Ravi Mohan: ரவி மோகன் நிலைமை மோசமாக இருக்கு.. அவர் சொல்றது உண்மைதான்! பிரபலம் ஓபன்
சென்னை: நடிகர் ரவி மோகனின் குடும்ப பிரச்சனை கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் மிக அதிகமாக பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர் உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கியபடி பேசிய காட்சி, ரசிகர்களை மட்டுமல்லாமல் பொதுமக்களையும் பெரிதும் பாதித்துள்ளது.

தயாரிப்பாளர் பாலாஜி பிரபு பேட்டி
எப்போதும் உற்சாகமாகவும் கலகலப்பாகவும் காணப்பட்ட ஒரு நடிகர், இப்படி மனவேதனையுடன் உடைந்து பேசுவது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தயாரிப்பாளர் பாலாஜி பிரபு அளித்த பேட்டி தற்போது அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.
ரவி மோகனின் சமீபத்திய பேட்டி குறித்து பேசிய பாலாஜி பிரபு, "தம்பி ரவி மோகன் முழுமையாக உடைந்து போய் பேசினார். அவரைப் பார்க்கவே பாவமாக இருந்தது. எப்படி வாழ்ந்தவர், என்ன மாதிரி இமேஜ் கொண்டவர், இன்று இப்படி எல்லாவற்றையும் உடைத்து வெளியில் வந்து பேச வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார் என்பதை பார்த்தாலே அவர் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பது புரிகிறது" என்று கூறியுள்ளார்.
ரவி மோகன் மன வேதனை
ஒரு நடிகருக்கு சமூகத்தில் ஒரு தனி இமேஜ் இருக்கும். குறிப்பாக குடும்ப ரசிகர்கள் கொண்டாடும் ஹீரோவாக இருந்த ஒருவர், உலகமே பார்க்கும் வகையில் தன்னுடைய மனவேதனையை இப்படி வெளிப்படுத்துவது சாதாரண விஷயம் இல்லை என்று அவர் கூறியுள்ளார். "அவர் இப்படி பேசியிருக்கிறார் என்றால், அவருக்குள் இருக்கும் வேதனை உண்மையாகவே மிகப் பெரியதாக இருக்க வேண்டும்" என்பதையும் பாலாஜி பிரபு சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், "பொதுவாக ஒரு மனிதன் இவ்வளவு மூர்க்கமாக கோபத்தையும் வேதனையையும் வெளிப்படுத்துவது எப்போது தெரியுமா? தனக்கென்று எதுவுமே இல்லை, எல்லாமே கைவிட்டுவிட்டது, தன்னம்பிக்கை கூட உடைந்து போய்விட்டது என்று உணரும்போது தான். அந்த விளிம்பு நிலைக்குத்தான் ரவி மோகன் சென்றிருக்கிறார் போல தெரிகிறது" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ரவி மோகன் வருத்தம்
ரவி மோகனின் வாழ்க்கையில் ஏற்பட்ட ஏமாற்றங்கள், துரோகங்கள், மனஅழுத்தங்கள் எல்லாம் சேர்ந்து இந்த நிலைக்கு அவரை கொண்டு வந்திருக்கலாம் என்றும் பாலாஜி பிரபு கருத்து தெரிவித்துள்ளார். "அவர் இப்போது இருக்கும் சூழ்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து இப்படி பேச வேண்டிய அவசியமே இல்லை. ஆனால் அதைச் செய்திருக்கிறார் என்றால், அவரது மனநிலை மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதற்கே அது சான்று" என்றும் கூறியுள்ளார்.
குறிப்பாக குழந்தைகளை பார்க்க முடியாத நிலை, பணக்கஷ்டம், குடும்ப பிரச்சனை என இவை அனைத்தும் சேர்ந்து அவரை உடைத்திருக்கலாம் என்று அவர் கூறியுள்ளார். "நேற்று அவர் பேசியதை கவனித்தால் தெரியும். சில இடங்களில் தைரியமாக பேசுகிறார். அடுத்த நொடி உடைந்து அழுகிறார். பிறகு மீண்டும் பேசுகிறார். இது நார்மலான மனநிலை இல்லை. அவர் மிகுந்த அழுத்தத்தில் இருக்கிறார். ரொம்ப டென்ஷனில் இருக்கிறார்" என்று பாலாஜி பிரபு குறிப்பிட்டுள்ளார்.
ரவி மோகன் பேட்டி
அதே சமயம், ரவி மோகன் பேட்டியில் சொன்ன ஒரு விஷயம் தன்னை கவலைப்படுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார். "என்னை அழிக்க நினைக்கிறார்கள், நான் அவர்களை அழிக்காமல் விடமாட்டேன்" என்ற வகையிலான பேச்சு சாதாரணமாக யாரும் பேசக்கூடாது. ஆனால் அந்த அளவுக்கு அவர் பேசுகிறார் என்றால், அவர் எந்தளவு மனவேதனையில் இருக்கிறார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்று பாலாஜி பிரபு தெரிவித்துள்ளார்.
"இந்த வீடியோவை பார்க்கும்போது நமக்கே அழுகை வருகிறது. எப்படி இருந்த மனிதர் இப்படி பேசுறாரே என்று மனசு வலிக்கிறது" என்றும் அவர் உருக்கமாக கூறியுள்ளார். இதற்கிடையில் ரவி மோகனின் குழந்தைகள் தொடர்பான விஷயத்திலும் பாலாஜி பிரபு கருத்து தெரிவித்துள்ளார். "அவர் உண்மையாகவே குழந்தைகளை பார்க்க ஆசைப்படுகிறாரானால், சட்டப்படி நீதிமன்றத்தில் மனு கொடுத்து சந்திப்பு உரிமை கேட்கலாம். பொதுவாக விவாகரத்து வழக்குகளில் குழந்தைகள் மைனராக இருந்தால் வாரத்தில் ஒரு நாள் அல்லது இரண்டு நாள் பார்க்க அனுமதி வழங்கப்படுவது வழக்கம்.
ரசிகர்கள் ஆறுதல்
நீதிமன்றமும் பல நேரங்களில் அதற்கு சாதகமாக இருக்கும். ஆனால் ரவி மோகன் அந்த முயற்சியை எடுத்தாரா இல்லையா என்பது தெரியவில்லை" என்று கூறியுள்ளார். இதற்கிடையில் சமூக வலைதளங்களிலும் ரவி மோகனுக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. "அவருக்கு இந்த நேரத்தில் ஆறுதல் தேவை", "குடும்பமும் நண்பர்களும் அருகில் இருக்க வேண்டும்", "மனஅழுத்தத்திலிருந்து வெளியே வர வேண்டும்" என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
திரையில் எப்போதும் சிரித்த முகத்துடன் ரசிகர்களை கவர்ந்த நடிகர், நிஜ வாழ்க்கையில் இவ்வளவு சோகத்துடன் காணப்படுவது ரசிகர்களை உருக்கி இருக்கிறது. தற்போது அனைவரும் எதிர்பார்ப்பது ஒன்றுதான் இந்த கடினமான சூழ்நிலையிலிருந்து ரவி மோகன் விரைவில் மீண்டு வர வேண்டும் என்பதே.
-
மரியான் பட நடிகர் சலீம் குமாரின் மறைவால் உருகிய 'கருப்பு' நடிகை சிவதா.. கலங்க வைத்த பதிவு -
சென்னையை விட்டு கிராமத்துக்கு போக போறேன்.. இதுதான் காரணம்! உருக்கமாக பேசிய விஜய் ஆண்டனி -
மகனின் 2வது பிறந்த நாளை வித்தியாசமாக கொண்டாடிய சிவகார்த்திகேயன்.. பாராட்டு குவியுது -
ரவி மோகன் தோழி கெனிஷாவிற்கு பெரிய சிக்கல்.. நீதிமன்றம் கொடுத்த அதிர்ச்சி.. ரசிகர்கள் கேள்வி இதுதான்! -
தன் உயரத்திற்கு அரிவாள் காணிக்கை... கருப்பசாமி கோவிலில் மனைவியுடன் சிவகார்த்திகேயன்.. பின்னணி என்ன? -
"விஜய் ஜெயிச்சதும் வீட்டிலேயே ஷாக் கொடுத்த குடும்பம்”... போஸ் வெங்கட் சொன்ன ஓபன் ஸ்டேட்மென்ட் -
ஆண் பாவம் பாண்டியனின் சோகமான மறுபக்கம்.. பிரபல நடிகரை வீழ்த்திய "பந்தய குதிரை".. நடந்தது என்ன -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்?












Click it and Unblock the Notifications