சந்தியாவை தொடர்ந்து ராஜா ராணி சீரியலில் இருந்து விலகிய மற்றொரு பிரபலம்! ? காரணம் இதுதானா?
ராஜா ராணி 2 சீரியலில் இருந்து நடிகை வைஷ்ணவி விலகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீசன் 2 சீரியலில் இருந்து சந்தியா கேரக்டரில் நடித்து வந்த ரியா சமீபத்தில் தான் விலகி இருந்தார்
ரியாவை தொடர்ந்து பார்வதி கேரக்டரில் நடித்து வந்த நடிகை வைஷ்ணவியும் விலகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
நடிகை வைஷ்ணவி விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் பொன்னி சீரியலில் கதாநாயகியாக நடித்து இருக்கிறார்.

பிற மொழி தழுவல்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியல் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது டிஆர்பிலும் இந்த சீரியல் முன்னோக்கி நகர்ந்து வருகிறது. இந்த சீரியல் பிற மொழியின் தழுவலாக இருந்தாலும் இந்த சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் இருக்கின்றனர். குறிப்பாக இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்கள் ரசிகர்களின் மத்தியில் பிரபலமடைந்து விட்டனர். தொடர்ந்து இரண்டு வருடங்களாக இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருவதால் இந்த சீரியலில் நடிகர்களும் பிரபலம் அடைந்திருக்கின்றனர்.சின்ன கேரக்டராக நடித்தாலும் சரி பெரிய கேரக்டராக நடித்தாலும் சரி அனைவருக்கும் தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றனர்.

கதாநாயகி மாற்றம்
இந்த நிலையில் இந்த சீரியலில் நடிக்கும் முன்னணி நடிகர்கள் பலர் மாறிக்கொண்டே இருக்கின்றனர். கதாநாயகியாக ஆரம்பத்தில் நடித்து வந்த ஆலியா மானசா விலகி இருந்த நிலையில் அவரைத் தொடர்ந்து வில்லியாக நடித்த விஜே அர்ச்சனாவும் விலகினார். இந்த நிலையில் தற்போது இரண்டாவது சந்தியாவாக நடித்து வந்த ரியா திடீரென்று வீடியோ வெளியிட்டு தான் சீரியலில் இருந்து விலகிய செய்தியை அறிவித்து இருந்தார். அதற்கான காரணத்தை கூறவில்லை என்றாலும் தன்னுடைய ரசிகர்களிடம் தனக்கு ஆதரவு தெரிவித்ததற்கு நன்றி மட்டும் கூறியிருந்தார்.

ராஜா ராணி பார்வதி
இந்த நிலையில் புதிய சந்தியாக ஆஷா கவுடா நடித்து வருகிறார். அதைத்தொடர்ந்து தற்போது இந்த சீரியலில் பார்வதி கேரக்டரில் நடித்து வந்த நடிகை வைஷ்ணவியும் விலகி இருப்பதாக தகவல்கள் பரவி வருகிறது. இந்த சீரியலில் பார்வதி கேரக்டர் சரவணனின் ஒரே தங்கையாக இருக்கும் நிலையில் அவருக்கு திருமணம் மற்றும் திருமணத்தில் நடந்த பிரச்சனைகள் பெரும் பரபரப்போடு ஒளிபரப்பான நிலையில் தற்போது பார்வதி கேரக்டர் அதிகமாக காட்டப்படாமல் தான் இருக்கிறது. இந்த நிலையில் ரசிகர்கள் சொல்வது உண்மைதான் என்று என்னதான் தோன்றுகிறது.

புதிய சீரியல்
இந்த நிலையில் விஜய் டிவியில் விரைவில் வெளியாக இருக்கும் பொன்னி சீரியலுக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் நடிகை வைஷ்ணவி தான் அதாவது ராஜா ராணி சீரியலில் பார்வதியாக நடித்த நடிகை தான் கதாநாயகியாக நடிக்கிறார். இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் அதனால் தான் அப்போ ராஜா ராணி சீரியலில் இவர் அதிகமாக காட்டப்படாமல் இருக்கிறாரா? என்று கேள்வி எழுப்பி வரும் நிலையில், பொன்னி சீரியலில் நடிக்கும் வைஷ்ணவிக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications