நீலாம்பரியும், ஆறுமுகமும் ரீ என்ட்ரி.. படையப்பா 2 படத்தின் தலைப்பு இதுதானா? ரஜினியே சொல்லிட்டாரே! செம அப்டேட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் ரஜினி தயாரித்து, நடித்த படையப்பா திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு டிசம்பர் 12ஆம் தேதி ரீ ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த படத்தை பற்றியும் நினைவுகள், அனுபவம் பற்றி ரஜினிகாந்த் பேசியிருக்கும் நிலையில் இந்த படத்தின் இரண்டாவது பாகம் வெளியாவது பற்றியும் ரஜினிகாந்த் அப்டேட் கொடுத்திருக்கிறார்.

இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியான படையப்பா படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சௌந்தர்யாவும், வில்லியாக ரம்யா கிருஷ்ணனும் நடித்திருந்தனர். அதோடு இந்த படத்தில் நடிகர் சிவாஜி, மணிவண்ணன், லக்ஷ்மி உட்பட பலர் நடித்திருந்தனர். ரஜினிக்கு பாட்ஷா படத்துக்கு பிறகு பெரிய வெற்றியை கொடுத்த படம் படையப்பா.

Rajinikanth Padayappa Ramya Krishnan

இந்த படம் ரஜினிக்கு மட்டுமல்லாமல் தியேட்டர் அதிபர்கள், வினியோஸ்தர்கள் என எல்லோருக்குமே அதிக அளவில் லாபத்தை கொடுத்தது. தற்போது பல ஹிட்டான படங்கள் ரீ-ரீலீஸ் ஆகி வரும் நிலையில் ரஜினிகாந்த் சினிமாவுக்கு வந்து 50 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் அவரின் பிறந்த நாளை முன்னிட்டு டிசம்பர் 12ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள். இந்த படம் புதிய தொழில்நுட்பத்துடன் மீண்டும் ரிலீஸ் ஆக உள்ளது. அதற்கான அப்டேட் நேற்று வெளியானது.

இந்த படத்தை பிரமோஷன் பண்ணும் விதமாக ரஜினிகாந்த் வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவில் நான் சினிமாவுக்கு வந்து 50 வருடங்கள் ஆகியுள்ள நிலையில் படையப்பா ரீ ரிலீஸ் ஆவது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. என்னுடைய வாழ்க்கையில் மிக முக்கியமான படம் படையப்பா. இந்த படம் பார்ப்பதற்காக பெண்கள் தியேட்டரில் கதவுகளை உடைத்து விட்டு சென்று பார்த்தார்கள். அதெல்லாம் மறக்க முடியாத நினைவுகள்.

அதுபோல படையப்பா படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் படம் உருவான விதமும் இப்போது நினைத்தாலும் சுவாரஸ்யமான சம்பவமாகத்தான் இருக்கிறது என்று இந்த படத்தில் நீலாம்பரியாக நடித்த நடிகை ரம்யா கிருஷ்ணன் எப்படி கமிட்டானார்? சிவாஜி எப்படி கமிட்டனார் போன்ற தகவல்களை எல்லாம் அந்த பேட்டியில் பேசியிருக்கிறார். இந்த படம் பெண்கள் பலரும் ரசித்ததால் நீலாம்பரி என்கிற தலைப்பில் படையப்பா 2 எடுக்கும் எண்ணம் இருக்கிறது, இது தொடர்பான கதை விவாதம் நடந்து வருகிறது எல்லாம் சரியாக அமைந்தால் கண்டிப்பாக ரசிகர்களுக்கு மகிழ்ச்சி கொடுக்கும் ஒரு படத்தை கொடுப்போம் என்று ரஜினி பேசி இருக்கிறார்.

இந்த படத்தின் நீலாம்பரி ஆக ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார் என்று சொன்னபோது ரஜினிக்கு சம்மதமே இல்லையாம் அரை மனதாகத்தான் அதற்கு சம்மதித்திருக்கிறார். ஆனால் கே எஸ் ரவிக்குமார் தான் இந்த கேரக்டருக்கு ரம்யா கிருஷ்ணன் சரியாக இருப்பார் என்று சொல்லி இருக்கிறார். முதலில் ரஜினிகாந்துக்கு இந்த கேரக்டரை பற்றி நினைத்தாலே ஐஸ்வர்யாராய் தான் நினைவுக்கு வந்திருக்கிறார்.

ஆனால் ஐஸ்வர்யா ராய்யிடம் கதையை சொல்லிவிட்டு மூன்று நான்கு மாதம் வரை வெயிட் பண்ணியும் கடைசியில் அவருக்கு இந்த கேரக்டர் பிடிக்கவில்லை என்று தெரிந்ததும் தான் வேற நடிகையை புக் செய்ய தொடங்கியிருக்கிறார்கள். அப்போது ரம்யா கிருஷ்ணன் வந்து சேர்ந்திருக்கிறார். ஆனால் ரம்யா கிருஷ்ணனின் நடிப்பு இந்த படத்தில் தான் அனைவரையும் வியக்க வைத்தது.

இப்ப வரைக்கும் ரம்யா கிருஷ்ணனை நீலாம்பரி என்றே பலர் குறிப்பிட்டு வருவதையும் பார்க்க முடிகிறது. நீலாம்பரி என்கிற பெயரில் படையப்பா படத்தின் இரண்டாவது பாகம் எடுத்தால் கதை எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருக்கிறது. ஏற்கனவே பாபா படத்தில் நீலாம்பரி மீண்டும் வந்தது போன்ற ஒரு சில காட்சிகள் இருக்கும் அது பலருக்கு நினைவிருக்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+