Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரச்சிதா மகாலட்சுமி ஆபாசமா நடிச்சிட்டு தத்துவம் வேற.. ஃபயர் படத்தில் பணம் வாங்காமல் சமூகசேவை? பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஃபயர் படத்தை பொழுதுபோக்கு என்று சொல்ல முடியாது.. அந்தக்கால மலையாள படம் போலவே இருக்கிறது இந்த ஃபயர் படம்.. மெசேஜ் இல்லை.. எதிக்ஸ் இல்லை.. கருத்தும் இல்லை.. 4 விதமான பெண்களையும் வலையில் வீழ்த்துவதுதான் கதையா? என்று விமர்சனம் செய்துள்ளார் மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா.

BBTCinema என்ற சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா, "உண்மை சம்பவத்தின் அடிப்படையில், ஃபயர் படம் எடுக்கப்பட்டதாக சொல்கிறார்கள். நாகர்கோவில் காசியை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.. ஆனால், இது பழிவாங்கும் கதையாகவே உள்ளதே தவிர, படத்தில், பெரிய மெசேஜ் எதுவுமே சொல்லவில்லை..

Television Rachitha mahalakshmi Fire

ஆபாச காட்சிகள் இந்த படத்தில் தூக்கலாகவே இருக்கு.. ஆனால், அவ்வளவு தூக்கலாக ஆபாசம் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை.. பாபநாசம் படத்தை இங்கு நாம சொல்ல வேண்டியிருக்கிறது.

பாபநாசம் தந்த சமூக கருத்து

தன்னை வீடியோ எடுத்து மிரட்டும் இளைஞரை, அப்பெண்ணும், தாயும் சேர்ந்து கொன்றுவிடுகிறார்கள். அதை கமல் எப்படி மறைக்கிறார் என்று சொல்லப்பட்டிருக்கும்.. அதுமட்டுமல்லாமல், இதை அந்த பையனின் பெற்றோர் எப்படி கையாள்கிறார்கள்? அந்த முடிவை எப்படி ஏற்கிறார்கள்? மகனின் தவறையும் நினைத்து வருந்துவது என்ன? இதையெல்லாம் காட்டியிருப்பார்கள்.

ஆனால், ஃபயர் படத்தில் அப்படி எந்த பெற்றோர்களுமே வருத்தப்படுவது கிடையாது.. இன்னும் சொல்லப்போனால், பாபநாசம் படத்திலிருந்து லேசாக கடன் வாங்கியதுபோல இந்த ஃபயர் படம் இருக்கிறது.

100 பெண்களும் பலவீனமானவர்களா

100 பெண்களும் எப்படி ஏமாற முடியும்? பெண்கள் என்றாலே பலவீனமானவர்களாக இந்த படத்தில் காட்டுகிறார்கள்.. ஹீரோவிடம், அத்தனை பெண்களும் சபலப்படுவதுபோல காட்டுகிறார்கள். பெண்கள் என்றாலே போகப்பொருளாக அந்த படத்தின் ஹீரோவுக்கும், ஹீரோவை பார்த்ததுமே பெண்களுக்கு சபலம் இருப்பதுபோலவும் காட்டப்படுகிறார்கள்.. அல்லது எதிர்த்து போராட முடியாமல் தூக்கில் தொங்குகிறார்கள்.

பணத்துக்காக அப்படி நடிக்கவில்லை என்கிறார் ரச்சிதா.. அப்படியென்றால் சமூகசேவையா நினைச்சாங்களாமா? ஆபாசமா நடிச்சிட்டு தத்துவம் வேற.. பணம் வாங்கிட்டுதானே நடிச்சாங்க? அப்பறம் எதுக்கு இப்படியொரு வார்த்தை?

ரச்சித்தா உட்பட பல நடிகைகள் ஆபாசமாகவே நடித்திருக்கிறார்கள். தியேட்டரே நிசப்தம் ஆகிவிட்டது.. பாபநாசம் படத்தை குடும்பத்தோடு பார்த்தோம்.. ஆனால், இந்த ஃபயர் படத்தை குடும்பத்தோடு பார்க்க முடியுமா?

எதுக்கு 4 பெண்களின் ஆபாச காட்சிகள்

சிவப்பு ரோஜாக்கள் படத்தில், வடிவுக்கரசி கேரக்டரை மட்டும்தான் குத்தி கொலை செய்வதாக காட்டியிருப்பார்கள்.. அந்த படம் முழுக்க கொலைகள் நடந்தாலும், எந்த பெண்களையும் அதில் கொலை செய்வதை காட்ட மாட்டார்கள். அதுபோல, ஃபயர் படத்தின் ஹீரோ, பெண்களை மயக்கி வீடியோ எடுத்து மிரட்டுவவதை சொல்வதற்கு ஒரு காட்சி போதுமே.. எதுக்காக 4 பெண்கள்? 4 பெண்களையும் ஆபாசமாக காட்டவேண்டிய அவசியம் என்ன?

ஆக, இந்த படத்தை பொழுதுபோக்கு என்றும் சொல்லமுடியாது.. அந்தக்கால மலையாள படம் போலவே இருக்கிறது இந்த ஃபயர் படம்.. ஃபயர் படத்தில் மெசேஜ் இல்லை.. எதிக்ஸ் இல்லை.. கருத்தும் இல்லை.. 4 விதமான பெண்களையும் வலையில் வீழ்த்துவதே கதை.. இதற்காக 4 பெண்களும் தனித்து போராடவில்லை. அப்போதும் ஆணின் துணையையே நாடுகிறார்கள்.. அப்படிப்பட்ட பெண் பித்தனை, போலீஸார் கைது செய்து, சட்டத்தின் முன்பு நிறுத்தி தண்டிக்கிறார்களா? என்றால் அதுவும் இல்லை.

இதுதான் சமூக கருத்தா

கடைசியில் போலீஸே ஹீரோவை கொன்றுவிடுகிறது.. சென்சார் விதிகளுக்கு உட்பட்டு, இந்த படம் தற்போது வெளிவந்துள்ளது.. ஆனால், இதில் சமூகத்துக்கு என்ன கருத்து சொல்லப்பட்டிருக்கிறது? என்பதை சென்சார் போர்டும் கவனித்திருக்கணும்.

ஒரு போலீஸ் அதிகாரியே சட்டத்தை மீறி கொலை செய்கிறார்.. இதுதான் கருத்தா? சட்டத்துக்கு உட்பட்டு நடக்க வேண்டியவர்கள்தான் காவல்துறை.. நாம் அனைவருமே காவல்துறையை நம்பிதான் இருக்கோம்.. அப்படியானால், ஃபயர் படம் கருத்து சமூகத்துக்கு சரியாக இருக்காது என்பதே என் கருத்து" என்று கூறியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+