பணத்திற்காக முன்னாள் மனைவி இப்படி பண்ணுறாங்க! ரவி மோகன் அறிக்கை.. கெனிஷாவின் திடீர் பதிவு
சென்னை: நடிகர் ரவி மோகன் மனைவியான ஆர்த்தி ரவி கடந்த சில நாட்களுக்கு முன்பு இரண்டு பக்கத்திற்கு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதற்கு மறுப்பு தெரிவித்து ரவி மோகன் இன்று தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் நான்கு பக்கத்திற்கு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில் ஆர்த்தி என்னுடைய முன்னாள் மனைவி அவ்வளவுதான். என்னுடைய மகன்களுக்கு விபத்து நடந்ததை கூட என்னிடம் சொல்லவில்லை. அவர்களுக்காக நான் போட்ட ஜாமின் கையெழுத்தை வைத்து என்ன மிரட்டுறாங்க என்று பல விஷயத்தை பகிர்ந்து இருக்கிறார். இந்த நிலையில் ரவி மோகன் அறிக்கைக்கு அவருடைய தோழி கெனிஷா அவரை பாராட்டி பதிவு வெளியிட்டிருக்கிறார்.

கடந்த ஆண்டு நடிகர் ரவி மோகன் ஆர்த்தி உடனான திருமண வாழ்க்கையில் இருந்து தான் பிரிவதாக அறிவித்திருந்தார். பிறகு ரவி மோகன் விவாகரத்து வேண்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரவி மோகன் அவருடைய தோழியான கெனிஷாவுடன் திருமண விழாவில் ஒன்றாக கலந்து கொண்டார். இது பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆர்த்தி ரவி அறிக்கை
அதைத் தொடர்ந்து ரவி மோகனின் மனைவி ஆர்த்தி அறிக்கை ஒன்று வெளியிட்டு இருந்தார். அதில் "தன் மகன்களை முன்வைத்து தான் தாயாக போராடி வருகிறேன். தன்னுடைய மகன்களில் நிதி சுமையை தான் ஒருவராக சுமக்கிறேன்" என்று நீண்ட அறிக்கை வெளியிட்டிருந்தார். அதற்கு நடிகை ராதிகா, குஷ்பூ உள்ளிட்ட சில நடிகைகள் ஆதரவு தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் ரவி மோகன் இன்று தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் நான்கு பக்கத்திற்கு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.
ரவி மோகன் அறிக்கை
அதில் "என்னுடைய விவாகரத்து விவகாரம் குறித்து ஏற்கனவே குடும்பத்தினருக்கு தெரியும். என் முன்னாள் மனைவியின் தனி உரிமையை மதித்து தான் நான் பேசாமல் இருந்தேன். அதனால் தான் நான் அமைதியாக இருந்தேன்". 'ஆர்த்தி என் முன்னாள் மனைவி அவ்வளவுதான்'. என் வீட்டை விட்டு நான் வெளியே வந்த போது அவரை என் முன்னாள் மனைவி என்று முடிவு செய்து விட்டேன்.
முன்னாள் மனைவி
என் கடைசி மூச்சு வரை இனி அது அப்படியே இருக்கும். ஆனால் என்னை உடைப்பது என்னவென்றால் நிதி ஆதாயத்திற்காக என்னுடைய குழந்தைகள் பயன்படுத்தப்படுகின்றனர். அவர்கள் அனுதாபத்தை தூண்ட குழந்தைகளை வைத்து கதை திரிக்கப்படுகிறது. நாங்கள் பிரிந்ததிலிருந்து குழந்தைகளை பார்க்க நான் அனுமதிக்கப்படவில்லை.
அனுமதி கிடைக்கவில்லை
கடந்த கிறிஸ்துமஸில் நடந்த நீதிமன்ற கூட்டத்திற்கு பிறகு அனைத்து தகவல் தொடர்பும் துண்டிக்கப்பட்டன. அவர்களுடன் பவுன்சர்கள் எப்போதும் இருக்கின்றனர். அவர்கள் விபத்தில் சிக்கிய போது அந்த விபரம் கூட எனக்கு சொல்லவில்லை. மூன்றாம் மனிதர் போல் கார் ரிப்பேர் இன்சூரன்ஸ் கையெழுத்துக்காக மட்டுமே நான் தேவைப்பட்டேன். "என் குழந்தைகள் உண்மையை தெரிந்து கொள்ளும்போது அப்பாவாக என்னை புரிந்து கொள்வார்கள்."
அம்மாவின் வற்புறுத்தல்
கடந்த ஐந்து வருடத்தில் என் சம்பாத்தியத்தில் பெற்றோருக்கு ஒரு பைசா கூட அனுப்ப அனுமதிக்கப்படவில்லை. சினிமா துறையில் இருப்பவர்கள் எல்லோருக்குமே இந்த உண்மைகள் எல்லாமே தெரியும். அதுபோல முன்னாள் மனைவியின் குடும்பத்தினர் வாங்கிய கடனுக்கு நான் ஜாமின் கையெழுத்து போட்டு இருக்கிறேன். கடந்த 10 நாட்களுக்கு முன்னர் கூட என்னுடைய ஜாமின் கையெழுத்தை வைத்து ஒரு படத்தில் நடிக்க அவர் அம்மா வலியுறுத்தினார். பிரச்சனைக்கு தீர்வு நீதிமன்றத்தில் தான் கிடைக்குமே தவிர சமூக வலைதளத்தில் இல்லை என்று ரவி மோகன் அதில் தெரிவித்திருக்கிறார்.

கெனிஷா பதிவு
ரவி மோகனின் அறிக்கைக்கு ரசிகர்கள் சிலர் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். அதில் ஒரு ரசிகரின் பதிவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த கெனிஷா ரவி மோகன் பற்றி அதில் சில விஷயங்களையும் பகிர்ந்திருக்கிறார். அதில், "ஒரு நபர் உண்மையில் என்ன செய்கிறார் என்பதை விளக்குவது கடினம். உண்மையான கதை தெரியாமல் மக்கள் விரைவாக கருத்து தெரிவிக்கின்றனர். இது முன்பு நடந்தது, அது மீண்டும் நடக்கும். ஆனால் நீங்கள் ஒரு நிலைப்பாட்டை எடுப்பதற்கு முன் முழுமையும் அறிந்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ரவி மோகன் தன் சொந்த வசதியை விட மற்றவர்களின் வசதியை எப்போதும் கருதுபவர். உண்மையான இதயம் கொண்ட அன்பான ஆன்மா. இதுவும் கடந்து போகும். கடவுள் வெறுப்பவர்களையும் ஆசீர்வதிப்பாராக என்று அந்த பதிவில் கெனிஷா குறிப்பிட்டு இருக்கிறார்.












Click it and Unblock the Notifications