இமயமலை பாபாஜி குகையில் ரஜினிகாந்த்.. கையில் தடி, காலில் அதை கவனிச்சீங்களா? லேட்டஸ்ட் போட்டோஸ்
சென்னை: தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், தன் சினிமா பயணத்தில் எவ்வளவு உயரம் சென்றாலும், தன் ஆன்மீக வேர்களை ஒருபோதும் மறந்ததில்லை. அவருடைய ஒவ்வொரு படத்தின் ரிலீஸுக்கு முன்னும், பின்னும் அவர் இமயமலைக்குச் சென்று வருவது என்பது ஒரு வழக்கமாகவே மாறிவிட்டது. அந்த வகையில், தற்போது நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் இமயமலைக்கு ஆன்மீகப் பயணம் மேற்கொண்டிருக்கிறார்.

கூலியின் வெற்றிக்கு பின்
ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான 'கூலி' திரைப்படம் (ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியானது) திரையரங்குகளில் ரூ. 500 கோடிக்கும் அதிகமான வசூலை அள்ளிக் குவித்ததாகக் கூறப்படுகிறது. இந்த இமாலய வெற்றிக்குப் பிறகு, ரஜினி தற்போது இமயமலைப் பயணத்தைத் தொடங்கியுள்ளார்.
கடந்த முறை, 'வேட்டையன்' படம் வெளியாவதற்கு முன்பு அக்டோபர் மாதம் இமயமலைக்குச் சென்று வந்தவர், 'கூலி' திரைப்படம் வெளியாவதற்கு முன்பு, இமயமலைப் பகுதியில் மழை அதிகமாக இருந்ததால் செல்ல முடியாமல் போனது. இப்போது வெற்றிக்குப்பின் ஒரு வாரப் பயணமாக அவர் இமயமலைக்குச் சென்றுள்ளார்.
பாபாஜி குகையில் தியானம்
ரஜினிகாந்த் தற்போது உத்தரகாண்ட் மாநிலத்திலுள்ள ஆன்மீகத் தலங்களில் தரிசனம் செய்து வருகிறார். சமீபத்தில் அவர் பத்ரிநாத் கோயிலில் சாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி, ரசிகர்களைப் பரவசப்படுத்தியது. இதன் உச்சகட்டமாக, தற்போது அவர் இமயமலைப் பகுதியில் அமைந்துள்ள பாபாஜி குகையில் தியானம் மேற்கொண்டிருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. தனது கைகளில் ஜெபமாலையுடன் ஆழ்ந்த அமைதியில் அமர்ந்திருக்கும் அந்தக் காட்சிகள், ஆன்மீகத்தில் அவர் எவ்வளவு ஆழமான நம்பிக்கை கொண்டிருக்கிறார் என்பதைக் காட்டுகிறது.
அதோடு மலைப்பகுதியில் நடப்பதற்கு தடி ஒன்றையும் கையில் ஊன்றி இருக்கிறார். அதுபோல கால் முட்டி பகுதியில் கருப்பு வண்ண பேண்டேஜ் போல ஒன்றை அணிந்திருக்கிறார். இதனால் இமயமலைக்கு போன இடத்தில் ரஜினிகாந்துக்கு கால் வலி ஏற்பட்டிருக்கிறதா? அதனால் தான் அவர் இப்படி காலில் பேண்டேஜ் போட்டு இருக்கிறாரா என்று பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
ரஜினியின் கருத்துகள்
ரஜினிகாந்தின் வாழ்க்கையும், ஆன்மீகமும் பிரிக்க முடியாதவை. அவர் தன் ஒவ்வொரு பேட்டியிலும் ஆன்மீகம் குறித்துப் பேசுவதுண்டு. 'சினிமா எனக்கு வேலை, ஆன்மீகம் என் வாழ்க்கை' என்று அவர் பலமுறை குறிப்பிட்டிருக்கிறார். தன்னுடைய சினிமா வளர்ச்சிக்குப் பின்னால் இருப்பது ஆன்மீக பலமும், யோக சாதனைகளும்தான் என்று அவர் நம்புகிறார். படப்பிடிப்பு எவ்வளவு பரபரப்பாக இருந்தாலும், தன்னுடைய தியானத்தை அவர் ஒருபோதும் விடுவதில்லை.
மகா அவதார் பாபாஜி
இமயமலைக்கு ரஜினி செல்வதன் முக்கியமான நோக்கம், மகா அவதார் பாபாஜியைச் சந்திப்பதுதான். பாபாஜியின் சீடரான யோகானந்தரின் 'ஒரு யோகியின் சுயசரிதை' (Autobiography of a Yogi) புத்தகத்தை ரஜினிகாந்த் தீவிரமாகப் பின்பற்றுபவர். இந்தப் பயணங்கள் அவருக்குப் புத்துணர்ச்சியையும், மன அமைதியையும் கொடுப்பதாகக் கூறியிருக்கிறார்.
ஜெயிலர் 2 வெளியீடு
ஆன்மீகப் பயணத்தை முடித்துவிட்டு ரஜினி சென்னை திரும்பியதும், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஜெயிலர் 2' படத்தின் வேலைகள் விறுவிறுப்படையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் தனது ஆன்மீகப் பலத்தோடு, அடுத்த படத்திலும் வெற்றியைத் தொடருவார் என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications