Radhika: ராதிகா சரத்குமாரின் புது வீடு கிரகப்பிரவேசம்.. வந்து குவிந்த பிரபலங்கள்! போஸ்டில் அவர் சொன்ன விஷயம்
சென்னை: தென்னிந்திய திரைப்படத்துறையில் நடிகையாகவும், தயாரிப்பாளராகவும், தொலைக்காட்சி சீரியல்களின் மூலமாகவும் தன்னை அசைக்க முடியாத சக்தியாக நிலை நிறுத்தியவர் நடிகை ராதிகா சரத்குமார். இவர் இன்று தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்த ஒரு புகைப்படம் இணையத்தில் அதிகமான வாழ்த்துக்களை பெற்று வருகிறது.
ராதிகா சரத்குமார் இன்று தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் "ஹவுஸ் வார்மிங்" என்ற பதிவுடன் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார். புதிய வீட்டுக்கு குடியேறும் விழாவையொட்டி அவர் இந்த சந்தோஷ பதிவை போட்டு இருக்கிறார். அதில் பல திரை பிரபலங்களும் கலந்து கொண்டு இருக்கின்றனர்.

அதோடு அந்த பதிவில் "அனைவரும் சேர்ந்து நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நேரம் செலவழித்ததற்கு நன்றி" என்று தெரிவித்திருக்கிறார். அந்த புகைப்படத்தில் நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகாவுடன் மேலும் சில பிரபலங்கள் இருக்கின்றனர் அதில் நடிகை ரம்யா கிருஷ்ணன், இயக்குனர் கௌதம் மேனன் உட்பட பல நடிகர்கள் இருக்கின்றனர். இந்த போஸ்ட் வெளியான சில நிமிடங்களிலேயே அதிகமான ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து ஷேர் செய்து வருகின்றனர்.
நடிகை ராதிகா சரத்குமார் எம் ஆர் ராதாவின் மூன்றாவது மனைவி கீதாவின் மகள் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும் ராதிகாவின் சகோதரி நிரோஷாவும் சினிமாவில் முன்னணி நடிகையாக தான் வளர்ந்து வந்து கொண்டிருக்கிறார். அதிலும் சமீபத்தில் அவர் சின்னத்திரையில் அறிமுகம் ஆகி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விட்டார். குறிப்பாக பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கோமதி ஆகவே சின்னத்திரை ரசிகைகள் அவரை ரசித்து வருகின்றனர்.
சமீபத்தில் தான் ராதிகாவின் அம்மா உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அதற்கு பிறகு ராதிகா சில நாட்களாகவே சோகமான போஸ்ட்டுகள் போட்டு வந்த நிலையில் இப்போது அவர் தன்னுடைய மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்து இருக்கிறார். 80ஸ் காலகட்டத்திலும், 90ஸ் காலகட்டத்திலும் கதாநாயகியாக நடித்து வந்த ராதிகா இப்போது இளம் தலைமுறை நடிகர்களின் அம்மாவாகவும் மாமியாராகவும் நடித்து மிரட்டிக் கொண்டிருக்கிறார்.
எனக்கு எத்தனை வயதானாலும் நடிப்புக்கு நோ எண்ட் என்று கலக்கிக் கொண்டிருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய சக நடிகை நடிகைகளோடும் மீட்டிங் போட்டு அவர்களோடு சேர்ந்து எடுத்த புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார். சோசியல் மீடியாவில் பயங்கர ஆக்டிவாக இருக்கும் ராதிகாவிற்கு இப்போது பல பிரபலங்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

ராதிகா பல வருடங்களாக சினிமா துறையில் ஜொலித்து வரும் நிலையில் அவர் தேசிய விருது, ஃபிலிம்பேர் விருது, தமிழக அரசு திரைப்பட விருது, சினிமா எக்ஸ்பிரஸ் விருது, நந்தி விருது போன்ற பல விருதுகளையும் வாங்கி இருக்கிறார். சின்னத்திரையில் ராடான் மீடியா மூலமாக பல சீரியல்களையும் தயாரித்தும் வருகிறார். சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் போது சின்னத்திரையில் கதாநாயகியாக நடிக்க தொடங்கிவிட்டார். இவருடன் சினிமாவில் அறிமுகமான பல நடிகைகள் திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகி போய்விட்டனர். ஆனால் ராதிகா தொடர்ந்து நடித்து வருகிறார்.
ராதிகா நடிகர் சரத்குமாரை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு இருமுறை திருமணம் செய்து விவாகரத்து பெற்றிருந்தார். சரத்குமார் உடன் கடந்த 2001 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2004 ஆம் ஆண்டு ராகுல் என்ற மகன் பிறந்தார். சமீபத்தில் தன்னுடைய மகன் மற்றும் சரத்குமார் உடன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த வீடியோக்களையும் புகைப்படங்களையும் ராதிகா வெளியிட்டிருந்த நிலையில் சரத்குமாரின் மகனைப் பார்த்த பலரும் அடுத்த ஹீரோ ரெடி ஆகிவிட்டார் என்று கமெண்ட் கொடுத்து வந்தனர்.
இப்போது ராதிகா வெளியிட்ட பதிவில் திரைப்பட பிரபலங்கள் மட்டும்தான் இடம் பிடித்திருக்கிறார்கள். அவருடைய குடும்பத்தை சார்ந்தவர்கள் யாரும் அந்த புகைப்படங்களில் இல்லை. இதனால் ராதிகா எளிமையான ஒரு வீடு வாங்கி அந்த வீட்டில் குடியேறப் போகிறாரா என்ற கேள்விகளும் வருகிறது.












Click it and Unblock the Notifications