18வது மாடியில வீடு.. கடல் தெரியுது, எனக்கே பொறாமையா இருக்கு.. கலாய்த்த ரஜினிகாந்த்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினிகாந்த் பட விழாவில் பேசுகிறார் என்றாலே ஏதாவது ஒரு சுவாரசியமான விஷயம் கண்டிப்பாக இருக்கும். அதிலும் நெல்சனுடன் அவர் பேச ஆரம்பித்தால் காமெடிக்கு பஞ்சமே இருக்காது. இப்போது ஜெயிலர் 2 படத்தைப் பற்றிப் பேசியிருக்கும் ரஜினிகாந்த், நெல்சன் வீட்டுக்குச் சென்ற அனுபவத்தைச் சொல்லி அவரைக் கலாய்த்திருப்பது ரசிகர்களை ரசிக்க வைத்திருக்கிறது. குறிப்பாக, நெல்சனின் வீடு, அவர் எடுத்த முடிவு, ஜெயிலர் 2 உருவான விதம் என ரஜினி பகிர்ந்துகொண்ட விஷயங்கள் கவனம் பெற்றிருக்கின்றன.

ஜெயிலர் படத்தின் வெற்றிக்குப் பிறகு ரஜினிகாந்த், நெல்சன் கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் ஜெயிலர் 2. முதல் பாகத்தில் ரஜினியின் முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது. அதோடு படத்தில் வந்த வர்மன் கதாபாத்திரமும், பின்னணியில் இருக்கும் பெரிய போதைப் பொருள் கேங் குறித்த விஷயங்களும் அடுத்த பாகத்துக்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்தின. ஆனால், பொதுவாக இரண்டாம் பாகத்தில் நடிப்பதற்கு ரஜினி அவ்வளவு எளிதாகச் சம்மதிப்பதில்லையாம். இதைப் பற்றிப் பேசும்போது அவர் சொன்ன விஷயம்தான் கவனிக்க வைக்கிறது.

Rajinikanth Nelson jailer

ரஜினிகாந்த் பேச்சு

ரஜினிகாந்த் பேசுகையில், பொதுவா சீக்குவலுக்கு நான் ஒத்துக்க மாட்டேன். ஏன்னா, சரக்கு கம்மியாடிச்சு, கிரியேட்டிவிட்டி கம்மியாடிச்சு... அதனால ஏற்கனவே பண்ணுனதை உப்பு, காரம்லாம் போட்டு பன்றாங்கன்னு சொல்வாங்க. அதனாலத்தான் பாட்ஷாக்கூட நிறைய வாட்டி கேட்டும் நான் பண்ணல. அதே போல பேட்ட படமும் கேட்டாங்க. அதுலையும் பெருசா ஈடுபாடு வரல. இப்படி இரண்டாம் பாகங்கள் மீது தனக்கு இருந்த தயக்கத்தை வெளிப்படையாகச் சொன்ன ரஜினி, ஜெயிலர் படத்தில் மட்டும் தனக்கு வேறொரு விஷயம் தோன்றியதாக பேசினார்.

ஆனா ஜெயிலர் படத்துல நிறைய இடத்துல வர்மன் கேரக்டருக்கு மேல ஒரு நெட்வொர்க் இருக்குனு நெல்சன் காமிச்சிருப்பாரு. அதனால இயல்பாவே சீக்குவலுக்கு கதை அமைச்சிருச்சு. உடனே இதை பண்ணலாம்னு நெல்சனை கூப்பிட்டேன். இதுதான் ஜெயிலர் 2 உருவாவதற்கான முக்கியமான காரணம். முதல் பாகத்தின் கதைக்குள்ளேயே அடுத்த பாகத்துக்கான வாய்ப்பை நெல்சன் வைத்திருந்ததுதான் ரஜினிக்கு இந்த யோசனையைக் கொடுத்திருக்கிறது.

Rajinikanth Nelson jailer

18வது மாடியில் வீடு வாங்கிய நெல்சன்

ஜெயிலர் படம் வெளியான பிறகு நெல்சனுக்கு பெரிய பெரிய பட வாய்ப்புகள் வந்திருக்கின்றன. தெலுங்கில் ஒரு பெரிய நடிகருக்காக சன் பிக்சர்ஸ் ஏற்கெனவே முன்பணம் கொடுத்திருந்ததாகவும் ரஜினி பேசினார். அந்தச் சூழலில் ஜெயிலர் 2 படத்துக்காக நெல்சனை தொடர்பு கொண்ட போது நடந்ததைத் தனது பாணியில் கலாய்த்தபடியே பேசினார்.

அதாவது, ஜெயிலர் ரிலீஸான பிறகு அவருக்கு செம்ம டிமாண்ட். பெரிய பெரிய ஆர்டிஸ்ட்லாம் கூப்பிட்டாங்க. ஏற்கனவே தெலுங்குல ஒரு பெரிய நடிகருக்காக சன் பிக்சர்ஸ் அட்வான்ஸ் கொடுத்திருந்துச்சு. ஆனா அவரு பயங்கர புத்திசாலித்தனமானவர் என்று பாராட்டினார்.

Rajinikanth Nelson jailer

கலாய்த்த ரஜினி

அதற்குப் பிறகுதான் நெல்சனின் வீட்டைப் பற்றி ரஜினி கலாய்க்க ஆரம்பித்தார். நெல்சன் ரொம்ப கஷ்டப்பட்டு வந்தவரு. 18வது மாடியில அழகான அப்பார்ட்மெண்ட் வாங்கிட்டு, ஒரு பக்கம் கடல் தெரியுற மாதிரி இன்னொரு பக்கம் மைதானம் தெரியுமாதிரி வாழ்றாரு. ஏற்கனவே சன் பிக்சர்ஸ் நல்லா பணம் கொடுத்திருக்காங்க, அதை பேங்க்ல போட்டுட்டு எங்கேயும் போகாம நல்லா சாப்டுட்டு இருக்கார். இந்த இடத்தில் ரஜினியின் நகைச்சுவைதான் ரசிகர்களுக்குப் பிடித்திருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+