சின்மயி பாட நான் தடை போட்டேன்னா? அங்க நடந்த கதையே வேற.. ராதாரவி மீண்டும் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் ராதா ரவி சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது பாடகி சின்மயி பாடுவதற்கு தடை விதித்தது நான் அல்ல, அங்கு நடந்த கதை வேறு என்று விளக்கம் கொடுத்திருக்கிறார். சில வருடங்களாகவே சின்மயி பாடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது அதற்கு காரணம் ராதாரவி தான் என்று பரவி வரும் சர்ச்சைகளுக்கு ராதாரவி இப்போது விளக்கம் கொடுத்திருக்கிறார்.

பாடகி சின்மயி சமீபத்தில் தக் லைஃப் இசை வெளியீட்டு விழாவில் பாடிய முத்தமழை பாடல் வேற லெவலில் சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆனது. இன்ஸ்டாகிராம் பக்கம் போனாலே இந்த பாடல் தான் இப்போது ரீல்ஸாக வலம் வந்து கொண்டிருக்கிறது. இந்த தக் லைஃப் படத்தின் முத்தமழை பாடலை ஆரம்பத்தில் தீ தான் பாடி இருந்தார். ஆனால் தக் லைஃப் இசை வெளியீட்டு விழாவில் தீ கலந்து கொள்ள முடியாத சூழ்நிலையால் அவருக்கு பதிலாக சிம்மையி அந்த பாடலை பாடியிருந்தார்.

Radha Ravi Chinmayi

முத்தமழை பாடல்

இருவருடைய பாடலும் வெவ்வேறு விதமாக இருந்தாலும் தீ பாடலை விட சின்மயி பாடல் வேற லெவலில் இருக்கிறது என்று பலர் பாராட்டி வந்தனர். ஆனால் அதற்கு சின்மயி மறுப்பு தெரிவித்து இருந்தார். இந்த பாடலை தீ வேற விதமாக பாடி இருப்பார். சின்மயி வெர்சஸ் தீ என்று சோசியல் மீடியாவில் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது, ஆனால் நான் அதற்கு தீயிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். தீ இன்னும் சில வருடங்களில் 100 ஸ்ரேயா கோஷலையும் 100 சின்மயியையும் விடவும் ஸ்பெஷலாக பாடுவார் என்று கூறியிருந்தார்.

பாடகி சின்மயி பற்றிய சர்ச்சை

அதுபோல சின்மயி பாடுவதற்கு தடை விதிக்கப்பட்டது கூட இப்போது மீண்டும் பேசப்பட்டது. சில வருடங்களுக்கு முன்பு சின்மயி டப்பிங் யூனியனுக்கு ஆண்டு சந்தாவை செலுத்தவில்லை என்று சொல்லி சின்மயி பாடுவதற்கு மற்றும் டப்பிங் பேசுவதற்கு தடை விதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இது குறித்து பல இடங்களில் சின்மயி வருத்தத்தோடு பேசி இருந்தார். இப்போது சின்மயி பாடல் ட்ரெண்டானதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் சின்மயிக்கு சப்போர்ட் கொடுத்து வருகிறது.

சின்மயி பற்றி ராதாரவி பேட்டி

இந்த நிலையில் சின்மயிக்கு அப்போது நடிகர் சங்கம் மற்றும் டப்பிங் யூனியன் தலைவராக இருந்த ராதாரவி தான் பாடுவதற்கு தடை விதித்தது என்ற பேச்சு எழுந்து வரும் நிலையில் இதுகுறித்து சமீபத்தில் ராதாரவி விளக்கம் கொடுத்திருக்கிறார். அதில் அவர் பேசும்போது, "சின்மயிக்கு பாட்டு பாட நான் தடை போட்டேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அது உண்மை கிடையாது. நான் டப்பிங் யூனியனுக்கு தான் தலைவராக இருந்தேன். ஆனால் அவர் பாடுவதற்கு தடை விதித்தது மியூசிக் யூனியனிலிருந்து தான்.

ராதாரவி விளக்கம்

மியூசிக் யூனியனுக்கும் டப்பிங் யூனியனுக்கும் சம்பந்தம் கிடையாது. 200 யூனியன் இருக்கும் இடத்தில் டப்பிங் யூனியன் வேறு மியூசிக் யூனியன் வேறு. இது தெரியாதவர்கள் ஏதோ பேசிக்கொண்டு போகிறார்கள், அது எப்படி வேண்டும் என்றாலும் அவர்கள் பேசிக்கொண்டு போகட்டும். எல்லாரும் இஷ்டத்துக்கு ஏதோ சொல்லிக் கொண்டு போறாங்க. அதற்கு நான் என்ன சொல்ல முடியும்? தூங்குறவங்கள தான் எழுப்ப முடியும். தூங்குற மாதிரி நடிக்கிறவங்கள எழுப்ப முடியாது. அதே மாதிரி தான் ஒவ்வொரு இடத்திலும் இதுபோலத்தான் கேள்வி கேட்டுகிட்டே இருக்காங்க. பாட்டு பாடுவதற்கு தடை என்று போட்டு இருந்தால் அது மியூசிக் யூனியனில் தானே கேட்க முடியும்" என்று அந்த பேட்டியில் ராதாரவி பேசி இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+