விஜிக்கு ஓகே.. ராதிகாவுக்கு சத்தியமாக இந்த கேரக்டர் செட்டாகாதுங்க!
சென்னை: சன் டிவியின் சந்திர குமாரி சீரியலில் ராதிகாவுக்கு பதிலாக சந்திராவாக இப்போ விஜி சந்திரசேகர் நடிக்கறாங்க.
சந்திரகுமாரி ரேட்டிங் வரலேன்ன உடனேயே, சீரியலுக்கான நேரத்தை மாற்றி அறிவிச்சது சன் டிவி. அதுக்கு பிறகு சந்திரகுமாரியில் நடிக்க ராதிகாவுக்கு விருப்பம் இல்லாம போச்சு.
கதைப்படி காணாமல் போனவர், நிஜத்திலும் சந்திரகுமாரி சீரியலில் நடிக்காமல் விலகிட்டார். இவருக்கு பதிலாக இப்போ சந்திராவா விஜிதான் நடிக்கிறார்.

அப்பா மேல பாசம்
வந்த ரெண்டு பொண்ணுல பெரிய பொண்ணான சீதா சந்திராவின் பொண்ணு அஞ்சலிகிட்ட அப்பாவை பத்தினை பெருமை, பாசத்தை எடுத்து சொல்றா. அஞ்சலிக்கு அப்பா மேல பாசம் வந்துருது. அப்பாவும் பொண்ணும், அம்மா சந்திராவுக்கு தெரியாம அடிக்கடி சந்திக்க ஆரம்பிக்கறாங்க.

அப்பாவுக்கு ஆக்சிடென்ட்
இது அம்மா சந்திராவுக்கு தெரிஞ்சு பேசக் கூடாதுன்னு அஞ்சலியை கண்டிக்கறாங்க. இதுக்கு நடுவுல அஞ்சலியை காப்பாத்த ரிஸ்க் எடுத்த அப்பாவுக்கு ஆக்சிடென்ட் ஆகிறது.

அதோட மறந்துடு
அப்பாவுக்கு அஞ்சலி ரத்தம் குடுக்கறா..அப்பாவுக்கு ஆக்சிடென்ட் ஆச்சு..ரத்தம் குடுத்தே..அதோட மறந்துடு..இனி அப்பாவை பார்க்க போக கூடாதுன்னு அம்மா சந்திரா கண்டிக்கறாங்க.

அடைக்கலம்
உங்க உயிரை காப்பாத்தினாருன்னு தானே அவரு பெத்த ரெண்டு பொண்ணுங்களுக்கு நம்ம வீட்டில் அடைக்கலம் குடுத்து இருக்கீங்க .என் உயிரை காப்பாத்தின அப்பாவுக்கு நான் நன்றியா இருக்க வேணாமான்னு கேட்டுட்டு அப்பாவைப் பார்க்கப் போயிடறா

அப்பா பாசம்
சந்திரா அம்மா கோபத்தில் இருக்க, அங்க வந்த சீதா, நீங்க அஞ்சலி அக்காவைப் பத்தி தப்பா நினைச்சுட்டீங்கம்மா... அவங்க உங்களை ஒரு காலத்திலும் விட்டுத் தர மாட்டாங்க. அஞ்சலி அப்பா அஞ்சலி மேல வச்சிருக்கற பாசம் உண்மையானதுன்னு சொல்றா.

பொண்ணு பாவம்
அதுக்கு சந்திரா கன்னத்துல அறைஞ்சுடறாங்க.. அந்த பொண்ணு பாவம் அழுதுகிட்டே போகுது. இதுதான் ராதிகாவுக்கு செட்டாகாத ஒரு கேரக்டர். இப்படி எடுத்தோம் கவுத்தோம்னு அடுத்த வீட்டு பொண்ணை கை நீட்டி அடிக்க மாட்டாங்க..

விவேகம்
எப்போதும் நிதானமான பெண் கேரக்டரில்தான் ராதிகா நடிப்பாங்க.பொறுமை, விவேகம் எல்லாமே அவங்க நடிக்கற ரோலில் இருக்கும். இதை எல்லாம் சந்திர குமாரி சீரியலில் சந்திராவிடம் பார்க்க முடியலை.
அதனாலதான் சொல்றோம்...இது ராதிகாவுக்கு சுத்தமா செட்டாகாதுன்னு...
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications