பாபநாசம் படம் உருவானது ரஜினிக்கு தான்! ஆனால் அந்த ஒரு காட்சிக்கு சரி வர மாட்டாரு! அதனால் கமல்! இயக்குனர் ஓபன்
சென்னை: நடிகர் கமல்ஹாசன், கௌதமி உட்பட பலர் நடிப்பில் ஹிட்டான பாபநாசம் திரைப்படத்தை பற்றி முக்கிய தகவலை இயக்குனர் ஜித்து ஜோசப் சமீபத்தில் ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார். அதாவது இந்த திரைப்படத்தில் முதலில் நடிக்க செலக்ட் ஆனது ரஜினி தானாம். இந்த படம் ரஜினிக்காக உருவாக்குனது தானாம். ஆனால் கடைசியில் கமல்ஹாசன் நடித்திருக்கிறார். அதற்கு என்ன காரணம் என்பது பற்றி இயக்குனர் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் பல வருடங்களாகவே அவரா? இவரா? என்று சில நடிகர்கள் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறார்கள். எம்ஜிஆர் சிவாஜி காலத்தில் எம்ஜிஆர் மற்றும் சிவாஜிக்கு என்று தனித்தனியாக ரசிகர்கள் உண்டு. இவருடைய ரசிகர்கள் அந்த நடிகரை திட்டுவார்கள். அந்த நடிகரின் ரசிகர்கள் இந்த நடிகரை திட்டுவார்கள். மாறி மாறி தங்களுக்கு பிடித்த நடிகருக்காக ரசிகர்களும் சண்டை போட்டுக் கொள்வார்கள்.

ரசிகர்களின் சண்டை
ஆனால் நடிகர்கள் இருவருமே நட்பாக தான் இருப்பார்கள். எம்ஜிஆர் சிவாஜிக்கு பிறகு ரஜினி, கமல் அதே வரிசையில் இருந்தனர். அடுத்த தொடர்ந்து அஜித், விஜய் இருந்தனர். அதற்கு பிறகு பெரிதாக இது போன்ற நடிகர்கள் இரண்டு நடிகர்களில் சண்டை இல்லை. அதுபோல எப்படி ரசிகர்கள் சண்டை போட்டுக் கொண்டு இருந்தாலும் ஒரு சில நடிகர்கள் ஆரம்பத்தில் ஒன்றாகவும் நடித்திருக்கிறார்கள். அதில் கமல் மற்றும் ரஜினி இருவரும் ஒரு சில திரைப்படங்களில் ஒன்றாக நடித்திருக்கிறார்கள்.
இயக்குனர் பேட்டி
பிறகு இருவருக்கும் தனித்தனி மார்க்கெட் வந்த பிறகு ஒன்றாக நடிக்கவில்லை. இவர்கள் இருவரையும் ஒன்றாக நடிக்க வைக்க வேண்டும் என்று இயக்குனர்களும் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் இருவருக்கும் தொழில்முறையில் போட்டி இருந்தாலும் நிஜத்தில் நல்ல நண்பர்களாக இருக்கின்றனர். இவர்கள் இருவருடைய நட்பு குறித்து சமீபத்தில் இயக்குனர் ஜித்து ஜோசப் ஒரு பேட்டியில் பேசி இருக்கிறார்.
பாபநாசம் திரைப்படம்
மலையாளத்தில் கடந்து 2013 ஆம் ஆண்டு வெளியான திரிஷ்யம் திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. அந்த திரைப்படம் பலமொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. அந்த வரிசையில் தான் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியானது. முதலில் இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினியை தான் நடிக்க வைக்க இயக்குனர் ஆசைப்பட்டு இருக்கிறார். அதனால் ரஜினியிடம் போய் கதையும் சொல்லி இருக்கிறார். ரஜினிக்கு இந்த கதை மிகவும் பிடித்து போய் இருக்கிறது.
ரஜினி சொன்ன வார்த்தை
ஆனால் அந்த படத்தில் கதாநாயகன் சுயம்புவை போலீஸ்காரர்கள் அடிப்பார்கள். ஆனால் ரஜினிகாந்த் போலீஸ் ஸ்டேஷனில் அடி வாங்குவது ரசிகர்களுக்கு பிடிக்காமல் போகலாம் என்று நினைத்து முதலில் ரஜினி அதை மறுத்துவிட்டாராம். அதற்குப் பிறகு கமலுடன் உடனடியாக அந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு இருக்கிறார். அதற்கு பிறகு யோசித்துப் பார்த்து கதை பிடித்து போக ரஜினி இயக்குனரிடம் தான் நடிக்கிறேன் என்று சம்மதம் சொல்லி இருக்கிறார். ஆனால் அதற்குள் கமல்ஹாசன் ஒப்பந்தமாகிவிட்டார் என்று சொன்னதும் ஓகே பரவாயில்லை ஆல் தி பெஸ்ட் என்று பணிவுடன் சொன்னார் என இயக்குனர் சமீபத்தில் பேசி பேசியிருக்கிறார்.
-
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications