படுகொலை செய்றாங்க.. முற்றுப்புள்ளி வேண்டும்.. தமிழக அரசுக்கு வேண்டுகோள் வைத்த ராதிகா.. மீனா அதிரடி
சென்னை: நடிகை ராதிகா சரத்குமார் தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் ஒரு பதிவு வெளியிட்டிருக்கிறார். சில youtube சேனல்களில் தவறாக நடிகைகள் மற்றும் நடிகர்களை பற்றி தகவல்கள் தெரிவித்து வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசு மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இடமும் வேண்டுகோள் வைத்து இருக்கிறார். அதற்கு நடிகை மீனா தன்னுடைய கருத்தை தெரிவித்து இருக்கிறார். இதுதான் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
சமீப காலமாகவே youtube சேனல்களில் ஒரு சிலர் பல பிரபலங்கள் பற்றி பல்வேறு தகவல்களை பேசி வருகிறார்கள். இதையும் பல மில்லியன் கணக்கான மக்கள் பார்த்து கமண்ட்டுகளும் தெரிவித்து இருக்கிறார்கள். இதனால் you tube சேனல்கள் நடத்துபவர்களுக்கு வருமானம் அதிகரிக்க தொடங்கியதும் அடுத்தடுத்து பல்வேறு பிரபலங்கள் பற்றி வாய்க்கு வந்ததை எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இது குறித்து ஒரு சில பிரபலங்கள் தங்களுடைய கோபத்தை காட்டிக் கொண்டிருந்தாலும் இந்த மாதிரி கருத்து தெரிவிப்பவர்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றனர். இந்த நிலையில் தான் பிரபல தெலுங்கு நடிகர் தன்னை பற்றி தவறாக யூடியூப் சேனல்களில் பதிவு செய்தவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளார். இதுபோல தமிழ் நடிகர்கள் நடிகைகள் மீது அவதூறாக youtube சேனலில் பதிவு செய்பவர்களின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகை ராதிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டு இருக்கிறார்.
பிரபல தெலுங்கு நடிகரான விஷ்ணு மஞ்சு தன்னுடைய பர்சனல் விஷயங்களை பற்றி மோசமாகவும், அவதூறாகவும் வீடியோவாக பதிவு செய்த youtube சேனல்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளார். இது தெலுங்கு திரை உலகத்தில் அதிகமாக பேசப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த செய்தியை அவருடைய instagram பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். இந்த பதிவை நடிகை ராதிகா ஸ்கிரீன்ஷாட் ஆக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
அதில் நடிகர் விஷ்ணு மஞ்சுவை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். இது போல் தமிழ் நடிகர்கள் சங்கமும் விழித்துக் கொள்ள வேண்டும். தங்களை தாங்களே பத்திரிகையாளர்கள் என்று நினைத்துக் கொள்ளும் சிலர் பயனற்ற தகவல்களை திரையுலகினரின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிய பொய்களையும் மிகைப்படுத்திய செய்திகளையும் வெளியிட்டு தனிப்பட்ட ஒருவரின் குணாதிசயங்களை படுகொலை செய்து வருகின்றனர்.
கண்டிப்பாக இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். குறிப்பாக தமிழக அரசு மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மத்திய அரசுடன் இணைந்து இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறேன் என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவுக்கு நடிகை மீனா ராதிகா சொன்ன கருத்தை நான் ஆதரிக்கிறேன் பொறுப்பற்ற சில யூடியூபர்கள் மற்றும் சில வெறுப்பாளர்கள் வரம்பு மீறி சில விஷயங்களை கூறி வருகின்றனர்.
முட்டாள்தனமான சில விஷயங்களை பரப்புகிறார்கள். பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். குறிப்பாக பெண்களை மோசமாக தாக்குகின்றனர். எந்தவித ஆதாரமும் இல்லாமல் ஒரு தனிப்பட்ட நபர்கள் மீது குற்றச்சாட்டுகளை வைக்கக்கூடாது.. இந்த மாதிரி அடுத்தவர்களைப் பற்றி தவறாக பேசும் youtube சேனல்களுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர வேண்டும் என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவுகளுக்கு இணையத்தில் பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். நீங்கள் இது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? உங்கள் கருத்தை தெரிவிக்கலாம்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications