கல்யாணம் ஆன ஒரே வாரத்தில் பிரியங்காவிற்கு விசேஷ நாள்.. மகிழ்ச்சியில் கணவர்.. குவியும் வாழ்த்து
சென்னை: விஜய் டிவியில் தொகுப்பாளியாக இருக்கும் பிரியங்காவிற்க்கு கடந்த வாரத்தில் தான் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த ஒரே வாரத்தில் தன்னுடைய கணவரோடு மகிழ்ச்சி செய்தியை அறிவித்திருக்கிறார். அவருக்கு சின்னத்திரை, வெள்ளித்திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கும் பிரியங்கா சின்னத்திரை ரசிகர்களுக்கு பரீட்சையமானவர்தான். அதே நேரத்தில் சோசியல் மீடியாவிலும் பயங்கர ஆக்டிவாக இருக்கிறார். தான் செய்யும் சின்ன சின்ன செயல்களையும் கூட தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் போஸ்ட் ஆக போட்டு விடுகிறார். அதிலும் இவரை ஃபாலோ பண்ணுபவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறார்கள். தன்னை பற்றி எவ்வளவோ வதந்திகளும், சர்ச்சைகளும் வந்தாலும் அதை எல்லாம் கண்டு கொள்வது கிடையாது. இது பிரியங்காவின் ரசிகர்களுக்கு மேலும் இவர் மீது மரியாதையை ஏற்படுத்துகிறது.

விவாகரத்து
பிரியங்கா விஜய் டிவி பிரபலமான பிரவீன் என்பவரை தான் காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு பிரவீன் குறித்து மேடைகளில் மகிழ்ச்சியாக பேசி இருக்கிறார். ஆனால் சில வருடங்களிலே இவர்களுக்குள் விவாகரத்து நடந்திருக்கிறது. ஆனால் அதை பிரவீன் மற்றும் பிரியங்கா இருவருமே வெளியே தெரிவிக்கவில்லை. சோசியல் மீடியா பக்கங்களில் மட்டும் பிரியங்கா பிரவீனுடன் எடுத்த புகைப்படங்களை டெலிட் செய்திருந்தார்.
அம்மாவின் வருத்தம்
இதனால் இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடால் பிரிந்து இருக்கிறார்களா? அல்லது இவர்களுக்கு விவாகரத்து ஆகிவிட்டதா? என்ற கேள்விகள் ரசிகர்களுக்கு இருந்தது. இந்த நிலையில் தான் கடந்த வருடத்தில் பிரியங்காவின் அம்மா இதற்கு பதில் கொடுக்கும் வகையில் பிரியங்காவிற்கு நாங்கள் இன்னொரு திருமண வாழ்க்கையை நடத்தி வைக்க வேண்டும் என்று நினைக்கிறோம். அந்த வாழ்க்கையில் பிரியங்கா சந்தோஷமாக வாழ வேண்டும் என்று பேசியிருந்தார்.
பிரியங்காவின் திருமணம்
இந்த நிலையில் கடந்த வாரத்தில் பிரியங்கா வசி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு முன்பு பிரியங்கா எந்த இடத்திலும் தன்னுடைய திருமண செய்தி குறித்து அறிவிக்கவில்லை. அதனால் அவருடைய திருமண புகைப்படங்களை அவர் வெளியிட்டதும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. வசி இலங்கையை சேர்ந்தவர் என்பதும் அவர் டிஜே என்பதும் தான் முதலில் தெரிந்தது. பிறகு அவர் இலங்கை அரசியல் கட்சி பிரமுகரின் மகன் என்பது தெரிய வந்தது.
அமீர்- பாவனி திருமணம்
அதுபோல பிரியங்காவின் திருமணத்திற்கு பிறகு அவருடைய பிக் பாஸ் நண்பரான அமீர் மற்றும் பாவனியின் திருமணத்தில் தன்னுடைய கணவரோடு கலந்து கொண்டார். அமீர் மற்றும் பாவனி திருமணத்தில் பிரியங்கா தான் நாத்தனார் முடிச்சு போட்டு திருமணத்தை முன்நின்று நடத்தி வைத்திருந்தார். இந்த புகைப்படங்களும் வீடியோக்களும் சோசியல் மீடியாவில் வைரலானது.

பிரியங்காவின் பிறந்தநாள்
இந்த நிலையில் இன்று பிரியங்கா தன்னுடைய 33வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். தன்னுடைய பிறந்தநாளுக்கு தனக்கு வாழ்த்துக்கள் சொன்ன பிரபலங்களின் பதிவுகளை இன்ஸ்டாகிராமில் ஸ்டோரியாக வைத்திருக்கிறார். அதோடு தன்னுடைய கணவரோடு அழகான போட்டோ சூட் எடுத்திருக்கிறார். அதை தன்னுடைய சோசியல் மீடியாவில் பகிர்ந்து என்னுடைய பிறந்தநாளுக்கு எனக்கே வாழ்த்துக்கள் என்று கூறியிருக்கிறார். அதற்கு அவருடைய கணவரும் வாழ்த்துக்கள் தெரிவித்து ஹார்ட்டின் பறக்க விட்டிருக்கிறார்.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications