கிட்டப் போகாதீங்க பிரியங்கா.. ரோஜாவுக்குப் போதை ஏறி விடும்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை பிரியங்காவை நினைவிருக்கா.. அதாங்க ரோஜா நாயகி பிரியங்கா.. தனிக் கூட்டமே இவருக்கென்று உள்ளது. சீரியல் இல்லாத இப்போதைய டல் காலத்தை ரொம்ப கேஷுவலாக ஜாலியாக பாசிட்டிவாக கழித்து வருகிறாராம் பிரியங்கா.

சில சீரியல்கள் மனதைக் கொள்ளை கொள்ளும். சில நேரங்களில் சீரியலை விட அதில் நடித்த நடிகை நடிகர்கள் மனதை அள்ளுவார்கள். அப்படித்தான் பிரியங்காவும்.

ரோஜா சீரியலில் இவரது கொள்ளை அழகுக்கு அடிமையாக ரசிக்க குவிந்திருப்பவர்களே அதிகம். அந்த வெகுளித்தனமான நடிப்புக்கு பலர் ரசிகர்களாக உள்ளன். இவருக்காகவே அந்த சீரியல் பார்க்கப்படுகிறது என்று கூட சொல்லலாம்.

 ரோஜாவின் பிரியங்கா

ரோஜாவின் பிரியங்கா

தொலைக்காட்சியைப் பொருத்தவரையில் ஆக்டிவாக இருப்பவர்களை ரசிகர்கள் பொதுவாக ரசித்துக் கொண்டுதான் இருப்பார்கள். வெள்ளித்திரையில் நடிக்கும் நடிகைகளை போலவே சின்னத்திரையிலும் நடிகைகளுக்கு அதிகப்படியான ரசிகர்கள் இருக்கிறார்கள். அப்படிதான் தனக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி இருப்பவர் ரோஜா சீரியலில் நடிக்கும் பிரியங்கா.

 குடும்ப குத்துவிளக்கு

குடும்ப குத்துவிளக்கு

இத்தனைக்கும் இவர் ஹோம்லியான ரோலில்தான் நடிக்கிறார். ஆனாலும் அவருக்கு தனி ரசிகர் வட்டம் இருக்கிறது. காரணம் அந்த அழகு முகம்.. அது சிந்தும் புன்னகை.. நடிப்பில் பின்னி எடுப்பது என பல காரணங்கள். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் கூட ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருக்கிறார் பிரியங்கா.

 ஆக்டிவ் அப்டேட்

ஆக்டிவ் அப்டேட்

இவர் இணையதளத்தில் ஆக்டிவாக தன்னுடைய புகைப்படங்களை அப்டேட் பண்ணிக்கிட்டே இருக்கிறார். இதற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது. சீரியல்களில் ஹோம்லியாக நடித்தாலும் இணையதளங்களில் படுகவர்ச்சி காட்டி வருகிறார்கள் சில நடிகைகள். அந்த லிஸ்டில் நம்ம ரோஜா அதான் பிரியங்கா ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

 கவர்ச்சிக்கு சேலை

கவர்ச்சிக்கு சேலை

சீரியல்களில் இவர் விதவிதமான சேலைகளை கட்டிக்கொண்டு இழுத்துப் போட்டுக் கொண்டு வருவார். ஆனால் இணையதளத்தில் இவருடைய போஸ்ட்களை வேற லெவலில் இருக்கிறது. அதற்காக ரொம்ப மோசமாக படம் போடுவதில்லை இவர். மாறாக, சேலை கட்டிக் கொண்டும் கவர்ச்சி காட்ட முடியும் என்று அவர் ரசிகர்களுக்கு சேலைகளிலும் கவர்ச்சியை வாரி வழங்கி இருக்கிறார்.

 ரோஜாவுக்குப் போதையேறுமே

ரோஜாவுக்குப் போதையேறுமே

இப்ப லேட்டஸ்டா ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். அதில் சேலையை கட்டிக்கொண்டு பால்கனியில் ஸ்டைலாக போஸ் கொடுத்திருக்கிறார் இது ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கிறது. அதில் ஒரு ரோஜாவை குனிந்து கொஞ்சுவது போலவும் போஸ் கொடுத்திருக்கிறார். அதற்கு ரசிகர்கள் கமெண்ட் மழை பொழிகிறார்கள். ரொம்ப கிட்டப் போகாதீங்க.. ரோஜாவுக்கு போதை ஏறிடப் போகுதுன்னு கிண்டலடித்து பிரியங்காவை வெட்கப்பட வைத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+