சுனாமி வருவதற்கு முன்னாடியே கனவில் பார்த்த பிரியங்கா...வேற லெவல் பிரியங்காவின் திறமை

Subscribe to Oneindia Tamil

சென்னை: அட என்னங்க சொல்றீங்க என்று இப்போ பிரியங்காவின் கதையை கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர்.

பிரியங்காவுக்கு நிறைய திறமைகள் இருக்கிறது என்பது ரசிகர்களுக்கு தெரியும் ஆனால் இப்படி ஒரு திறமை இருக்கிறதா என்று வாயை பிளந்து வருகின்றனர்.

எதிர்காலத்தில் நடப்பதை முன் கூட்டியே கனவில் தெரிந்து இருக்கிறாராம் பிரியங்கா. அது தான் தற்போது ரசிகர்களுக்கு செம ஷாக் கொடுத்திருக்கிறது.

வேற லெவல் திறமை

வேற லெவல் திறமை

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக ரசிகர்கள் தங்களுடைய போட்டியாளர்களின் பல்வேறு திறமைகளை தெரிந்து கொண்டு வருகின்றனர். அதுவும் இதுவரைக்கும் தெரிந்து கொள்ள முடியாத பிரியங்காவின் திறமைதான் தற்போது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. ஒரு சிலருக்கு தான் இந்த மாதிரி எல்லாம் அமையும் அது பிரியங்காவிற்கு நன்றாகவே அமைந்திருக்கிறது என்று அவருடைய ரசிகர்கள் அவரை பார்த்து அசந்து வருகின்றனர். ஆனால் ஒருசில நெட்டிசன்கள் இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு என்று தங்களுடைய வழக்கமான மொக்கை கமெண்ட் களையும் அளித்து தான் வருகிறார்கள்.

கலகலப்பான கேரக்டர்

கலகலப்பான கேரக்டர்

பேசும் வார்த்தைகளால் பலருடைய மனதைக் கவர்ந்து கலகலப்பான சூழ்நிலைக்கு ரசிகர்களை மாற்றிவிடும் திறமை பிரியங்காவிற்கு நன்றாகவே இருந்து வருகிறது. அதனால் தான் அவருடைய ரசிகர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். என்னதான் இவரை பலர் கலாய்த்து தள்ளிக் கொண்டு இருந்தாலும் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அப்படியே தட்டிவிட்டு போய்க் கொண்டிருப்பது தான் இவருடைய கேரக்டர். இதையே பலருக்கும் அறிவுரையாகவும் கூறிவருகிறார். இவருடைய கலகலப்பான கேரக்டர் பலருக்கும் பிடித்துவிடுகிறது.

Recommended Video

    Yashika ஓட Boyfriend தான் நான் | Niroop உடைத்த உண்மை | Bigg Boss Tamil
    ரசிகர்கள் விரும்பும் பிரியங்கா

    ரசிகர்கள் விரும்பும் பிரியங்கா

    பிக்பாஸ் இரண்டாவது சீசனில் தற்போது பிரியங்கா ஒரு போட்டியாளராக கலந்து கொண்டிருக்கிறார். விஜய் டிவியின் செல்ல பிள்ளையாக இவர் இருந்தாலும் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகிறார். இவருடைய கேரக்டர் ரசிகர்கள் மத்தியில் நெகட்டிவாக மாறி விடும் என்று பலர் பலவிதமான கருத்துக்களை தெரிவித்துக் கொண்டிருந்தனர். ஆனால் அதையெல்லாம் புறந்தள்ளி விட்டு தன்னுடைய திறமையின் மீது இருக்கும் நம்பிக்கையை இந்த நிகழ்ச்சியில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். வந்த முதல் நாளில் இருந்து இன்று வரைக்கும் படபடவென பேச்சால் எங்கும் நிறைந்திருக்கும் இவருடைய கேரக்டரை ரசிகர்களுக்கு நன்றாகவே பிடித்துவிட்டது.

    கனவு நிஜத்தில் நடந்துவிட்டதா??

    கனவு நிஜத்தில் நடந்துவிட்டதா??

    தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் தங்களுடைய சொந்த கதைகளை கூறிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் நேற்றைய எபிசோட்டில் அபிஷேக்கும், பிரியங்காவும் பேசிக்கொண்டிருந்தது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. ஏனென்றால் பிரியங்கா தன்னுடைய கனவு பற்றியும் அது பின்னாளில் அப்படியே பலித்து விட்டது என்றும் கூறிக்கொண்டிருந்தார். அதில் சுனாமி வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு இவர் கனவில் அப்படியே தோன்றியிருக்கிறது. அதிகமான தண்ணீர் வந்தது போல கனவுகண்டு இவருடைய அம்மாவிடம் கூறியிருக்கிறாராம். ஆனால் அதற்கு அவர் இது நல்லதுக்கு தான் என்று அப்போதைக்கு சமாளித்திருக்கிறார். ஆனால் அதற்கு பிறகு அதே போன்றே சுனாமி நடந்தது. இவருக்குப் பெரிய அதிர்ச்சியாக இருந்தது என்று கூறியிருக்கிறார். இவருக்கு அதிர்ச்சியாக இருந்ததோ இல்லையோ இந்த கதை ரசிகர்களுக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்துவருகிறதாம்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+