பிக் பாஸுக்காக பணம் கொடுத்து ப்ரோமோஷன்!? எதார்த்தமாக உண்மையை உளறிய ராம்..இப்படி மாட்டிக்கிட்டாரே!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த ராம் அந்த நிகழ்ச்சியில் தான் தொடர்வதற்கு பணம் கொடுத்து தான் உள்ளே இருந்தேனா? என்ற கேள்விக்கு முதல் முறையாக பதில் அளித்திருக்கிறார்.
ஆரம்பத்தில் இருந்து பிக்பாஸ் போட்டியாளர்களும் ரசிகர்களும் ராம் குறித்து சொல்லப்பட்ட பல கருத்துகளுக்கு ராம் பதில் கூறியிருக்கிறார்.

இது வருத்தம்தானாம்
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது ஏழாவது வாரத்தில் ஒளிபரப்பாகி வரும் நிலையில், கடந்த வாரத்தில் இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டனர். அதில் ராம் வெளியேறியது பலர் ஆரம்பத்தில் இருந்தே எதிர்பார்த்ததுதான். ஆனால் கடைசிவரத்தில் அவருடைய விளையாட்டு வேற மாதிரி இருந்து இன்றும் சொல்லி விதத்தில் இருந்து வந்தது. இவருடைய விளையாட்டை விளையாட தொடங்கிய வாரத்தில் இவர் வெளியேற்றப்பட்டது அவருடைய ரசிகர்களுக்கும் நண்பர்களுக்கும் ஏமாற்றத்தை தான் கொடுத்து இருக்கிறது. இந்த நிலையில் தனக்கும் அப்படித்தான் இருந்தது .ஆரம்பத்தில் நான் வெளியே வந்திருந்தால் கூட இந்த அளவிற்கு தனக்கு வருத்தம் ஏற்பட்டு இருக்காது என்று ராம் கூறி இருக்கிறார்.

அந்த ஐடியா ஃபெய்லியர் ஆகிடுச்சி
எந்த இடத்திலும் கோபப்படாமல் அமைதியாக இருந்தால் அது பல பலன்களை பெற்று தரும் என்பதை பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக நான் புரிந்து கொண்டேன். என்னுடைய கேரக்டர் எப்படியோ அப்படித்தான் நான் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தேன். நான் இப்போது வெளியே வந்து விட்டாலும் இது எல்லா இடத்திலும் அமைதிக்கு கிடைக்காத அங்கீகாரம் என்று சொல்ல முடியாது. பல பேர் கத்தி ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருக்கும் நேரத்தில் தான் அமைதியாகவே சாதித்து விடலாம் என்று ராம் கூறி இருக்கிறார். அது தன்னுடைய விஷயத்தில் கடைசியில் பெயிலியர் ஆகிவிட்டது என்றாலும் இந்த நிகழ்ச்சியில் தான் இப்படி நடந்தது ஆனால் வெளியே நான் இப்படித்தான் அமைதியாக இருப்பேன் அதனால எனக்கு பல வெற்றிகள் கிடைத்திருக்கிறது என்றும் கூறியிருக்கிறார்.

பாலோவர்ஸ் அதிகரிப்பு
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு முதல் முறையாக லைவில் வந்த ராமிடம் ரசிகர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தனர். அதில் பலர் நீங்கள் பணம் கொடுத்து பி ஆர் மூலமாகத்தான் அதிக நாட்கள் உள்ளே இருந்தீர்கள் என்று ஒரு குற்றச்சாட்டு வந்ததே அது உண்மையா? என்று கேட்க அப்படி எல்லாம் நான் பணம் கொடுக்கவே இல்லை. அப்படி கொடுத்திருந்தால் கடைசி வரைக்கும் நான் இருந்திருப்பேன். என்னை ரசிகர்கள் பலர் ரசித்திருக்கிறார்கள் அதுதான் உண்மை. அதனால்தான் தனக்கு உள்ளே செல்லும் முன்பு இருந்த ரசிகர்களை விடவும் பல மடங்கு பாலோவர்ஸ் அதிகரித்திருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார்.

ஆசைப்பட்டது கிடைத்து விட்டது
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தனக்கு ஒரு மில்லியன் பாலோவர்ஸ் அதிகரித்திருக்கின்றார்கள். இதுவே நான் பெற்ற பெரிய மகிழ்ச்சியும், சாதனையும் என்று தோன்றுகிறது. இந்த ஒரு அங்கீகாரம் எடுப்பதற்காக தான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றேன். அது எனக்கு கிடைத்துவிட்டது. ரசிகர்கள் என்னை இவ்வளவு பேர் பின் தொடர்கிறார்கள் என்றால் எனக்காக எவ்வளவு பேர் ஓட்டு போட்டு இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. அதனால் ரசிகர்களால் தான் நான் இத்தனை வாரங்களை கடந்து வந்தேன். முதல் ஒரு சில வாரங்களில் தனக்கு கண்ணில் அடிபட்டு இருந்ததால்தான் விளையாட்டில் கவனத்தை செலுத்த முடியவில்லை. ஆனால் பின்பு எல்லாம் சரியாகி நான். விளையாடலாம் என்று இருந்தேன் அந்த நேரத்தில் என்னுடைய வெளியேற்றம் நடந்து விட்டது. ஆனாலும் இது எனக்கு பெரிய அளவில் வருத்தத்தை கொடுக்கவில்லை என்று கூறி இருக்கிறார்.
-
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
ஒருபுறம் அஜித் அம்மா மறைவு... மறுபுறம் அனாதையாக விடைபெற்ற சத்யேந்திரா! சமூகத்தின் இரட்டை முகமா? -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
முத்துவின் விபரீத முடிவு.. சிந்தாமணியின் சூழ்ச்சியை முறியடிக்க முடியுமா? சிறகடிக்க ஆசையில் பரபரப்பு -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications