பிரியங்காவுக்கு எவ்வளவோ கஷ்டம்.. அதை மறைத்து சிரித்து! மணமேடையில் நடந்தது இதுதான்! தோழி பளிச்
சென்னை: பிரியங்கா தேஷ்பாண்டேவிற்கு நேற்று முன்தினம் தான் திருமணம் நடைபெற்றது. அவருடைய திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் இரண்டு நாட்களாக வைரலாகி வருகிறது. இந்த நிலையில் பிரியங்காவின் கஷ்டங்கள் அவருடைய சந்தோசங்கள் குறித்து அவருடைய தோழி பேசி இருக்கிறார்.
நேற்று முன்தினம் பிரியங்கா தன்னுடைய இரண்டாவது திருமண புகைப்படங்களை பகிர்ந்திருந்தார். அதற்கு பிறகு சோசியல் மீடியாவில் எந்த பக்கம் திரும்பினாலும் பிரியங்காவின் திருமண புகைப்படங்கள் தான் வைரலாகி கொண்டு இருக்கிறது. திருமணத்தில் பிரியங்கா சந்தோஷமாக டான்ஸ் ஆடி இருப்பார். அதுபோல அவருடைய கணவர் தாலி கட்டும் நேரத்தில் பிரியங்கா எமோஷனலாகி அழுது இருந்தார். இந்த கியூட்டான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் பரவி வரும் நிலையில் பிரியங்காவை சிலர் வாழ்த்தி வருகிறார்கள். சிலர் ட்ரோல் செய்து வருகிறார்கள்.

ரசிகர்களின் தேடல்கள்
அதுபோல பிரியங்காவின் முதல் கணவர் யார்?, இரண்டாவது கணவர் பெயர் என்ன?, முதல் கணவர் என்ன வேலை பார்க்கிறார்?, இரண்டாவது கணவரின் வயது என்ன? என்று பல்வேறு தேடல்கள் இணையத்தில் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் பிரியங்காவின் திருமணத்தில் என்ன நடந்தது என்று அவருடைய தோழி பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஜாலியான நபர்
அதில் அவர் பேசுகையில் பிரியங்காவை பார்க்கும் பலருக்கும் அவர் சந்தோஷமாக இருப்பதாகத்தான் தெரியும். ஆனால் அவருக்கு அதிகமான கஷ்டங்கள் இருக்கிறது. ஆனால் அதை அவர் யாரிடமும் வெளியே காட்டிக் கொள்ள மாட்டார். ஏதாவது ஒரு இடத்தில் அவர் உடைந்து அழுதுவிட்டால் கூட இரண்டு நொடிதான் அழுவார். பிறகு அதை தூக்கிப்போட்டு விட்டு பக்கத்தில் இருப்பவர்களை சிரிக்க வைக்க வேண்டும் என்று நினைப்பார்.

தோழியின் வருத்தம்
முதல் முறை பிரியங்காவை யாராவது பார்க்க வேண்டும் என்று வந்தால் கூட அவர்களிடமும் சகஜமாக பேசி அவர்களுக்குள் எந்த பதட்டத்தையும் ஏற்படுத்தாத வகையில் நடந்து கொள்வார். யாரிடமும் முகம் சுளித்து பேச மாட்டார். பிரியங்காவிடம் நான் பல வருடங்களாக பழகி வருகிறேன் அவர் யாரையும் கோபப்பட்டு திட்டி நான் பார்த்ததே கிடையாது. சந்தோஷமாக வைக்க வேண்டும் என்று பிரியங்கா நினைப்பார். ஆனால் அவரை சிலர் டார்கெட் செய்து அடிக்கிறார்கள்.
பர்சனல் ரகசியம்
பிரியங்காவின் வளர்ச்சியை பிடிக்காமல் சிலர் முதுகுக்கு பின்னாடியும் பேசுகிறார்கள். ஆனால் பிரியங்கா அதைப் பற்றி கண்டுகொள்ள மாட்டாங்க. அவர்களுடைய திருமணம் மற்றும் பர்சனல் வாழ்க்கையைப் பற்றி அவர் எந்த இடத்திலும் வெளிப்படையாக பேச மாட்டாங்க. பிரியங்கா தன்னையை பற்றி யாரும் அனுதாபப்பட வேண்டாம் என்று நினைப்பாங்க. அதனாலேயே தன்னுடைய பர்சனல் வாழ்க்கையை ரகசியமாகத்தான் வைத்திருந்தாங்க.
மகிழ்ச்சியான போஸ்ட்
அவருடைய இரண்டாவது திருமணத்தில் நாங்களும் கலந்து கொண்டிருந்தோம். அப்போது ரொம்பவும் சந்தோஷமாக இருந்தாங்க. சில இடத்தில் எமோஷனலாக உடைந்து போயிருந்தாங்க. இறுதியாக அவர் போட்ட போஸ்ட் பலருடைய கவனத்தையும் பெற்றது. அதில் என்னுடைய சந்தோஷத்தை இறுதியாக நான் கண்டுபிடித்து விட்டேன். என்னுடைய வாழ்க்கைக்கு மகிழ்ச்சி வந்து சேர்ந்தது என்று போஸ்ட் போட்டு இருந்தார். அதை பலரும் பாராட்டி வருகிறார்கள்.
எல்லோருக்கும் சந்தோஷம்
திருமண போட்டோ சூட் எடுக்கும்போது கூட பிரியங்கா துரு துருவென இருந்தாங்க. ஆனால் அவருடைய கணவர் தாலி கட்டும் போது ஒரு நிமிடம் எமோஷனலாகி அழுது இருந்தாங்க. அப்போது அந்த இடத்தில் சுற்றி இருந்தவர்களுக்கும் எமோஷனலாக தான் இருந்தார்கள். அவருடைய குடும்பத்தினர் இந்த தருணத்திற்காக தான் காத்திருந்தார்கள். பிரியங்காவின் வாழ்க்கையை பார்த்து இப்போது அவர்களுக்கு சந்தோஷம்தான் என்று பிரியங்காவின் தோழி அக்ஷயா பேசியிருக்கிறார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications