நீதிமன்ற தீர்ப்பு..! கணவரோடு வாழ்க்கை குறித்து சூசகமாக பதிவு வெளியிட்ட ரச்சிதா
சென்னை: நடிகை ரச்சிதா இனி கணவரோடு சேர்ந்து வாழ வாய்ப்பில்லை என்பதை சமூகவலைதளத்தில் சூசகமாக பதிவு வெளியிட்டு தெரிவித்து இருக்கிறார்.
மும்பை நீதிமன்றம் அளித்த தீர்ப்பை பகிர்ந்து ரச்சிதா தன்னுடைய மகிழ்ச்சியை தெரிவித்து இருக்கிறார்.
ஏற்கனவே ரச்சிதா ஒரு குழந்தையை தத்தெடுத்து கொள்ள வேண்டும் என்று ஆசையை தெரிவித்து இருந்தார்.
தற்போது அதற்கான வழி கிடைத்து விட்டது என்று கூறி இருக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் மூலம் அறிமுகமான ரச்சிதா மகாலட்சுமி அந்த சீரியலில் அவரோடு நடித்த தினேஷ் கார்த்திக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டிருந்தார். இவர்களுடைய திருமண வாழ்க்கை பல வருடங்களாக மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த நிலையில் தற்போது சில மாதங்களாகவே இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
பிரிந்து வாழ்ந்து வரும் நிலையிலும் தினேஷ் சமூக வலைத்தளங்களில் பேட்டி கொடுத்திருந்தார். அதில் இருவருக்கும் இருக்கும் பிரிவு தற்காலிகமானது தான் விரைவில் நல்ல முடிவு கிடைக்கும். இருவரும் மனம் விட்டு பேசினால் பிரச்சனை தீர்ந்துவிடும். என்னுடைய கோபத்தினால் என்னுடைய வாழ்க்கை இப்படி ஆகிவிட்டது என்றெல்லாம் பல தகவல்களை கூறியிருந்தார்.
இதுபோல ரச்சிதா பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போது, முதல் நாளிலிருந்து கடைசி வரைக்கும் அவருக்கு தன்னுடைய வாக்குகளை செலுத்தி ஆதரவையும், ரச்சிதா உடன் நல்லபடியாக பழகும் நண்பர்களுக்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்து, ரச்சிதாவிடம் அளவுக்கு அதிகமாக பழகிய ராபர்ட் மாஸ்டரை திட்டியும் அவருக்கு வார்னிங்கும் கொடுத்திருந்தார்.

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு எப்படியும் இவர்கள் இருவரும் சேர்ந்து விடுவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தது, இப்ப வரைக்கும் நடக்காமல் இருக்கிறது. இந்த நிலையில் தற்போது ரச்சிதா ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டு தன்னுடைய மகிழ்ச்சியை தெரிவித்து இருக்கிறார். அதில் தற்சமயம் மும்பை நீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஒன்றை பகிர்ந்து இருக்கிறார். அதில் தனியாக வாழும் பெண்களும் வேலை செய்யும் பெண்களும் இனி குழந்தையை தத்து எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவிப்பை பகிர்ந்து, இது போதும். இனிமேல் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று பதிவிட்டு இருக்கிறார்.
ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும்போது ரச்சிதா விக்கிரமனிடம் நான் என்னுடைய 35 வயதில் தான் ஒரு குழந்தையை தத்து எடுப்பேன் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஆதரவற்றோர் இல்லத்திற்கு சென்ற ரச்சிதா குழந்தை என்றாலே எல்லா பெண்களுக்கும் இருக்கும் ஆசைதான் எனக்கும் குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும். அது பெண் குழந்தைகள் என்றால் நான் வீழ்ந்து விடுவேன். குழந்தைகளை எப்படி பார்க்கிறேனோ அது போல் தான் இங்கு இருக்கும் பெரியவர்களையும் பார்க்கிறேன் என்று பேசி இருந்தார்.
-
வாழ்க்கையிலேயே கொடுமையான விஷயம் இதுதான்.. இதை மட்டும் யாரும் பண்ணாதீங்க! உருக்கமாக பேசிய செல்வராகவன் -
சிறகடிக்க ஆசை: ஆந்திரா வரை சென்று ரேகாவை மீட்ட முத்து! உயிரை பணயம் வைத்த மீனா... அதிரடி திருப்பம் -
Blast OTT release: ஓடிடியில் வரும் "பிளாஸ்ட்” படம்.. அதுவும் எதில், எப்போ? பார்க்கலாம்.. வெளியான தகவல் -
அப்துல் கலாம் சொன்ன ஒரு விஷயத்தை பாரதிராஜா செய்திருந்தால்.. இந்த பிரச்சனை வந்திருக்காதோ? ரசிகர்கள் உருக்கம் -
வீடியோ எடுத்து மிரட்டுகிறார்.. நாஞ்சில் விஜயன் மீது புகார் கொடுத்த டிக் டாக் பிரபலம்.. அடுத்த பஞ்சாயத்து -
சிறகடிக்க ஆசை: மனோஜ் சொன்னதை கேட்டு கோபப்பட்ட விஜயா.. உயிரை பணயம் வைக்கும் முத்து! கதையே மாறிப்போச்சு -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ்












Click it and Unblock the Notifications