கணவரோடு ரொமான்டிக் போட்டோ சூட் நடத்திய ரம்யா பாண்டியன்.. கலக்கும் புது கெட்டப்
சென்னை: நடிகை ரம்யா பாண்டியன் தன்னுடைய திருமணத்திற்கு பிறகு இரண்டு நாட்களுக்கு முன்பு தன்னுடைய ஹல்த்தி கொண்டாட்ட புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். அதைத் தொடர்ந்து இப்போது தன்னுடைய கணவரோடு எடுத்த க்யூட்டான போட்டோ ஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
ரம்யா பாண்டியன் சின்ன வயதிலிருந்து சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் இருந்த நிலையில் கல்லூரி படிக்கும் போது குறும்படங்களில் நடிக்க தொடங்கினார். அதற்கு பிறகு டம்மி டப்பாசு என்ற திரைப்படத்தில் இவருக்கு கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனாலும் இந்த திரைப்படம் பெரிய அளவில் இவருக்கு பிரபலத்தை கொடுக்கவில்லை.

அதற்குப் பிறகு தன்னுடைய சித்தப்பா அருண்பாண்டியன் முன்னணி தயாரிப்பாளராகவும் நடிகராகவும் இருந்தாலும் யாருடைய உதவியும் இல்லாமல் வாய்ப்புக்காக பல இடங்களில் தானே முயற்சி செய்த ரம்யா பாண்டிய இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் நடித்த ஜோக்கர் திரைப்படம் ஓரளவிற்கு பிரபலத்தை கொடுத்தது. இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக ரம்யா பாண்டியன் நடித்திருந்தாலும் அதில் சில நிமிடங்கள் மட்டுமே இவருடைய காட்சிகள் இருந்தது.
இதைத்தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்தார். ஆனால் அதுவும் பெரிய அளவில் இவருக்கு பிரபலத்தை கொடுக்கவில்லை. அந்த நிலையில்தான் இவர் போட்டோ ஷூட்டை கையில் எடுத்து இளைஞர்களின் மனதை கவர்ந்து விட்டார். மொட்டை மாடியில் புடவையை காற்றில் பறக்க விட்டும் இடை அழகை காட்டியும் எளிமையாக இவர் எடுத்த புகைப்படங்கள் இவரை பட்டி தொட்டி எல்லாம் பிரபலம் அடைய செய்தது.

அதற்கு பிறகு சின்னத்திரையில் தன்னுடைய கவனத்தை திருப்பினார். விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட ரம்யாவிற்கு டைட்டில் கிடைக்கவில்லை. இரண்டாவது ரன்னர் அப் ஆக மாறினார்.
அதைத் தொடர்ந்து பிக் பாஸ் நான்காவது சீசனிலும் கலந்து கொண்டார். அதிகமான நாட்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்தாலும் இவருக்கு டைட்டில் கிடைக்கவில்லை. அந்த சீசனில் ஆரியை இவர் எதிர்த்ததால் இவருக்கு நெகட்டிவ்
உருவாகியது. அதற்குப் பிறகு திரைப்படங்களில் கதை தேர்வு செய்வதில் அதிக கவனம் செலுத்தி பல திரைப்பட வாய்ப்பை ரம்யா பாண்டியன் தவிர்த்து வந்தார்.

அதோடு தன்னுடைய குடும்பத்தினருடன் ஆன்மீக சுற்றுலா தலங்களுக்கு சென்று அப்போது எடுக்கும் புகைப்படங்களையும் தன்னுடைய சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வந்தார். அப்படி வெளியே செல்லும்போது தான் யோகா மாஸ்டர் தவான் என்பவரோடு பழக்கமாகி இருக்கிறார் பிறகு இருவருக்கும் நட்பு ஏற்பட்டு பிறகு காதலாக மாறி சில நாட்களுக்கு முன்பு திருமணம் முடிவடைந்தது.

இவர்களுடைய திருமணம் ரிஷிகேஷில் உள்ள கங்கை நதி கரையில் பூக்களால் மேடை அமைக்கப்பட்டு இயற்கை எழில் சூழ குறிப்பிட்ட சில உறவினர்கள் மத்தியில் நடந்து முடிந்தது. திருமணத்திற்கு பிறகு கணவரோடு எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை ரம்யா பாண்டியன் வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் தற்போது ஜோதா அக்பர் கெட்டப்பில் தன்னுடைய கணவரோடு எடுத்த க்யூட்டான புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இதற்கு அதிகமான லைக் மற்றும் கமெண்ட் வருகிறது.












Click it and Unblock the Notifications