ராதிகாவின் பிறந்தநாளுக்கு மகன் கொடுத்த பரிசு! ஒரு அம்மாவுக்கு இதை விட வேற என்ன வேணும்! மகிழ்ச்சியில் குடும்பம்
சென்னை: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழித் திரைப்படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் கலக்கிய நடிகை ராதிகாவின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த இனிய நாளில் அவரது கணவர் சரத்குமார் மற்றும் பிள்ளைகள் வரலட்சுமி, ரேயான், ராகுல் ஆகியோர் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ராதிகாவின் வாழ்க்கை
பிரபல நடிகர் எம்.ஆர். ராதாவின் மகளான ராதிகா 1978ஆம் ஆண்டு இயக்குநர் பாரதிராஜாவின் 'கிழக்கே போகும் ரயில்' திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். அவரது கிராமத்து அழகு மற்றும் இயல்பான நடிப்பு ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. பல வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். அவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சரத்குமார் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் சவால்கள்
ராதிகா தனது தனிப்பட்ட வாழ்க்கையில் பல சவால்களைச் சந்தித்துள்ளார். மூன்று திருமணங்கள் செய்திருந்த அவர் இறுதியாக நடிகர் சரத்குமாரை திருமணம் செய்து கொண்டார். இந்த வாழ்க்கையை மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். சினிமா மட்டுமல்லாது சின்னத்திரையிலும் ராதிகா பெரும் சாதனைகளைப் படைத்துள்ளார். 'சித்தி', 'அண்ணாமலை', 'வாணி ராணி' போன்ற அவரது தொடர்கள் தமிழ்த் தொலைக்காட்சி வரலாற்றில் மிகச் சிறந்த தொடர்களாக கருதப்படுகிறது.
கணவர் மற்றும் குடும்ப வாழ்த்துக்கள்
சரத்குமார் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் ராதிகாவுக்கு வாழ்த்து தெரிவித்து ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். "பிறந்தநாள் வாழ்த்துக்கள் ராதிகா. நீ என் வாழ்க்கையின் மிகப்பெரிய சொத்து. உன்னுடைய பலம், தைரியம் மற்றும் அன்பிற்கு நான் என்றென்றும் நன்றி உள்ளவனாக இருப்பேன்" என்று பதிவிட்டுள்ளார்.
பிள்ளைகளின் வாழ்த்து
ராதிகாவின் மகள் வரலட்சுமி அவரது பேட்டிகளில் தனது தாயைப் பற்றி நெகிழ்ச்சியாகப் பேசுவார். ரேயான் மற்றும் ராகுல் இருவரும் தனது தாய்க்கு வாழ்த்து தெரிவித்து புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளனர். இதுபோல ராதிகா மற்றும் சரத்குமாரின் மகனான ராகுல் வெளிநாட்டில் படித்து வந்த நிலையில் தான் பட்டப்படிப்பை முடித்து தேர்ச்சி பெற்று விட்டதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்து இருக்கிறார். தன்னுடைய அம்மாவுக்கு பிறந்தநாள் பரிசே தன்னுடைய தேர்ச்சி தான் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
அரசியல் வாழ்க்கை
திரைத்துறை மட்டுமின்றி அரசியலிலும் ராதிகா தனது பங்களிப்பை செலுத்தியுள்ளார். தற்போது பாரதிய ஜனதா கட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார். ராதிகா தனது கடின உழைப்பாலும் அர்ப்பணிப்பு உணர்வாலும் ரசிகர்களிடமும் சக கலைஞர்களிடமும் பெரும் மரியாதையைப் பெற்றுள்ளார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications