நடுராத்திரியில் படம் வேண்டான்னு பெட்டியோடு ராதிகா கிளம்பிட்டாங்க! காரணம் இதுதான்! புலியூர் சரோஜா ஓபன்
சென்னை: நடிகை ராதிகா சரத்குமார் பல வருடங்களாக சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தாலும் ஆரம்ப காலகட்டத்தில் தன்னுடைய முதல் படத்தில் முதல் நாள் டான்ஸ் ஆடியது தான் சினிமாவை விட்டு விலகிப் போவதாக பெட்டியோடு கிளம்பி போனதாக புலியூர் சரோஜா பேசியிருக்கிறார். அது என்ன நடந்தது என்பது பற்றி புலியூர் சரோஜா பேசியதை பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் கேமராவுக்கு முன்பு இருக்கும் பலர் தான் நமக்கு பரீட்சையமாக இருக்கும். ஆனால் கேமராவுக்கு பின்பு பலர் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக ஒரு பாடல் வெற்றி பெற வேண்டும் என்றால் அந்த பாடல் டான்ஸ் மாஸ்டர்களும் முக்கிய துணையாக இருக்கிறார்கள். பல பேரை ஆட வைத்த டான்ஸ் மாஸ்டர்கள் அவ்வளவு சீக்கிரமாக வெளியே தெரிவதில்லை.

அதுபோலத்தான் ரஜினி, கமல் போன்ற பலரையும் ஆடவைத்த புலியூர் சரோஜா பேரை மட்டும் சிலர் கேள்விப்பட்டிருக்கலாம். சமீபத்தில் அவர் ஒரு பேட்டியில் தன்னுடைய சினிமா வாழ்க்கை குறித்து பேசி இருக்கிறார். புலியூர் சரோஜாவின் கணவர் ஒரு நடிகர் தான். ஆரம்பத்தில் ஸ்கூல் படிக்கும்போது சர்க்கஸ் காட்சிகளை கற்றுக் கொண்டு அதன் மூலம் ஜெமினி ஸ்டுடியோவில் வேலைக்கு சேர்ந்து முதல் முறையாக மதன காமராஜன் என்ற திரைப்படத்தின் மூலம் புலியூர் சரோஜா சினிமாவில் அறிமுகமாகி இருக்கிறார்.
அதற்குப் பிறகு குரூப் டான்ஸர் ஆக பல திரைப்படங்களில் பணியாற்றிய புலியூர் சரோஜா அதற்குப் பிறகு பல நடிகர்களை ஆட வைத்து டான்ஸ் மாஸ்டராக இருந்திருக்கிறார். அந்த நேரத்தில் தான் நடிகை ராதிகா நடித்த கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தில் ராதிகாவுக்கு டான்ஸ் மாஸ்டராக புலியூர் சரோஜா தான் இருந்திருக்கிறார். முதல் படத்திற்கு நடிக்க வரும்போது ஹீல்ஸ் செருப்பு போட்டு கொண்டு கெத்தா நடந்து வந்தாராம். ஆனால் அவருக்கு டான்ஸ் சொல்லிக் கொடுத்ததும் முதல் நாளே இரவு எல்லோரும் தூங்கிக் கொண்டிருக்கும் போது பெட்டியை தூக்கிக்கொண்டு ராதிகா கிளம்பி விட்டாராம்.

அந்த நேரத்தில் பக்கத்தில் படுத்து இருந்த புலியூர் சரோஜா எங்கே போற என்று ராதிகா கையை பிடித்து கேட்டிருக்கிறார். அதற்கு ராதிகா எனக்கு முட்டி எல்லாம் ரொம்ப வலிக்கிறது. நான் எங்க ஊருக்கே போயிடுறேன். எனக்கு இந்த சினிமா சரிப்பட்டு வராது என்னால் டான்ஸ் ஆட முடியாது என்று சொல்லிவிட்டாராம். அதற்கு புலியூர் சரோஜா நான் உனக்கு எளிமையா டான்ஸ் சொல்லித்தாரேன் நீ இதற்காக எல்லாம் பயந்து போகக்கூடாது என்று பிடித்து வைத்திருக்கிறார்.
அந்த நேரத்தில் ராதிகாவின் அம்மா போய் தைலம் எல்லாம் வாங்கிட்டு வந்து ராதிகாவிற்கு தேய்த்து விட்டாராம். அடுத்த நாள் காலையில் ஜிகு ஜிகு என்ற டிரஸ், பரதநாட்டிய டிரஸ் போன்றவற்றை காட்டி ராதிகாவின் மனதை மாற்றினேன். அதற்கு பிறகு "மாஞ்சோலை கிளி தானே" என்ற பாடலுக்கு பரதநாட்டிய ஸ்டெப் சொல்லிக் கொடுக்கும் போது கொஞ்சம் கஷ்டப்பட்டார். ஆனால் ராதிகா எளிமையாக அதை புரிந்து கொண்டார்.

அதில் கிளி போல கைகளை வைக்கும் இடத்திலும் ராதிகா திணறினார். அதற்கு பிறகு அதற்குள்ள எளிமையான வழிகளை சொன்னதும் ராதிகா கற்றுக்கொண்டார். ஆனால் இன்று சினிமாவில் உச்சகட்ட நடிகர்கள் ஒருவராக ராதிகா இருக்கிறார். ஆரம்பத்தில் டான்ஸ் ஆட அவ்வளவு கஷ்டப்பட்டார். இந்த சினிமாவே வேண்டாம் என்று போய்விட முடிவெடுத்திருந்தார். நான் அன்று விட்டு இருந்தால் அவர் பெட்டியோடு கிளம்பி போயிருப்பார் என்று சிரித்தபடியே அந்த பெட்டியில் புலியூர் சரோஜா பேசியிருக்கிறார்.
ராதிகாவுக்கு பெரிய அளவில் பிரபலத்தை கொடுத்த "கிழக்கே போகும் ரயில்" திரைப்படத்தில் இடம்பெற்ற எல்லா பாடல்களும் பெரிய அளவில் ஹிட்டானது. அதிலும் அவருடைய அறிமுக பாடலான "பூவரசம் பூ பூத்தாச்சு" என்ற பாடல் பெரிய அளவில் அந்த நேரத்தில் பலரால் ரசிக்கப்பட்ட பாடல்களில் ஒன்றாகும். அந்த பாடல்களுக்கு டான்ஸ் ஆடும் போதும் கூட புலியூர் சரோஜா ராதிகாவிற்கு பல நுணுக்கங்களை சொல்லிக் கொடுத்ததாகவும் அதை ராதிகா சரியாக செய்ததால் தான் அந்த பாடல் வெற்றி அடைந்தது என்றும் கூறியிருக்கிறார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications