறார்.

ஆண் அடிமைத்தனத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வரும் ஒரு சீரியல் ஆக எதிர்நீச்சல் சீரியல் இருந்து வருவதாக ரசிகர்கள் பலர் பாராட்டி வருகின்றனர்.

தற்போதைய சூழ்நிலையிலும் சமுதாயத்தில் பெண்களுக்கு எதிரான பல அடக்குமுறைகள் இருப்பதைப் பற்றி பிரியதர்ஷினி பேசியிருக்கிறார்.

எதிர்நீச்சல் ரேணுகா

எதிர்நீச்சல் ரேணுகா

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த சீரியலில் ரேணுகா கேரக்டரில் நடிக்கும் பிரியதர்ஷினி சமீபத்தில் பேட்டி ஒன்றை கொடுத்து இருக்கிறார். அந்த வீடியோவை ரசிகர்கள் அதிகமாக பகிர்ந்து சீரியலையும் ரேணுகாவையும் பாராட்டி வருகின்றனர். இந்த சீரியலில் பல கேரக்டர்கள் நடித்து வருகின்றனர். அவர்களில் அனைவருக்குமே தனித்தனியாக ரசிகர்கள் உருவாக தொடங்கிவிட்டனர். அந்த வரிசையில் ஒரு நபராக ரேணுகா கேரக்டரில் நடித்து வரும் பிரியதர்ஷினி இருந்து வருகிறார். இவர் சின்னத்திரை தொகுப்பாளராக இருக்கும் டிடியின் சகோதரி தான் ஆனாலும் இவரும் அதிகமான ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.

எதிர்பாராத வாய்ப்பு

எதிர்பாராத வாய்ப்பு

எதிர்நீச்சல் சீரியலில் யதார்த்தமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்திருக்கும் இவர் இந்த சீரியலில் தனக்கு வாய்ப்பு கிடைத்தது பெரிய அதிர்ஷ்டம் என்று கூறியிருக்கிறார். அது மட்டும் இல்லாமல் கொஞ்சமும் எதிர்பார்க்காதது என்றும் கூறியிருக்கிறார். ஏற்கனவே தான் கோலங்கள் சீரியலில் சிறிய கேரக்டரில் நடித்திருக்கிறேன். அதற்கு பிறகு இத்தனை வருடங்கள் கழித்து திருச்செல்வம் இவரிடம் போன் செய்து இந்த சீரியலில் நடிக்க வருகிறீர்களா?என்று கேட்டதும் இவருக்கு ஆச்சரியமாகத்தான் இருந்ததாம். உடனே இவரும் ஓகே என்று சொல்லிவிட்டாராம். அப்போது இவருக்கு இந்த மாதிரி ஒரு கேரக்டர் என்பது கூட தெரியாதாம்.

காரணம் இயக்குனர் தான்

காரணம் இயக்குனர் தான்

சீரியலில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் இந்த சீரியல் சூட்டிங் பிறகு சீரியல் அணியினர் அனைவரும் ஒரே குடும்பமாகத்தான் இருந்து வருகிறார்களாம். தங்களுடைய நிஜப் பெயரை மறந்து அனைவருமே ரேணுகா, ஈஸ்வரி, ஜனனி, நந்தினி என்று கூறிக் கொண்டுதான் பேசிக் கொண்டிருப்பார்களாம். அனைவரும் ஒற்றுமையான சகோதரிகளாகத்தான் இருக்கிறார்களாம். அதனாலே ஷூட்டிங் ஸ்பாட்டில் எப்போதும் கலகலப்பாகவும் ஜாலியாக இருப்பதாக கூறியிருக்கிறார். அது மட்டுமல்லாமல் இந்த சீரியலை ரசிகர்கள் இந்த அளவிற்கு ரசிப்பதற்கு காரணம் திருச்செல்வம் தான். அவரால்தான் இந்த அளவிற்கு ரசிகர்களின் நாடி நரம்புகளை பிடித்து இழுக்கும் விதமாக எழுத முடியும் சீரியலை புதுமையாகவும் எடுக்க முடியும் என்று கூறியிருக்கிறார்.

ரசிகர்களின் அட்வைஸ்

ரசிகர்களின் அட்வைஸ்

தான் இதற்கு முன்பு எத்தனையோ சீரியல்களில் நடித்திருந்தாலும் இந்த சீரியலுக்கும் தனக்கு கிடைக்கும் அங்கீகாரம் பெரியதாகவும் அதிகமாக பிடித்ததாகவும் இருக்கிறது என்று கூறி இருக்கிறார். செல்லும் இடம் எல்லாம் அனைவரும் ரேணுகா நீ ஏன் இப்படி நடந்து கொண்ட அப்படி எதிர்த்து பேசு என்று இவருக்கு அட்வைஸ் கொடுப்பது பார்ப்பதற்கும் கேட்பதற்கும் சந்தோஷமாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இந்த சீரியலை இந்த அளவிற்கு ரசிகர்கள் பிடித்திருப்பதற்கு இதில் உயிரோட்டமான கதைக்களமும் வசனங்களும் தான் என்று கூறியிருக்கிறார்.

பத்தினி பற்றிய கருத்து

பத்தினி பற்றிய கருத்து

அது மட்டும் இல்லாமல் சமீபத்தில் தான் ஒரு வசனம் வைத்திருந்தார்கள். அது அப்பத்தாவின் கிராமத்திற்கு அனைவரும் செல்ல இருக்கும்போது இவர் ஞானத்திடம் அனுமதி வாங்க பொய் பேசிக் கொண்டிருப்பார். அப்போது ஞானம் நீ பத்தினி என்றால் அங்கே போகக்கூடாது, பத்தினியாக வீட்டில் இரு என்று சொல்வாராம். அப்போது ரேணுகா என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தாலும் அடுத்த ஷாட்டில் ரேணுகா அங்கிருந்து ஓடி விறு விறுவென காருக்கு வந்துவிடுவார். காரில் இருக்கும் நந்தினி இவரை அப்போ நீங்க பத்தினி இல்லையா அக்கா என்று கிண்டல் செய்து கொண்டிருப்பார். இது பெண்கள் இப்படித்தான் என்று அவர்களுக்கே தெரியாமல் அடிமைப்படுத்தும் முறையாக இருந்தாலும் அதையும் உடைத்தெறிய வேண்டும் என்பது போன்ற ஒரு சிந்தனையில் இருந்து வருகிறது. அதனால் இந்த சீரியல் அதிகமாக கவர்ந்திருப்பதாக கூறி இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+