தேவயானியிடம் எந்த பணமும் கிடையாது! கையை வீசிட்டு வந்தாங்க! நான் தான் செலவு செய்தேன்! ராஜகுமாரன் ஆதங்கம்
சென்னை: நடிகை தேவயானி குறித்து அவரது கணவர் ராஜகுமாரன் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே ராஜகுமாரன் பேசுகிறது எல்லாம் சர்ச்சையாகி வரும் நிலையில் இப்போது தேவயானி தன்னை கல்யாணம் பண்ணும் போது எந்த பணமும் கொண்டு வரவில்லை, தான் சேர்த்து வைத்த பணத்தில் தான் அவருக்கு புடவையே வாங்கி கொடுத்தேன் என்று பேசியிருக்கிறார்.
விக்ரமன் உதவியாளராக இருந்த ராஜகுமாரன், தேவயானி நடித்த 'நீ வருவாய் என' மூலம் இயக்குனரானார். 'விண்ணுக்கும் மண்ணுக்கும்', 'காதலுடன்', 'திருமதி தமிழ்' போன்ற படங்களை இயக்கி, நான்கு படங்களில் கதாநாயகியாக நடித்த தேவயானியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் சமீபகாலமாக அவர் எந்த படத்தையும் இயக்கவில்லை. நடிகர் சந்தானம் நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் தான் ஒரு காமெடியனாக நடித்திருந்தார். அந்த படத்திற்கு பிறகும் இவர் நடிக்கவில்லை என்றாலும் இப்போது தொடர்ச்சியாக பேட்டி கொடுத்து வருகிறார்.
வாவ் தமிழா யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், ராஜகுமாரன் தனது வருமானம் மற்றும் குடும்பத்தை பற்றி பற்றி பேசி இருந்தார். "இயக்குனர் செல்வமணி, ரோஜா சம்பாத்தியத்தில் கார், வேலையாட்கள் என வசதியாக வாழ்பவர். அவருக்கு செலவுகள் அதிகம். ஆனால், எனக்கு அப்படியில்லை. தேவயானியை மணக்கும் முன் மாதாந்திர செலவு ₹1500 தான் - ₹1000 வாடகை, ₹500 சாப்பாடு. 'விண்ணுக்கும் மண்ணுக்கும்' படம் முடியும் வரை இந்த செலவு நீடித்தது, எனவும் அவர் கூறினார்.
"இயக்குனரான பிறகும் பெரிய செலவுகள் செய்யாமல், சிறுக சிறுக சம்பாதித்து பேங்கில் சேர்த்து வைத்திருந்தேன். தேவயானி என் மனைவியாக வந்தபோது அந்த சேமிப்புதான் கை கொடுத்தது," என்றார் ராஜகுமாரன். "ஏனென்றால், தேவயானி வெறும் கையை வீசிக்கொண்டுதான் வந்தார். அவர் என்னை நம்பி வந்தார். வங்கியில் நான் சேமித்த ₹3 லட்சம் அவருக்கு உதவியது. உடுத்தக்கூட துணி இல்லாமல், சினிமாவில் வருவதுபோல் தேவயானி வந்தார்," என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
ராஜகுமாரன் இப்படி பேசி இருப்பது தான் இப்போது விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த நேரத்தில் தேவயானி புகழின் உச்சத்தில் நடித்து கொண்டிருந்தார், அப்போ அவர் கையில் எந்த பணமும் இல்லாமலா இருந்தது? என்று சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். இன்னும் ஒரு சிலர் ராஜகுமாரன் சொல்வது உண்மையாக கூட இருந்திருக்கலாம், காரணம் தேவயானி கூட தாங்கள் ஆரம்ப காலகட்டத்தில் அதிகமாக கஷ்டப்பட்டதாக சொல்லி இருக்கிறார்.
தன்னுடைய குடும்பத்தை எதிர்த்து தேவயானி வீட்டை விட்டு வெளியேறி சென்ற போது அவருடைய கையில் எந்த சேமிப்பும் அல்லது பணமும் இருந்திருக்க வாய்ப்பு இல்லை. ஆனால் திருமணத்திற்கு பிறகு தேவயானி தொடர்ந்து நடித்து கொண்டிருக்கிறார். அந்த பணம் முழுக்க ராஜகுமாரன் தானே வைத்திருக்கிறார் என்றும் சிலர் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications