சில மாதங்களுக்குள் இப்படி ஒரு மாற்றம் வரும்னு நினைக்கலை.. மகாலட்சுமியை குறித்து ரவீந்தர் பதிவு
திருமணத்திற்கு பிறகு தன்னுடைய காதல் குறித்து ரவீந்தர் உருக்கமாக பதிவு வெளியிட்டு இருக்கிறார்.
சென்னை: சின்னத்திரை நடிகையான மகாலட்சுமியை குறித்து அவருடைய கணவர் கவிதை ஒன்றை சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
ரவீந்தர் வெளியிட்ட பதிவிற்கு மகாலட்சுமியும் நான் இன்னும் உங்களை காதலிக்கிறேன் என்று பதில் கொடுத்திருக்கிறார்.
திருமணத்திற்கு பிறகும் காதலர்களாக வலம் வரும் மகாலட்சுமி மற்றும் ரவீந்தருடைய பதிவுகள் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களின் மத்தியில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.

பிரபலம் கொடுத்த திருமணம்
லிப்ரா தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ஆன ரவீந்தர் பல படங்களை தயாரித்து வெளியிட்டு இருக்கிறார். அப்போதெல்லாம் பிரபலமாகாமல் இருந்த ரவீந்தர் சில மாதங்களுக்கு முன்பு சீரியல் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்டார். அதற்கு பிறகு பட்டி தொட்டி எல்லாம் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமியின் புகைப்படங்களும் மீம்ஸ்களும் வைரலாகி வருகிறது.

சின்னத்திரையில் கலக்கல்
மகாலட்சுமி முதல் முதலாக 2007 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான அரசி சீரியல் மூலமாக சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்தார். அதற்குப் பிறகு இன்று வரைக்கும் சின்னத்திரையில் கலக்கி வருகிறார். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியலில் நெகடிவ் கேரக்டரில் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் பாசிட்டிவ் கேரக்டரில் நடித்து வந்த மகாலட்சுமி தற்போது நெகட்டிவ் கேரக்டரில் அதிகமாக நடித்து வருகிறார். சின்னத்திரையில் கதாநாயகியாக மாறுவதற்கு முன்பு தொகுப்பாளராக பல இளைஞர்களின் மனதை கவர்ந்த மகாலட்சுமி சமூக வலைத்தளத்திலும் ரசிகர்களின் மத்தியில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

திருமணத்தால் வருத்தம்
இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு எளிமையாக திருமணத்தை முடித்து இருந்த மகாலட்சுமி வெளியிட்ட திடீர் புகைப்படம் பல இளைஞர்களின் இதயத்தை வெடிக்க வைத்து விட்டது. இவருக்கு இவரா? மாப்பிள்ளை என்று பலர் நொந்து போய் பீல் பண்ணி கருத்து வெளியிட்டு வர என்னுடைய காதல் தான் உலகத்தில் பெரியது என்று மகாலட்சுமி அன்று முதல் இன்று வரைக்கும் அடிக்கடி சமூக வலைத்தளத்தில் தன்னுடைய கணவரின் புகைப்படத்தை வெளியிட்டு கூறி வருகிறார்.

வலம் வரும் புகைப்படங்கள்
இந்த நிலையில் திருமணத்திற்குப் பிறகு வார இறுதி நாட்களில் ஹோட்டல் செல்வதும் கோவில் செல்வதும் ஒரு முக்கியமான வேலையாக வைத்திருக்கும் மகாலட்சுமி மற்றும் ரவீந்தர் வெளியே செல்லும் இடங்களில் தாங்கள் எடுக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு தங்களுடைய காதலை அதில் கொட்டி தீர்த்து வருகிறார்கள். இருவரும் நிஜத்தில் எந்த அளவிற்கு உருகி உருகி காதல் பரிமாற்றம் செய்து கொண்டிருக்கிறார்களோ அதுபோலவே சமூக வலைத்தள பக்கங்களிலும் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

செம கவிதை
அந்த மாதிரி தான் தற்போது கூட ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அதற்கு ரவீந்தர்," வலிகள் இல்லாத வாழ்க்கையும் இல்லை.. வழி இல்லாமலும் வாழ்க்கை இல்லை.. என்னவள் வந்தால் அவள் விழி தந்தாள், என்றும் ....அவள் என் முட்டாள்தனத்தை ஒத்துக் கொள்ளவே இல்லை. ஆனால் காதலால் என்னில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று நிரூபித்தால், நான் உணர்வில் இருக்க முயற்சி செய்கிறேன் என்று பதிவிட்டிருக்கிறார். தற்போது இது அதிகமான லைக்குகளை பெற்று வருகிறது.
-
சிறகடிக்க ஆசையில் ரசிகர்கள் நினைத்தது நடந்தது.. இனியாவது விஜயா திருந்துவாரா? முத்து கொடுத்த செம ட்விஸ்ட் -
"முத்து ஜெயித்த நேரத்தில் வந்த புதிய சிக்கல்!"... ரோகிணி போன் காலால் தலைகீழான சிறகடிக்க ஆசை கதை -
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் படிக்கட்டில் அந்த சத்தம்! யாருமே கவனிக்காத நடிகர் திலகத்தின் கை ரகசியம் -
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications