விஜய் காரணம் இல்லாமல் அரசியலுக்கு வரமாட்டாரு! நான் இதை தான் செய்யப் போகிறேன்! லாரன்ஸ் உடைத்த ரகசியம்
சென்னை: நடிகர் ராகவா லாரன்ஸ் பலருக்கும் உதவி செய்து வரும் நிலையில் தற்போது சில நாட்களாக தொடர்ச்சியாக தன்னுடைய சொந்த பணத்தில் டிராக்டர் வாங்கி ஏழைகளுக்கு கொடுத்து வருகிறார். இந்த நிலையில் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது நடிகர் விஜய் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு வெளிப்படையாக ராகவா லாரன்ஸ் பதில் கொடுத்து இருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் இப்போது பலரும் வியந்து பார்க்கும் வகையில் ராகவா லாரன்ஸ் தொடர்ச்சியாக பலருக்கும் உதவிகளை செய்து கொண்டே இருக்கிறார். நடன கலைஞராகவும், இயக்குனர், நடிகர் என்று பல முகங்களைக் கொண்ட ராகவா லாரன்ஸ் பலருக்கும் உதவிகளை செய்து வருவதால் மக்கள் அவரை வாழும் கடவுள் என்று அழைத்து வருகிறார்கள். ஆனாலும் இதைக் கண்டு கொள்ளாத லாரன்ஸ் தொடர்ச்சியாக பலருக்கும் உதவி கொண்டிருக்கிறார்.

ஆரம்பத்தில் சின்ன சின்ன உதவிகளை செய்து வைத்த லாரன்ஸ் பிறகு உடல் ஊனமுற்ற மற்றும் பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகளின் படிப்பு மற்றும் எதிர்காலத்திற்கு தேவையான பல உதவிகளையும் செய்து வருகிறார். இப்போது விவசாயிகளுக்கு 10 டிராக்டர் வாங்கி கிராமங்களில் ஏழ்மையில் இருக்கும் விவசாயிகளுக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
அதே நேரத்தில் முதியோர்களுக்கு அவர்களின் அடிப்படை தேவைகள் போன்றவற்றையும் செய்து கொடுத்துக்கொண்டிருக்கும் லாரன்ஸிடம் சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகர் விஜய் அரசியல் வருவது குறித்து கேள்வி கேட்கப்பட்ட நிலையில் விஜய் காரணம் இல்லாமல் அரசியல் வரமாட்டார். கண்டிப்பாக அவர் அரசியல் வருவதற்கு காரணம் இருக்கும். அவரால் பலருக்கு நல்லது நடந்தால் நல்லது தான் என்று லாரன்ஸ் கூறி இருக்கிறார்.
அதோடு நான் இப்போது டிராக்டர் பலருக்கு வழங்கி வருகிறேன் அதை எல்லோரும் சந்தோஷமாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். அதை பார்க்கும்போது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. கிராமங்களுக்கு நான் போகும் போது மக்கள் என்னை வரவேற்பதை பார்த்து நான் என்னையே மறந்து போயிருக்கிறேன். அதுபோல எனக்கு வரும் மனுக்களில் அதிகமாக கணவரை இழந்த பெண்கள் தையல் மெஷின் கேட்டு எழுதி இருக்கிறார்கள்.
அதனால் அடுத்த கட்டமாக நான் 500 பெண்களுக்கு தையல் மெஷின் வழங்க இருக்கிறேன். நான் கடைசி வரைக்கும் என்னால் முடிந்த அளவிற்கு அடுத்தவர்களுக்கு உதவி செய்யப் போகிறேன் என்று கூறியிருக்கிறார். ஆனால் அரசியலில் இறங்கப் போவது இல்லை என்று ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு பேட்டி ஒன்றில் லாரன்ஸ் கூறி இருந்தார். அதே நேரத்தில் இப்போது சமூக வலைதளத்தில் அதிகமாக லாரன்ஸ் பலருக்கும் உதவி செய்யும் வீடியோக்கள் தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
ஏற்கனவே இவர் மே ஒன்றாம் தேதி தொடங்கிய "மாற்றம்" என்ற நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் இணைந்து கொண்டிருக்கிறார்கள். அறந்தாங்கி நிஷா, பாலா, எஸ் ஜே சூர்யா போன்றோர் நாங்கள் இந்த இயக்கத்தில் இணைந்திருக்கிறோம் என்று கூறியிருந்த நிலையில் லாரன்ஸின் இந்த முயற்சிக்கு நடிகர் ரஜினிகாந்த் போன் பண்ணி லாரன்ஸை பாராட்டி இருந்தார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications