நடிகர் கார்த்திக்கை அந்த ரவுடி கடத்திட்டு போயிட்டாரு! நடுக்கடலில் நடந்த சம்பவம்! தயாரிப்பாளர் சொன்ன விஷயம்
சென்னை: நடிகர் கார்த்திக் பற்றி இயக்குனர் பாரதி கண்ணன் பேசிய பேட்டி வைரல் ஆனதை தொடர்ந்து பலரும் அவருடைய பழைய சம்பவங்களை பேசி வருகிறார்கள். அதேபோல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு பில்மிபீட் யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் சில பிரத்யோகமான தகவல்களை பகிர்ந்திருக்கிறார். இது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
நடிகர் கார்த்தியின் நடிப்புக்கு 80ஸ் காலகட்டத்தில் இருந்து இப்ப வரைக்கும் அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். ஆனாலும் சமீபத்தில் பாரதி கண்ணன் அவரை பற்றி சில தகவல்களை பேசியதுதான் பலரையும் வியக்க வைத்தது. தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என பலரும் கார்த்திக்கால் அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று சிரித்தபடியே பாரதி கண்ணன் பேசியிருந்தார்.

கார்த்திக் பற்றிய செய்திகள்
படத்திற்கு அட்வான்ஸ் வாங்கிவிட்டு அந்த படத்தின் கதையை மாற்ற வேண்டும் என்று சொன்னது, பிறகு மீண்டும் அட்வான்ஸ் வாங்கிவிட்டு கார்த்திக்கிடம் பணம் கொடுத்தால் திரும்ப வராது என்று உங்களுக்கு தெரியாதா என்று கார்த்திக் நேரடியாகவே கேட்டது என்று பாரதி கண்ணன் சொன்ன விஷயங்கள் பற்றி விவாதங்களும் எழுந்தது. அது குறித்து பாரதி கண்ணன் சமீபத்தில் கூட ஒரு பேட்டியில் பேசி இருந்தார்.
நான் எதார்த்தமாக பழைய நினைவுகளை பேசி இருந்தேன் அது கார்த்திக்கை கேவலப்படுத்த வேண்டும் என்றோ, அசிங்கப்படுத்த வேண்டும் என்றோ நினைக்கல. அந்த நேரத்தில் நடந்த சம்பவத்தை சொன்னேன். ஆனால் திரைத்துறையில் இருந்து சிலர் என்னைக்கு போன் செய்து ஏன் இப்படி பேசினீங்க? என்று கேட்கிறார்கள் என்று சொல்லியிருந்தார். இந்த பஞ்சாயத்துக்கு ஒரு பக்கம் இருக்க தயாரிப்பாளர் பாலாஜி பிரபு சில தகவல்களை பகிர்ந்து இருக்கிறார்.
ஆடம்பர வாழ்க்கை
பாலாஜி பிரபு பேசிய விஷயங்களும் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. அதாவது பாலாஜி பிரபு பேசும் போது கார்த்திக் யாரையும் ஏமாற்ற வேண்டும், பணத்தை வாங்கிவிட்டு அவர்களை ஓட விட வேண்டும் என்றெல்லாம் நினைக்க மாட்டாரு. அவர் ஆரம்பத்தில் இருந்தே ரொம்பவும் சொகுசா வாழ்ந்து பழகிட்டாரு.
பைவ் ஸ்டார் ஹோட்டலில் அவருக்குனு ஒரு அறை இருக்கும், அவருடைய வேலையாட்கள் மற்றும் ஹாஸ்பிட்டலில் அவருக்கென்று ஒரு அரை இருக்கும் இப்படி சகல வசதியுடன் இருந்த அவருக்கு பணம் அதிகமாக தேவைப்பட்டது. ஒருவரிடம் பணத்தை வாங்கி இன்னொருவருக்கு கொடுப்பார். அவர் யாரையும் ஏமாற்ற வேண்டும் என்று நினைக்கவில்லை என்றாலும் சொன்ன நேரத்திற்கு நடித்துக் கொடுக்காமல் அலைக்கழிக்க வைத்து விடுவார். அத்தான் அவருடைய மைனசாக இருந்தது.
பாலாஜி பிரபு பேட்டி
நான் ஒரு செய்தி கேள்வி பட்டேன். இது நான் பார்த்தது கிடையாது. ஆனால் கார்த்திக் பற்றி பேசும்போது இந்த சம்பவத்தை பலர் சொல்லுவாங்க. அதாவது கார்த்திக்கும் ஒரு தயாரிப்பாளருக்கும் பிரச்சனை வந்திருக்கிறது, அவருடைய படத்தில் கார்த்திக் நடிக்க ஒப்பந்தமாகி விட்டு பிறகு அப்போ இப்போ என்று சொல்லிக் கொண்டிருந்திருக்கிறார். உடனே அவர் ஒரு ரவுடியிடம் சொல்லி கார்த்திக்கை கடத்த சொல்லி இருக்கிறார்.
அந்த ரௌடியும் கார்த்திகை கடத்தி கடலுக்குள் கொண்டு போய் விட்டாராம். அங்கு போன கார்த்திக் சும்மா இருக்காமல் அந்த ரவுடி இடமே நைட் ஆயிடுச்சு நான் இப்போ சாப்பிடுற டைம் இங்கே சாப்பாடெல்லாம் கிடைக்குமா? மீன் எல்லாம் நீங்க பிரெஷா சுட்டு சாப்பிடுறீங்களே நான் இதுவரைக்கும் இப்படி சாப்பிட்டதே கிடையாது, அந்த மீன் கிடைக்குமா? இந்த மீன் கிடைக்குமா? என்று கேட்டுக்கொண்டே இருந்தாராம்.
உடனே அந்த ரவுடி தயாரிப்பாளருக்கு போன் செய்து நீங்க இவரை கடத்த சொல்லி இருக்கீங்க இவர் இங்க அது கிடைக்குமா? இது கிடைக்குமான்னு கேட்டுட்டே இருக்கிறார் என்று சொல்ல, எப்படியாவது அவரை கொஞ்சம் மிரட்டி நடிக்க வைத்திருங்கள் என்று சொன்னாராம். பிறகு அந்த ரவுடியும் கொஞ்சம் மிரட்டி இருக்காரு அப்புறம் அந்த ரவுடிதான் கார்த்திக்கை வீட்ல கொண்டு விட்டிருக்கிறார். அதற்கு பிறகு அந்த தயாரிப்பாளருக்கு மட்டும் நடிச்சு கொடுத்தார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன் என்று தயாரிப்பாளர் பாலாஜி பிரபு அந்த பேட்டியில் பேசி இருக்கிறார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications