38 வருட பகை! ரஜினி- சத்யராஜ் இடையே நடந்த மோதல்? பாலாஜி பிரபு சொன்ன விஷயம்! குவியும் கமெண்ட்ஸ்
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் மற்றும் சத்யராஜ் இருவரும் 38 ஆண்டுகளாக எதிரும் புதிருமாக இருந்த நிலையில் தற்போது 'கூலி'படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இது ஆரம்பத்தில் இருந்து அதிகமாக பேசப்பட்ட நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையேயான மோதல் குறித்து பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு பேசிய கருத்துகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

சத்யராஜின் முதல் படம்
1982 ஆம் ஆண்டு பாலாஜி பிரபுவின் தந்தை இயக்கி தயாரித்த 'தீர்ப்புகள் திருத்தப்படலாம்' என்ற திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரம் தேவைப்பட்டது. அப்போது நடிகர் சிவகுமார் தனது சொந்தக்காரப் பையன் ஒருவன் இருக்கிறான் என்று சத்யராஜை அறிமுகப்படுத்தினார். ஆனால் உயரம் அதிகமாக இருப்பதால் சத்யராஜ் வேண்டாம் என்று பாலாஜி பிரபுவின் தந்தை மறுத்துவிட்டார். சிவகுமார் கெஞ்சியதால் சத்யராஜ் அந்தப் படத்தில் நடித்தார். படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து 100 நாட்களுக்கு மேல் ஓடியது. அதன் பிறகு சத்யராஜுக்கு தொடர்ந்து படங்கள் குவியத் தொடங்கின.
ரஜினி - சத்யராஜ் மோதல்
பாலாஜி பிரபு ஒரு பேட்டியில் ரஜினி - சத்யராஜ் மோதல் குறித்து பேசியுள்ளார். "சினிமாவில் அறிமுகமான புதிதில் சத்யராஜ் மற்றும் ரஜினிகாந்த் பல படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்கள். ஆனால் சத்யராஜ் மனதில் என்ன இருந்துச்சு என்று நம்மால் சொல்ல முடியாது. ரஜினி மீது ஏதோ ஒரு கோபம் இருந்தது என்பதை மறுக்க முடியாது" என்று பாலாஜி பிரபு கூறினார்.
தாக்கிப் பேசிய சத்யராஜ்
"எந்த மேடை கிடைத்தாலும் சத்யராஜ் ரஜினியை தரம் தாழ்த்தி பேசுவார். அவருடைய கோபத்தை கிடைக்கும் மேடைகளில் பயன்படுத்தி அப்படி பேச ஆரம்பித்தார்" என்று பாலாஜி பிரபு கூறினார். காவேரி பிரச்சனை போது ஒரு பெரிய மேடையில் சினிமா திரையுலகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அந்த மேடையில் பேசிய சத்யராஜ், "இந்த மேடையில் நான் கைதட்டு வாங்க வேண்டும் என்றால் யார் பெயரை சொல்லி வாங்க வேண்டும் என்று எனக்குத் தெரியும். அப்படி நான் வாங்குவதற்கு நாக்க புடுங்கிட்டு சாகலாம்" என்று ரஜினியைத் தாக்கிப் பேசியிருந்தார்.
ஷங்கரிடம் வைத்த நிபந்தனை
நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்குனர் ஷங்கர் இயக்கிய 'சிவாஜி' படத்தில் நடிக்க சத்யராஜுக்கு வாய்ப்பு கிடைத்தது. அப்போது சத்யராஜ் ஷங்கரிடம் "நான் இந்தப் படத்தில் வில்லனாக நடித்தால் நான் ஹீரோவாக நடிக்கும் படத்தில் ரஜினி வில்லனாக நடிப்பாரா?" என்று கேட்டுள்ளார். இதைக் கேட்ட ஷங்கர் வாய் அடைத்துப் போய் உள்ளார்.
கூலி பட இசை வெளியீட்டு விழா
'கூலி' பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினி, "எனக்கு நிகராக சம்பளம் பேசப்பட்டும் 'சிவாஜி' படத்தில் நடிக்க சத்யராஜ் மறுத்துவிட்டார்" என்று நாகரிகமாகப் பேசியிருந்தார். அப்போது சத்யராஜ் விழா மேடையில் பேசிய போது, "ரஜினி அண்ணா ஒரு சூப்பர் ஸ்டார். நான் எதற்காகவும் ஹீரோவாக மாற நினைக்கவில்லை. நான் வில்லனாக நடிக்கும் படமும் வெற்றி பெற வேண்டும். அதுதான் என்னுடைய நோக்கம். 'கூலி' படத்தில் நான் ரஜினியுடன் இணைந்து நடித்தது எனக்கு ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது" என்று கூறினார்.
பாலாஜி பிரபுவின் கருத்து
"சினிமாவில் எவ்வளவு பெரிய வில்லன் கதாபாத்திரம் மற்றும் அதிக சம்பளம் கொடுத்தும் 'சிவாஜி' படத்தில் நடிக்க வேண்டாம் என்று சொன்ன சத்யராஜ், இன்று 'கூலி' படத்தில் ஒரு ஜூனியர் ஆர்டிஸ்ட் செய்ய வேண்டிய கதாபாத்திரத்தை இவர் செய்திருக்கிறார். அந்தப் படத்தில் அவருடைய கதாபாத்திரம் ஒன்றுமில்லை" என்று பாலாஜி பிரபு கூறினார். மேலும் "ரஜினி படம், சன் பிக்சர்ஸ், லோகேஷ் கனகராஜ் இவர்கள் படங்களில் நடித்தால் தனக்கு ஒரு பெயர் கிடைக்கும் என்பதற்காக தான் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார் என்று எனக்கு தோன்றுகிறது" என்றும் அவர் தெரிவித்தார்.
"தெலுங்கு பிரமோஷனில் சென்று 'மோனிகா' பாடலுக்கு டான்ஸ் ஆடுகிறார். '74 வயதில் ரஜினி டான்ஸ் ஆடுகிறார்' என்று சொன்ன வாய், இப்போ உங்களுக்கும் 74 வயதுதான் ஆகிறது. நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் என்று தெரியுதா? உங்களுடைய கதாபாத்திரத்தை சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி மாத்திப்பீங்க. இதுதான் சத்யராஜ்" என்று பாலாஜி பிரபு பேசியிருக்கிறார். இந்த பேட்டி இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒரு சிலருக்கு இவர்கள் இருவருக்கும் இருக்கும் பிரச்சனை தெரிந்திருந்தாலும் சிலருக்கு தெரியாததால் சினிமா துறையில் யாரை நம்புவது? என்றே தெரியவில்லை. பேசும்போது எல்லோரும் வெளியே சிரித்தபடி பேசுகிறார்கள். ஆனால் அவர்களுக்குள் இப்படி எல்லாம் பிரச்சனை இருக்கிறதா? என்று கமெண்ட் கொடுத்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications