கார்த்திக் போன் போட்டு அழுதாரு! எப்படி இருந்த மனுஷன் தெரியுமா? தயாரிப்பாளர் டி.சிவா உருக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் கார்த்திக் பற்றி தயாரிப்பாளர் டி சிவா சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியிருந்தார். அதில் நடிகர் கார்த்திக் தனக்கு போன் போட்டு அழுததாக கூறியிருந்தார். அதோடு கார்த்திக் பற்றி வெளியே தெரியாத அவருடைய திறமையை குறித்தும் டி சிவா நெகிழ்ச்சியாக பகிர்ந்து இருந்தார்.

80ஸ் காலகட்டத்தில் இறுதியில் சினிமாவில் அறிமுகமாகி 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் கதாநாயகனாக வலம் வந்த நடிகர் கார்த்திக்கை அவ்வளவு சீக்கிரமாக யாராலும் மறந்து இருக்க முடியாது. தமிழ் சினிமாவில் நவரச நாயகன் என்ற அடை மொழியோடு கதாநாயகனாக வலம் வந்த கார்த்திக் இப்போது மீண்டும் கம்பேக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

Karthik D Siva

கண் கலங்கிய கார்த்திக்

வில்லனாகவும் குணசித்திர வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கும் கார்த்திக் குறித்து தயாரிப்பாளர் சிவா பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் சிவா பேசும் போது, சமீபத்தில் ஒரு நாள் கார்த்திக் எனக்கு போன் செய்திருந்தார். என்ன சார் என்ன விஷயம் என்று பேசிக் கொண்டிருக்கும் போது என்னை பத்தி இவ்ளோ நல்லபடியா யாருமே சொல்லி நான் கேட்டதே இல்ல. எப்படி பழசை எல்லாம் ஞாபகம் வச்சு பேசி இருக்கீங்க, நீங்க பேசியதை கேட்டபோதுதான் எனக்கே பழசெல்லாம் நினைவு வந்தது என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது அழுதுட்டாரு".

தயாரிப்பாளர் டி சிவா பேட்டி

அதெல்லாம் ஒன்னும் இல்ல சார். உங்களை பற்றி யாரு தப்பு சொல்றா? என்னமோ கால சூழ்நிலையால் தான் நீங்க தள்ளி போயிட்டீங்க என்று அவருக்கு ஆறுதல் சொல்லியிருந்தேன் என சிவா பேசி இருக்கிறார். ஏற்கனவே ஒரு நிகழ்ச்சியில் கார்த்திக் பற்றி சிவா பெருமையாக பேசி இருக்கிறார். அதை பார்த்து தான் கார்த்திக் இவருக்கு போன் செய்து பேசியிருக்கிறார். அதுபோல மீண்டும் கார்த்திக் குறித்து வேறு ஒரு விஷயத்தை பகிர்ந்து இருக்கிறார்.

தெய்வ வாக்கு திரைப்படம்

கிழக்கு வாசல் கதை எழுதுனது மது என்ற டைரக்டர் தானாம். இவர் முதலில் பள்ளிக்கூடம் திறந்தாச்சு என்ற ஒரு கதையை சொல்லி இருந்தாராம். அதுல குஷ்பூ தான் ஹீரோயினியா கமிட் பண்ணி இருந்தாங்க. அந்த திரைப்படத்தின் கதை ஃபர்ஸ்ட் நைட் நடக்குமா? நடக்காதா என்பதுதானாம். ஆனால் அது சரியா தொடங்கல என்றதும் கார்த்திக்கிடம் "தெய்வ வாக்கு" கதையை மது சொல்லி இருந்தாரு. அதுபோல ரேவதி குறி சொல்ற பொண்ணு இந்த கதைக்கு குஷ்பூ செட் ஆக மாட்டாங்க என்று ரேவதியை நடிக்க வைத்திருந்தார்கள்.

நடிகர் கார்த்திக் டைரக்ட் செய்த படம்

அப்போது பொள்ளாச்சியில் சூட்டிங் நடந்தது. ஆனால் முதல் நாளிலேயே டைரக்டர் மது போதையில் உச்சத்தில் இருந்தாரு அதனால கார்த்திக் என்னோட முதல் படம் இப்படி ஆகிவிட்டது என்ற ரொம்ப பீல் பண்ணுனாரு. பிறகு தன்னுடைய அசிஸ்டன்ட் ஒருவரை வைத்து கார்த்திக்கே பிரம்மாண்டமாக டைரக்ட் பண்ணுனாரு. "பாட்டாலே சொல்லி அடிச்சேன்" என்ற பாடலை கூட கார்த்திக் தான் டைரக்ட் பண்ணி இருந்தாரு.

Karthik D Siva

கார்த்திக் திறமை

கார்த்திக்கிற்கு இவ்வளவு திறமை இருந்தது என்று எங்க எல்லாருக்கும் அப்போது தான் தெரிந்தது. சென்னைக்கு வந்து எடிட்டிங் எல்லாம் பார்த்தாரு. அப்புறம் கிளைமாக்ஸ் மற்றும் இரண்டு பாட்டு மட்டும் ஆர்வி உதயகுமார் டைரக்ட் பண்ணாரு. கார்த்திக் சார் எடுத்த ஷாட் எல்லாம் அந்த படத்தில் தனியாக தெரியும் என்று கார்த்திக் குறித்து சிவா பேசி இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+