தயாரிப்பாளர் மகள் கல்யாண மேடையில் விஜய் செய்த செயல்! திகைத்த திருமண மண்டபம்! நடந்த சம்பவம் இதுதானாம்!
சென்னை: சில நாட்களுக்கு முன்பு பிரபல சினிமா தயாரிப்பாளர் டி சிவாவின் மகள் திருமண வரவேற்பில் நடிகர் விஜய் கலந்து கொண்ட செய்தி பெரிதாக பேசப்பட்டது. அப்போது விஜய் மற்றும் டி சிவா இருவரும் மாறி மாறி காதில் சில விஷயங்களை சொல்லி சிரித்துக் கொண்டிருந்தனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. அப்போது என்ன நடந்தது என்பது பற்றி டி சிவா பேசியிருக்கிறார்.
தயாரிப்பாளர் டி சிவா வேற யாரும் இல்லை நடிகர் விஜயகாந்த்தை வைத்து பூந்தோட்ட காவல்காரன் உட்பட பல படங்களை தயாரித்தவர் தான். அவருடைய ஒரே மகளின் திருமணம் தான் சென்னையில் பிரமாண்டமாக நடந்திருக்கிறது. இந்த திருமண பங்க்ஷனில் விஜய் கலந்து கொண்டது பெரிய அளவில் பேசுபொருளாக மாறி இருக்கிறது. காரணம் சமீபத்தில் காலமான ஏவிஎம் சரவணன் இறப்புக்கு கூட நேரில் செல்லாத விஜய் தயாரிப்பாளர் டி சிவாவின் மகள் திருமணத்திற்கு மட்டும் போயிருக்கிறாரே என்ற பேச்சும் இணையத்தில் எழுந்து வந்தது.

அதுபோல சிவாவின் தயாரிப்பில் விஜய் ஒரு படத்தில் கூட நடிக்காத நிலையில் மகள் கல்யாணத்திற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து வந்திருக்கிறாரே அதுவும் பெரிதாக எந்த ஏற்பாடும் செய்யாமல் எளிமையாக வந்து கலந்து கொண்டு போயிருக்கிறார். இது எதற்காக என்று பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில் அது குறித்து சிவா பேசி இருக்கிறார்.
அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனத்தை நடத்தி வரும் தனக்கு ஒரே ஒரு மகள்தான் இருக்கிறார். அவருடைய திருமணத்தை கோலாகலமாக நடத்த வேண்டும் என்று நான் நினைத்தேன். ஆனால் ஆடம்பர செலவுகளையும் தவிர்த்தேன். சுமார் 1500 பேருக்கு அழைப்பு விடுத்து திருமணத்தை நடத்தி திருமணத்திற்கு பிரபலங்கள் எல்லாம் வந்த நிலையில் இந்த திருமணம் பிரம்மாண்ட திருமணம் ஆகிவிட்டது என்று பேசி இருக்கிறார்.
அது மட்டுமல்லாமல் தயாரிப்பாளர் டி சிவா மற்றும் அருணா தம்பதியரின் மகள் தக்ஷிணா டாக்டராக இருக்கிறார். அவருக்கும் டாக்டர் சந்தீப் பிரபாகர் என்பவருக்கும் கடந்த மாதம் 27ஆம் தேதி மாப்பிள்ளையின் சொந்த ஊரான தஞ்சையில் திருமணம் நடந்திருக்கிறது. அந்த திருமணத்தில் ஒரு சில பிரபலங்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். அதிலும் நடிகர் சரத்குமார் தன்னுடைய மனைவியோடும், பிரபுவின் மனைவி உட்பட ஒரு சிலர் மட்டும் தான் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
பிறகு இந்த திருமண வரவேற்பை கடந்த வாரம் இறுதியில் சிவா ஏற்பாடு செய்திருக்கிறார். அதில் தான் பல பிரபலங்கள் நேரில் வந்து வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கிறார்கள். அப்போது விஜய் கலந்து கொண்டது குறித்து சிவா பேசும்போது தளபதி விஜய் சினிமா அரசியலில் பிசியாக இருக்கும் நிலையில் அவருக்கு பத்திரிக்கை வைக்கும் போது நீங்க வந்தா நல்லா இருக்கும்னு சொன்னேன். அது என்ன வந்தா.. நான் வரேன்னு சொன்னாரு.
அவர் எப்போதுமே சொன்னதை செய்யக்கூடியவர் அது சினிமாவில் இருக்கும் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். ஆனால் ஏதாவது சூழல் காரணமாக வராமல் விட்டுவிடுவார் என்று நினைத்தேன். ஆனால் ஷார்ப்பா வந்துவிட்டார் . அவர் வருவது என்னுடைய உறவினர்களுக்கோ, என் குடும்பத்தினருக்கோ தெரியாது. அது போல அவருடைய நிலைமை முன்பு போல இல்லை. அவருக்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் கூட எதையும் நான் செய்யவில்லையே என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.
அப்போது அவர் கண்டிப்பாக வருவார் என்று எனக்கு போன் வந்தது, ஏற்பாடுகளை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று சொல்லி இருக்கிறார்கள். அதேபோல காரில் வந்து இறங்கினார், மேடைக்கு வந்து மணமக்களை வாழ்த்தி விட்டு வேறொரு காரில் சென்று விட்டார் என்று டி சிவா பிஹைன் வுட்ஸ் சேனலில் பேசி இருக்கிறார்.
ஆனால் இந்த திருமணத்தில் ஹைலைட்டாக பார்க்கப்பட்ட விஷயம் என்னவென்றால் மேடையில் சிவாவும் விஜய்யும் ஏதோ பேசி சிரித்துக்கொண்டிருந்தார்கள். அதைப் பார்த்ததும் ரசிகர்கள் இவர்கள் என்னதான் பேசி இருப்பார்கள் என்று கேள்வி எழுப்பி வந்த நிலையில் அதற்கு சிவா விளக்கம் கொடுத்திருக்கிறார்.
அதாவது விஜய்யிடம் சொன்ன மாதிரியே வந்துட்டீங்க என்று சிவா கேட்டாராம். அதற்கு விஜய் சொன்னதை நான் கண்டிப்பாக செய்வேன்.. அது உங்களுக்கு தெரியாதா? என்று கூறினாராம். இதனால் தான் அந்த இடத்தில் இவர்கள் இருவரும் சிரித்துக் கொண்டிருந்தார்களாம்.
-
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி












Click it and Unblock the Notifications