மீண்டும் அதே இடத்திற்கு வந்த பிரியங்கா...உற்சாகத்தில் ரசிகர்கள்
சென்னை: மீண்டும் பிரியங்கா தன்னுடைய வேலையை தொடங்கி விட்டதை அறிந்து அவருடைய ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதைத்தான் எதிர்பார்த்தோம் என்று தற்போது பிரியங்காவின் செயலைப் பார்த்து ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

வின்னர் ஆக வெற்றி
விஜய் டிவியின் செல்லப்பிள்ளையாக வலம் வந்து கொண்டிருந்த பிரியங்கா தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக மீண்டும் தன்னுடைய ரசிகர்களின் ஃபேவரைட் தொகுப்பாளராகவும், போட்டியாளராகவும் கலக்கிவிட்டார். இவருடைய அசத்தலான விளையாட்டை பார்த்து ரசிகர்கள் பலர் இவருக்கு ஆதரவு தெரிவித்து இவர் பிக் பாஸ் ஐந்தாவது சீசனில் இரண்டாவது இடத்தில் வெற்றி பெற்றுள்ளார். ஆரம்பத்தில் இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார் என்று தெரிந்ததும் பல ரசிகர்கள் வேண்டாம் என்று கூறி வந்தனர்.

பலருடைய பொதுவான கருத்து
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக ஒரு சில நெகட்டிவ் கமெண்டுகளை பெற்றிருந்தாலும் அதிகமான பாசிட்டிவ் கமெண்டுகளையும் பெற்று இவருடைய கேரக்டரையும் ரசிகர்களிடம் நன்றாக காட்டிவிட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் பலர் கலந்து கொள்வதற்காக பயந்து ஓடி விடுவார்கள். இதுவரைக்கும் சம்பாதித்து வைத்திருந்த பேரும் புகழும் இந்த நிகழ்ச்சியில் கெட்டுப் போய்விடும் என்பது பலருடைய கருத்தாக இருந்து வருகிறது. ஆனால் அதையெலலாம் தகர்த்தெறிந்து தன்னுடைய கேரக்டரை ரசிகர்களால் ரசிக்க வைத்த போட்டியாளராக பிரியங்கா தனித்துவமாக விளங்கியுள்ளார் என்று அவருடைய ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

ரசிகர்களின் எதிர்பார்ப்பாக கேள்வி
விஜய் டிவியின் தொகுப்பாளர் என்று சொன்னதும் ஒரு சில தொகுப்பாளர்களின் முகங்கள் ரசிகர்களின் மனதில் டக்கென்று நினைவிற்கு வரும் அந்த வகையில் ஒருவராக இருக்கும் பிரியங்கா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் மீண்டும் தொகுப்பாளராக வருவாரா?? என்று பல கேள்விகளை ரசிகர்கள் எழுப்பி இருந்தனர். கமல் கூட அவருக்கு கிப்ட் பரிசளிக்கும் போது இந்த மைக் உங்களுக்கு கிடைத்த ஸ்பெஷல் கிப்ட் ஆக இருந்தாலும் இது மட்டும் தான் உங்களுடைய திறமையை வெளிக்காட்டும் என்று அல்ல என்று புள்ளி வைத்து பேசியிருந்தார். அதனால் இவர் சினிமாக்களில் களமிறங்குவாரா?? என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர்.

மீண்டும் திரும்பி வந்த பிரியங்கா
பிக் பாஸ் வீட்டிற்குள் தான் இருந்தாலும் அவருடைய கவனம் தான் பல சீசன்களில் தன்னுடைய வீடு போல பழகி வந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது, மீண்டும் தனக்கு அந்த வாய்ப்பு கிடைக்குமா?? என்பதில் தான் இருந்து வந்தது. ஆனால் தற்போது மீண்டும் இவர் சூப்பர் சிங்கர் 8 சீசனில் எடுத்துக்கொண்ட போட்டோக்களை இவருடைய ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருக்கிறார். இந்த போட்டோக்களை பார்த்ததும் இவருடைய ரசிகர்கள் இவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications