மனோஜ்க்கு நடந்த பெரிய ஆபரேஷன்.. ரொம்ப கொடுமை.. 3 நாள் முன்னாடி கூட! தயாரிப்பாளர் உருக்கம்
சென்னை: இயக்குனர் பாரதிராஜாவின் மகனான மனோஜ் பாரதிராஜா கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மாரடைப்பால் காலமானார். அவர் பற்றி அவருடன் பழகிய பலரும் பல தகவல்களை பகிர்ந்து வருகிறார்கள். இந்த நிலையில் தயாரிப்பாளர் T. சிவா மனோஜ்க்கு நடந்த ஆபரேஷன் மற்றும் பாரதிராஜா பட்ட கஷ்டம் குறித்து கண்கலங்க பேசி இருக்கிறார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மனோஜ் பாரதிராஜாவின் இறப்பு செய்தி வந்ததும் ரசிகர்களும், திரை பிரபலங்களும் அதிர்ச்சியில் இருந்தனர். இது உண்மை செய்தியாக இருக்காது, இது வதந்தியாக தான் இருக்கும் என்று பலர் நம்பிய போதும் கூட கடைசியில் எது நடக்கக்கூடாது என்று நினைத்தார்களோ அதுவே நடந்து விட்டது. 87 வயதில் பாரதிராஜா தன்னுடைய மகனின் இறப்பை கண்டு துடிதுடித்து போயிருந்தார். இந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி கொண்டிருந்தது.

மனோஜ் பட்ட கஷ்டம்
அதுபோல பாரதிராஜா மற்றும் மனோஜ் இருவரும் ஏற்கனவே பேசிய பேட்டிகளும் பலரையும் உருக வைத்திருந்தது. தான் இயக்குனராக வேண்டும் என்று பல முயற்சிகள் செய்திருந்தாலும் தனக்கு சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை என்று எட்டு வருடங்களாக தான் பட்ட கஷ்டங்கள் பற்றி அவர் எமோஷனலாக பேசி இருந்தார். அந்த பழைய பேட்டி பலரையும் ஃபீல் பண்ண வைத்திருந்தது.
தயாரிப்பாளர் சிவா பேட்டி
அதுபோல தன்னுடைய மகன் இயக்குனராக வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் அவரை நடிகராக மாற்றி தான் தவறு செய்து விட்டேன் என்று பாரதிராஜாவும் ஃபீல் பண்ணி பேசிய வீடியோக்களும் இணையத்தில் வைரல் ஆனது. இந்த நிலையில் மனோஜ் மற்றும் பாரதிராஜா குறித்து தயாரிப்பாளர் சிவா எமோஷனலாக பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.
கஷ்டமான ஆபரேஷன்
அதில், மனோஜ்க்கு இந்த வயதில் இப்படி ஒரு நிலைமை வரும் என்று நாங்க யாருமே நினைச்சு பார்க்கவே இல்லை. அவருக்கு சில வாரங்களுக்கு முன்பு பெரிய ஆபரேஷன் செய்யப்பட்டிருந்தது. ஆபரேஷன் செய்யும் போது என்ன வேணாலும் நடக்கலாம் உயிரை ஒரு பெர்சன்டேஜ் தான் காப்பாற்ற முடியும் என்று சொல்லித்தான் ஆப்ரேஷன் செய்தார்கள். ஆனால் அப்போது கூட அவர் மீண்டும் உயிரோடு வந்துவிட்டார்.
குடும்பத்தினருக்கு அதிர்ச்சி
இனி எதுவுமே இல்லை என்று குடும்பத்தினரும் நிம்மதியாக இருந்தனர். அவருடைய இறப்புக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு மீண்டும் செக் அப்க்கு போயிருந்தார்கள். அப்போது கூட எல்லாம் நார்மலாக இருக்கிறது என்று கூறி இருந்தார்கள். இதனால் எதுவும் ஆகாது என்று குடும்பத்தினர் தைரியமாக இருக்கும்போது இவருக்கு இப்படி நடந்தது எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி விட்டது.
யாருக்கும் இந்த நிலை வரக்கூடாது
அவருடைய குடும்பத்தினரால் இதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. என்ன நடந்தது என்று புரியாமல் தான் இருந்தார்கள். பாரதிராஜா சார் மனோஜ் உடலை பார்க்க வந்த காட்சியை எங்களால் பார்க்க கூட முடியவில்லை. அதனால் நான் வெளியே போய்விட்டேன் பாரதிராஜாவுக்கு இருந்த ஒரே மகன் அவர் கண் முன்னே உயிர் அற்று இருப்பது எவ்வளவு பெரிய கொடுமை. இந்த நிலைமை எந்த எதிரிக்கும் கூட வரக்கூடாது.

குடும்பத்தின் மீது பாசம்
தன் மகன் மீது அவ்வளவு பாசம் வைத்திருந்தார். அப்பாவிடம் மனோஜ்க்கும் ரொம்ப மரியாதை உண்டு. எனக்கு வேணும் என்று கூட எந்த விஷயத்தையும் கேட்க மாட்டார். இது தர முடியுமா என்று ரெக்யூஸ்ட்டாக தான் கேட்பார். மனைவி மற்றும் பிள்ளைகள் மீது அவ்வளவு பாசமா இருந்தார். ஆனால் கடவுள் ஏன் இப்படி எடுத்துக்கிட்டாருன்னு தான் தெரியல.
மூன்று நாள் முன்பு நடந்தது
மனோஜ் இறப்பதற்கு மூன்று நாளைக்கு முன்னாடி எனக்கு ஒரு விஷயமா போன் பண்ணி இருந்தாரு. நான் அப்போ அவர்கிட்ட நீ பேசாத ரெஸ்ட் எடு உன் மனைவி கிட்ட போனை கொடு என்று சொல்லி அவங்க கிட்ட பேசி தான் அந்த பிரச்சனையை முடித்து வைத்தேன். எல்லா பிரச்சனையும் முடிந்து மீண்டு வந்து விட்டான் என்று நினைத்தோம். ஆனால் இப்படி ஆகிவிட்டது என்று தயாரிப்பாளர் சிவா வருத்தப்பட்டு இருக்கிறார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications