“அவரே ரத்தத்தை நம்பி இருக்கும்போது..” - ரஜினியை பங்கமாக கலாய்த்த ராதாரவி! கடைசியில் இப்படி சொல்லிட்டாரே!
சென்னை: தமிழ் சினிமா உலகில் நடிப்பால் மட்டும் அல்லாமல் சர்ச்சையான பேச்சால் எப்போதும் கவனத்தை ஈர்த்து வருபவர் நடிகர் ராதாரவி. சமீபத்தில், பிரஷாத் ராமன் இயக்கத்தில், அவர் நடித்துள்ள 'தாவூத்' படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. அந்த விழாவில் ராதாரவி பேசிய பேச்சு, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களிடையே பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராதா ரவி பேச்சு
'தாவூத்'விழாவில் பேசிய ராதாரவி, "நான் இரண்டு காலிலும் ஆபரேஷன் பண்ணி, இரண்டு வருஷம் படுக்கையில் இருந்தேன். சினிமாவில் இருக்கிறவங்க எப்பவும் சுறுசுறுப்பா இருக்கணும், இல்லைன்னா செத்துப் போயிட்டாங்கன்னு சொல்லி வேற ஆளைப் போட்டுருவாங்க. இந்த படக்குழுவினர் நல்லவங்க. இந்த படத்துல பேய் இல்லை, ஆனா வெட்டுக்குத்து இருக்கு. ஏன்னா, இந்தப் படம் வெற்றி பெறணும்னா அதுதான் தேவை" என்று தனது பாணியில் ஆரம்பித்தார்.
பிறகு, "ஆளான பட்ட ரஜினி படத்துலயே வெறும் ரத்தமா இருக்கு. கூலி படத்துல வன்முறையின் உச்சம் இருக்கு. அதனாலதான் அந்தப் படத்துக்கு 'ஏ' சர்டிபிகேட் கொடுத்திருக்காங்க. அவரே ரத்தத்தை நம்பி இருக்கும்போது, நம்மலாம் என்ன? படம் ஆரம்பத்துல இருந்தே ரத்தத்தைக் காட்டலாம், தப்பில்ல" என்று பேசியதுதான் இப்போது சமூக வலைத்தளங்களில் விவாதமாகி வருகிறது.ராதாரவி சொல்வதைப் பார்த்தால், இன்று ரத்தம், வன்முறை இல்லாத படங்கள் ஓடாது என்று சூசகமாகச் சொல்கிறார்.
சர்ச்சைகளின் நாயகன்
நடிகர் ராதாரவி, பிரபல நடிகர் எம்.ஆர்.ராதாவின் மகன். தன் தந்தையைப் போலவே, எந்தவித சமரசமும் இல்லாமல், மனதில் பட்டதை தைரியமாகப் பேசுவதில் இவருக்கு இணை இவர்தான். வில்லன், குணச்சித்திர நடிகர், அரசியல்வாதி எனப் பல முகங்கள் இவருக்கு உண்டு. இவருடைய பேச்சுக்கள் பெரும்பாலும் சர்ச்சையாகி, பலமுறை இவரைப் பிரச்சினையில் சிக்க வைத்துள்ளன. சில ஹீரோயின்கள் பற்றி இவர் பேசியது, அரசியல் கருத்துக்கள் என இவரது சர்ச்சைகள் ஒரு பெரிய லிஸ்ட். ரஜினிகாந்த் பற்றிப் பேசுவதும் இவருக்குப் புதிதல்ல. கடந்த காலங்களில் ரஜினி குறித்துப் பலமுறை வெளிப்படையாகப் பேசி இருக்கிறார். சில சமயங்களில் பாராட்டுவார், சில சமயங்களில் விமர்சிப்பார்.
ரஜினி என்னும் ஆக்ஷன் சிம்பல்
ராதாரவி குறிப்பிட்டுப் பேசியதுபோல, ரஜினிகாந்த் 75 வயதிலும் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார். கடந்த 50 ஆண்டுகளாகப் படங்களில் நடித்து வரும் அவர், இன்றும் இளம் நடிகர்களுக்குக் கடும் போட்டியாளராக விளங்குகிறார். 80-களில், 'கறுப்பு நிறம், நடுத்தர உயரம்' என்ற ஹீரோ அடையாளத்தை உடைத்து, ஸ்டைல் மன்னனாக ரசிகர்களைக் கவர்ந்தார்.
'முரட்டுக்காளை' படத்தில் ஒரு ஆக்ஷன் ஹீரோவாக உருவெடுத்த பின்னர், அவரது படங்களில் சண்டைக் காட்சிகளுக்கு எப்போதும் தனி இடம் உண்டு. சமீபத்தில் வெளியான 'கூலி' படத்திலும், வன்முறையின் உச்சம் இருந்தாலும், படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் அதை முறியடித்துவிட்டது. ராதாரவியின் பேச்சு ஒருபுறம் இருந்தாலும், ரஜினியின் பெயர், இன்றும் வசூலிலும், ஆக்ஷனிலும் ஒரு பிராண்ட் என்பதை அது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கிறது.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications