இரவு நேரத்தில் பிரியங்கா செய்த செயலைப் பார்த்து பதறிய ராஜு
சென்னை: கண்ணாடி முன்னாடி இரவு நேரத்தில் பிரியங்கா செய்த செயலைப் பார்த்து ராஜு பதறிப் போய் இருக்கிறார்.
வீடியோவில் பார்க்கும் ரசிகர்களுக்கு ஐயோ என்று சொல்கின்ற மாதிரி தான் இருந்து உள்ளதாம்.
அட இரவு நேரத்தில் இப்படி எல்லாம் கூட செய்கிறார்களா?? என்று நெட்டிசன்கள் கூட கலாய்த்து வருகிறார்கள்.

பிக் பாஸில் நடக்கும் நடைமுறை
பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே பல கேமராக்களுக்கு மத்தியில் செய்யும் செயலை ரசிகர்களுக்கு காட்டி நிகழ்ச்சிக்கு டிஆர்பி கூட்டுவதாக இருந்தாலும்,இதில் நடக்கும் பல விஷயங்கள் பலருடைய கவனத்தை மட்டுமல்லாமல் கருத்துக்களையும் ஈர்த்து வருகிறது. ஒரு சில நேரங்களில் இவர்கள் செய்யும் செயல்கள் இவர்களா இப்படி என்று முகம் சுளிக்க வைத்து விடுகிறது. ஆனால் சில நேரங்களில் சில போட்டியாளர்கள் செய்யும் செயல்கள் அவர்களைப்பற்றிய மேன்மையான கருத்துக்களை மேலும் கூட்டி விடுகிறது.

இரவு நேரத்தில் இப்படியா
பிக்பாஸ் ஐந்தாவது சீசனில் போட்டியாளர்கள் பலருக்கும் பரிச்சயமான மற்றும் ரசிகர்களை கவர்ந்த போட்டியாளர்களாக இருக்கும் ராஜு மற்றும் பிரியங்கா செய்த செயல் தான் நேற்றைய எபிசோடில் பலரையும் சிரிக்க வைத்துள்ளது. இவர்கள் இருவரும் ஏற்கனவே அல்டிமேட் காமெடி ஸ்டார் என்பது அனைவருக்கும் தெரியும் .சும்மாவே இவர்கள் காம்போ அனைவரையும் வயிறு வலிக்க சிரிக்க வைத்துவிடும். அதுவும் இரவு நேரத்தில் எதிர்பாராத விதமாக நடந்த செயல் ரசிகர்களுக்கும் எதிர்பாராமல் சிரிக்க வைத்து விடுகிறது.

பதறிப்போன ராஜூ
ரசிகர்கள் மட்டுமல்லாமல் பிக்பாஸ் வீட்டில் தற்போது நடந்து கொண்டிருக்கும் ஃப்ரீஸ் டாஸ்க்கில் வரும் போட்டியாளர்களின் உறவினர்கள் அனைவரும் சொல்வது ராஜூ மற்றும் பிரியங்கா காம்போ வேற லெவல் என்று தான். அனைத்து தரப்பினரையும் தங்களுடைய காமெடி ஆளும் எதார்த்தமான செயல்பாடுகளால் கட்டி இழுத்து வைத்திருக்கும் பிரியங்கா நேற்று இரவு முகத்திற்கு மேக்கப் போட்டுக்கொண்டு பாத்ரூம் அருகில் இருக்கும் கண்ணாடி முன்பு முகத்தில் வைட் கலர் ஃபேஸ் மாஸ்க் போட்டு கொண்டு நின்று கொண்டிருக்கிறார். அப்போது திடீரென்று வந்த ராஜு பிரியங்காவை பார்த்து பதறிப் போய் விட்டார்.
Recommended Video

இப்படி செய்யலாமா பிரியங்கா
சும்மாவே இரவு நேரத்தில் கண்ணாடி முன்பு நம் முகத்தைப் பார்த்தாலே பயமாக இருக்கும் அதுவும் இப்படி பாத்ரூம் வாசலில் இருக்கும் கண்ணாடி முன்பு நின்றுகொண்டு பிரியங்கா செய்த செயலைப் பார்த்து ராஜூ மட்டுமல்லாமல் நேற்றைய எபிசோடு பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்களும் ஒரு நிமிடம் திகைத்துப் போய் இருக்கிறார்களாம். அதை வைத்து பல ரசிகர்கள் மீம்ஸ்களை போட்டு கலாய்த்து வருகிறார்கள். என்னதான் பிரியங்கா பல நேரங்களில் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார் என்று நெட்டிசன்கள் கூறிக் கொண்டிருந்தாலும் இவருடைய யதார்த்தமான செயல்பாடுகள் அனைவரையும் கவர்ந்து வருகிறது என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications