Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அவர் கொஞ்ச இவர் மிஞ்ச...வெட்கத்தை சிந்தும் ரஷ்மி.. குஷியில் ரசிகர்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருமணம் முடிந்து பல மாதங்களுக்குப் பிறகு தங்களுடைய காதலை தெரிவிக்கும் வகையில் கிள்ளி, கொஞ்சி வெட்கப்படும் ரஷ்மியின் போட்டோக்களை பார்த்து அவருடைய ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் பசைபோல ஒட்டிக் கொண்டவர் ரஷ்மி ஜெயராஜ்.

தற்போது திருமணம் முடிந்து தன்னுடைய காதல் கணவருடன் ஒரு போட்டோ சூட்டை எடுத்திருக்கிறார் .இப்ப எல்லாம் திருமணத்திற்கு நாள் குறித்தாலே போதும் அதற்கு முன்பே பிரீ வெட்டிங் ஷூட் எடுக்க ஆரம்பித்து விடுவார்கள்.

பட்டுப்புடவையில்

பட்டுப்புடவையில்

அதுபோல இவரும் திருமணம் முடிந்த பிறகு ஜிகுஜிகு வென பட்டுப்புடவை மினுமினுக்க பாரம்பரிய முறைப்படி இவரும் இவரது கணவரும் கலக்கலாக போட்டோ சூட்டை முடித்திருக்கிறார்கள். இவருக்கு திருமணம் முடிந்தது என தெரியாமல் இருந்த ரசிகர்கள் இந்த போட்டோவை பார்த்து அதிர்ச்சி அடைந்து இருந்தாலும் மனதை ஆறுதல் படுத்தி இவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தனி ரசிகர் கூட்டம்

தனி ரசிகர் கூட்டம்

இவர் சின்னத்திரை நடிகையாக இருந்தாலும் தனக்கென்று ஒரு ரசிகர் வட்டாரத்தை பெருகி விட்டார். தமிழ் மட்டுமல்லாமல் கன்னடத்திலும் பிரபலமான சீரியல்களில் நடித்திருக்கிறார் .கர்நாடகாவில் பிறந்த இவர் தமிழ் மற்றும் கன்னட சீரியல்களில் கலக்கிக் கொண்டிருக்கிறார் .இவருக்கு சமீபத்தில் தான் திருமணம் முடிந்திருந்தது. திருமணத்திற்கு சீரியல் நடிகர் நடிகைகள் முதல் இவருடைய பல நண்பர்களும் கலந்து கொண்டிருந்தனர் .

நாம் இருவர் நமக்கு இருவர் தாமரை

நாம் இருவர் நமக்கு இருவர் தாமரை

இவரை நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் தாமரையாக பார்த்து ரசித்த ரசிகர்கள் இந்த சீரியல் ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டதும் ரொம்பவே பீல் பண்ணி விட்டனர். அந்த அளவிற்கு இவர் ரசிகர்களின் மனதில் பதிந்து விட்டார். ஊரடங்கிருக்கு பிறகு இந்த சீரியலை இரண்டாம் பாகம் எடுத்ததால் இவருடைய ரசிகர்கள் இவர் இந்த சீரியலில் வரவில்லையே என ஏங்கி இருந்தனர் .

ரசிகர்கள் ஏமாற்றம்

ரசிகர்கள் ஏமாற்றம்

அந்த நேரத்தில்தான் தனக்கு திருமணம் எனும் செய்தியை இவர் கூறியிருந்தார் .ஆனாலும் முதலில் நம்ப மறுத்த ரசிகர்கள் பின்பு உண்மை என தெரிந்ததும் வாழ்த்துக்களை கூறிவந்தனர் .திருமணத்திற்குப் பிறகு இப்போது ராஜபார்வையில் நடிக்கிறார் இந்த சீரியலில் இவர் நடிக்கப் போகிறார் எனும் பிரமோவை பார்த்ததும் ஹாப்பியான இவருடைய ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் சீரியலுக்காக வெயிட் பண்ணிக் கொண்டிருக்கிறோம் என கமெண்ட் போட்டு வந்தனர் .

புதுப் பொண்ணு களையில்

புதுப் பொண்ணு களையில்

தற்போது இந்த சீரியல் நல்ல விறுவிறுப்புடன் ஒளிபரப்பப்பட்டு வருகிறது .இதில் சன் டிவி சந்திரலேகா சீரியலின் கதாநாயகன் முன்னா ரஹ்மானுடன் நடித்து வருகிறார். திருமணத்திற்கு பிறகு புது பொண்ணு களையுடன் முகமெல்லாம் மலர்ச்சியாக கணவரின் கண்களை நேராகப் பார்த்தபடி வெட்கத்தால் முகம் சிவந்து பூரிப்போடு இருக்கும் இவருடைய லேட்டஸ்ட் போட்டோஸ் கள்தான் தற்போது அவருடைய ரசிகர்களால் அதிகமாக இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டு வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+