ஒரு கிளி கிஸ்ஸடிச்சது தப்பாய்யா.. ரம்யா பாண்டியன் வாயை விட்டு எந்திருச்சு வாங்கய்யா!
சென்னை: சுருள் சுருளாய் சுருட்டை முடியோடு தோளில் பஞ்சவர்ணக் கிளியை சுமந்தபடி கிளியை கொஞ்சிய ரம்யா பாண்டியனைப் பார்த்து ஷாக்கானது ரசிகர்கள் மட்டுமல்ல அந்த கிளியும் கூட தான்.
வீட்டு விலங்குகளையும் பறவைகளையும் பலரும் நேசிப்பார்கள். ஆனால் இந்த அளவு யாராலயும் நேசிக்க முடியாது என ரம்யா பாண்டியன் தற்போது நிரூபித்திருக்கிறார்.
இவரைப் பார்த்து இளைஞர்கள் ஏங்கிக் கிடைக்கும் நேரத்தில் இவர் அவர்களை காண்டாக்கும் வகையில் கிளியுடன் கொஞ்சுவது மட்டும் போதாது என்று கிளிக்கு உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுத்து பார்ப்பவர்களை வயிறு எரிய வைத்திரக்கிறார் .

இடுப்பழகி ரம்யா
ரம்யா பாண்டியன் என்றாலே இடுப்பு தான் பேமஸ் என நம்பியிருந்த ரசிகர்களுக்கு தற்போது அதுக்கு மேலயும் என்னிடம் சரக்கு இருக்கு என இவர் நிரூபித்திருக்கிறார். ரம்யா பாண்டியன் என்று சொன்னதுமே பலருக்கும் ஞாபகத்திற்கு வரும் அவருடைய மொட்டை மாடி இடுப்பு போஸ் தான். ஆனாலும் தற்போது அதையெல்லாம் மறக்க அடிக்கும் விதமாக நான் அதற்கு மேலேயும் என நிரூபித்து வருகிறார்.

மாடலிங் போட்டோஷூட்
விதவிதமாக போட்டோ ஷூட் நடத்துகிறேன் என முழுநேரமும் மாடலாக மாறிவிட்ட இவர் ரசிகர்களின் மனதை புண்படுத்தி இருக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ் களும் வீடியோஸ் வீடியோஸ் தான் இன்ஸ்டாகிராமில் செம வைரலாக பகிரப்பட்டு வருகிறது .சும்மாவே இவர் என்ன செய்தாலும் கலாய்க்கும் நெட்டிசன்கள் கூட தற்போது தங்களால் முடிந்த அளவிற்கு பதிமூன்று செகண்டில் கமெண்ட்டுகள் 500 தாண்டி சென்று விட்டாலும் அந்த வீடியோக்கள் ரோல் செய்ய ஆரம்பித்து நெட்டிசன்கள் பகிர ஆரம்பித்துவிட்டனர்.

வைரலாகுதே
பொதுவாகவே செலிபிரிட்டிஸ் என்ன செய்தாலும் வைரலாகி வரும் நிலையில் இவர் தற்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் பஞ்சவர்ணக் கிளியை மூக்கோடு மூக்கு உரசி விதவிதமாக போட்டோக்களை எடுத்து குவித்திருக்கிறார். கிளி அழகா ...கிளியை கொஞ்சும் ரம்யா அழகா என்று இவருடைய ரசிகர்கள் குழம்பி வருகின்றனர். இயற்கை ஆர்வலரான இவர் மறைந்த விவேக்கின் தீவிரமான ஃபேன்.

மரம் நடும் நிகழ்வுகள்
அதனால் அவர் இறந்த பிறகும் மரம் நடுவோம் என்று தன்னுடைய ரசிகர்களுக்கு முன்மாதிரியாக மரக்கன்றுகளை நட்டு கொண்டு இருக்கும் இவர் தற்போது கிளியை கொஞ்சி பறவைகளையும் பாதுகாக்க அறிவுறுத்தி இருக்கிறாரோ என்னவோ. ஆனாலும் இவரை நேரில் பார்த்தாலே போதும் என காத்திருக்கும் ரசிகர்கள் தற்போது தமக்கு கிடைக்காத வாய்ப்பு ஒரு கிளிக்கு கிடைத்திருக்கிறது என பொறுமுகிறார்கள்.

உதட்டைக் கவ்விய கிளி
அந்த கிளியின் மீது பொறாமைப் பட்டுக் கொண்டு அந்த கிளி தான் போன ஜென்மத்தில் என்ன புண்ணியம் செய்ததோ அதனால்தான் ரம்யா பாண்டியனின் தோளில் அமர்ந்து போதாது என்று உதட்டில் வாய் வைத்து, மூக்கோடு மூக்கு உரசி ,கைகளை தன்னுடைய செல்ல அழகினால் கொத்தி இந்த ஜென்ம புண்ணியத்தை அடைந்து விட்டதே என்று சிலர் புலம்பி வருகின்றனர்.

வாயை விட்டு எந்திரிங்க
ஆனால் ரம்யா பாண்டியன் "அந்த விண்ணில் ஆனந்தம் இந்த மண்ணில் ஆனந்தம் அடி பூமிப் பந்தை முட்டி வந்த புல்லில் ஆனந்தம்" என ஆனந்தத்தோடு கேப்ஷனை போட்டது மட்டுமல்லாமல் ஆனந்தமாக கலக்கியிருக்கிறார் .இவருடைய சிரித்த முகத்தையே ரசிக்கும் ரசிகர்கள் தற்போது அந்தக் கிளியின் இடத்தில் நாம் இருந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications
