அந்த இயக்குனர் போன் பண்ணி சொன்ன வார்த்தை.. நான் அதிர்ச்சியாகிவிட்டேன்! வெளிப்படையாக பேசிய ராதிகா
சென்னை: நடிகை ராதிகா சரத்குமார் பேட்டி ஒன்றில் பேசும் போது, கேளடி கண்மணி படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் கே பாலச்சந்தர் போன் பண்ணி தன்னிடம் சொன்ன வார்த்தைகளை கேட்டு தான் அதிர்ச்சி அடைந்து விட்டதாக கூறியிருக்கிறார்.
நடிகை ராதிகாவுக்கு அறிமுகமே தேவை இல்லை. 80ஸ் காலகட்டத்தில் இவர் சினிமாவில் அடி எடுத்து வைத்திருந்தாலும் இப்ப வரைக்கும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். கதாநாயகியாக நடித்தால்தான் எல்லோருக்கும் தெரியும் என்று இல்லாமல் குணச்சித்திர வேடங்களில் நடித்தாலும் தனக்கென்று ஒரு வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி வரும் ராதிகா சரத்குமார் சினிமாவில் மட்டுமல்லாமல் அரசியலிலும் கலக்கி கொண்டு இருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் சின்னத்திரை நடிகையாகவும், தயாரிப்பாளர், இயக்குனர் என்று பல முகங்களை கொண்ட ராதிகா தன்னுடைய சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத பல நினைவுகள் குறித்து தன்னுடைய யூடியூப் சேனலில் பேசி இருக்கிறார். ராதிகா சரத்குமார் சினிமாவில் அறிமுகம் ஆகி 46 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் அதை அவருடைய மகள் பிரம்மாண்டமாக கொண்டாடி இருந்தார்.
அப்போது ராதிகாவின் ரசிகர்கள் பலர் கலந்து கொண்டு அவரிடம் பல்வேறு கேள்விகளை கேட்டிருந்தனர். அதில் ஒரு ரசிகை நீங்கள் இயக்குனர் பாலச்சந்திரன் படத்தில் மட்டும் நடிக்கவில்லையே எதற்காக என்று கேட்டிருந்தனர். அதற்கு ராதிகா பாலச்சந்தர் என்னை பார்க்கும் போதெல்லாம் நான் உனக்கு வித்தியாசமான ஒரு கதை எழுதணும், எல்லாரும் கொடுக்கிற மாதிரி உனக்கு என்னால் கேரக்டர் கொடுக்க முடியாது. உன்னுடைய திறமையை வித்தியாசமா காட்டணும் என்று சொல்லிக் கொண்டே இருப்பார்.

ஆனால் இதுவரைக்கும் அதற்கான சரியான சந்தர்ப்பம் அமையாமல் போய்விட்டது. அதுபோல என்னுடைய வாழ்க்கையில் பாலச்சந்தர் ஒருமுறை எனக்கு போன் செய்து பேசியதை என்னால் மறக்க முடியாது. கேளடி கண்மணி திரைப்படம் வெளியான சமயத்தில் திடீரென்று ஒரு போன் வந்தது. இப்போது இருக்கிற மாதிரி செல்போன் அப்போ கிடையாது என்பதால் லேண்ட் லைன் நம்பருக்கு தான் போன் வந்தது.
அதில் நான் பாலச்சந்தர் பேசுறேன் என்றார். எனக்கு சின்னதா அதிர்ச்சியா இருந்தது. அப்போ நான் கே பாலச்சந்தர் பேசுறேன் என்று மீண்டும் சொன்னார். நான் சொல்லுங்க சார் என்று சொன்னேன். அதற்கு நான் இப்போதுதான் கேளடி கண்மணி திரைப்படத்தை பார்த்தேன் அதில் உன் நடிப்பு அவ்வளவு அருமையா இருக்கு என்று அந்த படத்தில் பல இடங்களில் என்னுடைய நடிப்பை கவனித்து பாராட்டினார்.

எனக்கு என்ன பேசுறது என்று தெரியாமல் அதிர்ச்சியில் இருந்தேன். எல்லாவற்றிற்கும் சரி மட்டும் சொன்னேன். உடனே போனை வைத்து விட்டார். பிறகு சிறிது நேரம் கழித்து மீண்டும் போன் செய்து நான் உன்னை கிண்டல் செய்கிறேன் என்று நினைக்காதே உண்மையில் மனதார உன்னை பாராட்டுகிறேன். உன் நடிப்பு நல்லா இருந்தது. நீ சினிமாவில் இன்னும் சாதிப்ப என்று சொன்னார். அது இப்ப வரைக்கும் என்னால் மறக்க முடியாது என்று அந்த பேட்டியில் ராதிகா பேசியிருக்கிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications