சொத்து கேட்டு அஷ்டலட்சுமிநகர் பங்களாவில் சீறிய நடிகை வனிதா! பாவம் மஞ்சுளா விஜயகுமார், ஆகாஷ்: பிரபலம்
சென்னை: "தற்போது நான் எடுத்துள்ள படத்தில் ஒரு காட்சியையாவது, காப்பி என்று யாராவது நிரூபிக்க முடியுமா? அப்படி நிரூபித்தால் சினிமாவை விட்டே விலகுகிறேன். எந்த படத்திலிருந்தும் நான் காட்சியை சுருட்டவில்லை. கணவன் மனைவிக்குள் இருக்கும் மகிழ்ச்சியை காண்பித்திருக்கிறேன். இளையராஜா சார் தொடர்ந்த வழக்கை சட்டரீதியாக கவனித்து கொண்டிருக்கிறேன். எவ்வளவோ துரோகங்களை சந்தித்துவிட்டேன், இதையும் பார்த்துக் கொள்ளலாம். முன்பு போல இப்பொழுது நான் ஒரு பிரச்சனைக்காக உடைந்து போகவில்லை" என்று வனிதா நேற்றைய தினம் ஃபேஸ்புக்கில் கூறியிருந்தார். இந்நிலையில், விஜயகுமார், மஞ்சுளாவுக்கு ஆதரவாக மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.
Metro Mail என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்திருக்கும் பயில்வான் ரங்கநாதன், "வனிதா விஜயகுமார் பொய்களை பேசுபவர்.. தன்னுடைய அப்பா, அம்மா மீதே பொய்களை சுமத்தியவர்..

வனிதா ஒரு நல்ல நடிகை.. அதில் எந்த சந்தேகமுமில்லை.. டைரக்ஷனும் தன்னால் செய்ய முடியும் என்பதை சமீபத்தில் வந்த மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர் படம் மூலம் நிரூபித்துள்ளார்.. அடல்ட் & வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட படமும்கூட.,
சொத்து பிரச்சனை
சொத்துக்களை எனக்கு பிரித்து தந்துவிடுங்கள் என்று அஷ்டலஷ்மி நகர் பங்களா முன்பு சண்டை போட்டார் வனிதா.. இது அனைவருக்குமே தெரியும்.. அந்த பங்களாவில் நிறைய படங்களை ஷூட்டிங் எடுத்திருக்கிறார்கள். அந்த பங்களாவில்தான் விஜயகுமாரும், மஞ்சுளாவும் தங்கியிருந்தனர்..
அப்போது அப்பா என்றுகூட பார்க்காமல், விஜயகுமார் மீது வனிதா புகார் தந்தார்..மஞ்சுளா பற்றியும் பேசினார்.. இதனால் தான் பெற்ற மகள் இப்படி பேசுகிறாளே என்று மஞ்சுளா வருத்தப்பட்டார்.. பிறகு வனிதாவை தன்னுடைய மகளாகவே நினைக்கவில்லை என்றும் மஞ்சுளா, விஜயகுமார் இருவருமே சொல்லிவிட்டார்கள்..
ஹீரோவாகிறார் ஸ்ரீஹரி
அதற்கு பிறகு வனிதா, அவர்களின் வீட்டுக்கு போவதில்லை.. போகவும் முடியாது..காரணம்,3 பேரை திருமணம் செய்து விவாகரத்து செய்தார்.. இந்த விவாகரத்துக்கு காரணமே விஜயகுமார்தான் என்று ஒரு பெரிய குண்டை தூக்கி போட்டார்.. எந்த அப்பாவுக்காவது, பெற்ற மகளுக்கு துரோகம் செய்ய தோன்றுமா? அபாண்டமாக அவர்மீது பழியை போட்டார் வனிதா.
முதலில் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்தார்.. ஆகாஷ் மிகவும் நல்ல மனிதர்.. இவர்களுக்கு ஸ்ரீஹரி, ஜோவிகா என்ற மகன், மகள் இருக்கிறார்கள்.. இதில் ஸ்ரீஹரி, தன்னுடைய அப்பாவுடனே இருந்துவிட்டார்.. அதேபோல தாத்தா விஜயகுமார் வீட்டுக்கும் அடிக்கடி சென்றுவருவார்.. விரைவில் ஸ்ரீஹரி ஹீரோவாக நடிக்க போகிறார்..
தயாரிப்பாளர் ஜோவிகா
ஆனால், தன்னுடைய அம்மா வனிதா என்பதையே மறந்துவிட்டேன் என்றார்.. உடனே வனிதா, என் பையனே என்னிடம் பேச மாட்டேங்குறானே? என்று மிகவும் வருத்தப்பட்டது அனைவருக்குமே தெரியும்.
ஆனந்த ஜெயராமன் என்பவரை திருமணம் செய்து, ஜெயனிதா என்ற மகள் பிறந்தார்.. ஆனால், ஜெயனிதாவும் தன்னுடைய அப்பாவுடன் இருப்பதாகவே சொல்லிவிட்டார்.. இப்போது ஜோவிகா மட்டும் வனிதாவுடன் உள்ளார்.. ஜோவிகாதான் தற்போது எடுத்துள்ள படத்தின் தயாரிப்பாளர்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications