Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"காந்தாரா” திரைப்படத்தையும் விட்டு வைக்காமல் காப்பி அடித்த பிரபல சீரியல்.. கலாய்க்கும் நெட்டிசன்கள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலில் காந்தாரா திரைப்படத்தில் கடைசி சீன்களைப் போலவே எபிசோடுகள் அமைந்திருப்பதை குறித்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியல் சமீபத்தில் அதிகமாக நெட்டிசன்களால் கலாய்க்கப்பட்டு வருகிறது.

இந்த சீரியலில் போலீஸ் ஆபீஸராக இருக்கும் சந்தியாவை காப்பாற்றுவதற்காக அவருடைய கணவர் செய்யும் செயல்களை பார்த்து நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர்.

சமீபத்தில் வெளியாகி பல கோடி வசூலை குவித்து கொண்டிருக்கும் காந்தாரா திரைப்படத்தின் கடைசி சீனை பார்த்து இந்த ராஜா ராணி சீரியலில் சீன் காப்பி அடிக்கப்பட்டு இருக்கிறதா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

ஹிந்தி சீரியலின் தழுவல்

ஹிந்தி சீரியலின் தழுவல்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 என்ற சீரியல் கூட்டு குடும்ப கதையை மையமாகக் கொண்டது. இந்த சீரியல் ஹிந்தி சீரியலின் தழுவலாக இருந்து வருகிறது. இந்த சீரியலில் ஐபிஎஸ் ஆக வேண்டும் என்ற லட்சியத்தோடு போராடிக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணின் கதையாகவும் அவருடைய குடும்பத்தின் கதையாகவும் இருந்து வருகிறது. இந்த சீரியலை இயக்குனர் பிரவின் பென்னட் இயக்கி வருகிறார். இந்த சீரியலில் சரவணன் என்ற கேரக்டரில் சித்து நடிக்கிறார் .சந்தியா என்ற கேரக்டரில் ஆரம்பத்தில் ஆலியா நடித்து தற்போது அவருக்கு பதிலாக ரியா நடித்து வருகிறார்.

தீவிரவாதிகளின் கடத்தல்

தீவிரவாதிகளின் கடத்தல்

இந்த நிலையில் தற்போது சந்தியா ஐபிஎஸ் பயிற்சிக்காக சென்றிருக்கிறார். அங்கு அவர் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் காட்டிற்குள் பயிற்சிக்காக சென்றிருக்கும் நிலையில் சந்தியாவோடு தோழியாகவே பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தீவிரவாதி பெண் உதவியோடு பயிற்சி ஆபீஸரை தீவிரவாதிகள் கடத்தி விட்டனர். அது மட்டும் அல்லாமல் பல இடங்களில் குண்டு வைக்கப்பட்டு இருக்கிறது. அதையும் சந்தியா அப்புறப்படுத்தி இருக்கிறார் .இந்த நிலையில் சந்தியாவின் கணவரான சரவணன் தீவிரவாதிகள் கடத்தி விட்டதால் கணவரையும் ஆபிசரையும் தேடும் முயற்சியில் சந்தியா ஈடுபட்டிருக்கிறார்.

காப்பி அடிக்கப்படும் சீன்கள்

காப்பி அடிக்கப்படும் சீன்கள்

ஆரம்பத்தில் இருந்தே இயக்குனர் பிரவீன் பென்னட் இயக்கி வரும் ராஜா ராணி சீரியல் மற்றும் பாரதி கண்ணம்மா சீரியல்களில் அதிகமாக திரைப்படங்களில் காப்பி அடிக்கப்படும் சீன்கள் இடம் பெறுவதாக நெட்டிசன்கள் கலாய்த்து கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் தான் தற்போது ராஜா ராணி சீரியலிலும் நடந்து கொண்டிருக்கிறது. காட்டுக்குள் கணவரை தேடி செல்லும் சந்தியா மற்றும் அவருடைய போலீஸ் பயிற்சியாளர்கள் அனைவரும் செல்வதை பார்க்கும் போது ஜெய்ஹிந்த் படத்தில் காட்சியை அப்படியே வைத்திருக்கிறார்கள் என்று ரசிகர்கள் கேலி செய்து வருகின்றனர்.

லோ பட்ஜெட் காந்தாரா

லோ பட்ஜெட் காந்தாரா

இந்த நிலையில் இதைத் தொடர்ந்து இதற்கு அடுத்த கட்டமாக சந்தியாவிற்கு ஆபத்து ஏற்படுகிறது. இதனால் சரவணன் கடவுளாக மாறுகிறார். இதில் காமெடி என்னவென்றால் தெலுங்கு சினிமாவில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்ற காந்தாரா திரைப்படத்தை கடைசியில் வரும் காட்சி அப்படியே காப்பி எடுத்து வைத்திருக்கிறார் இயக்குனர். அதைக் குறித்து வலைத்தளத்தில் அதிகமான மீம்ஸ்கள் வலம் வருகிறது. இந்த காட்சிக்கு வரவேற்பு கொடுத்தாலும் பலர் இதுதான் எங்களுடைய லோ பட்ஜெட் காந்தாரா என்று கலாய்த்து வருகிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+