சாச்சனாவுக்கு நடந்த கொடுமை வெளியே தெரியாது.. விஜய் சேதுபதி இதை கேட்கணும்! ரவீந்தர் ஓபன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8வது நிகழ்ச்சியில் கடந்த வாரத்தில் தனக்கு சாப்பாடு சரியாக தரவில்லை என்று சாச்சனா அழுது இருந்தார். இது பற்றி ரவீந்தர் சில விஷயங்களை பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருக்கிறார். உள்ளே நடக்கும் பல விஷயங்கள் வெளியே தெரியாது, விஜய் சேதுபதி இதை மறு விசாரணை செய்ய வேண்டும் என்று ரவீந்தர் கூறியிருக்கிறார்.

கடந்த சனிக்கிழமை எபிசோடில் பிக் பாஸ் வீட்டிற்குள் நடந்த உணவு சண்டை பற்றி தான் அதிக நேரம் பேசி இருந்தார். சம்மந்தி என்ற உணவு கிடைக்காததால் சாச்சிகா கடந்த வெள்ளிக்கிழமை அழுது ஆர்ப்பாட்டம் செய்தது பற்றி சனிக்கிழமை விஜய் சேதுபதி கேள்வி கேட்டிருந்தார். அப்போது சாச்சனா நான் இரண்டு முறை எனக்கு சம்மந்தி வேண்டும் என்று கேட்டேன். ஆனால் எனக்கு கொஞ்சமாக கொடுத்து விட்டார்கள்.

television bigg boss tamil 8 bigg boss 8

பிறகு சுனிதாவிற்கு என்று அங்கு ஒரு கப்பில் மொத்தத்தையும் அன்ஷிதா எடுத்து வைத்தார். அது எனக்கு கஷ்டமாக இருந்தது. நான் வெஜிடேரியன் என்பதால் எனக்கு கூட கொஞ்சம் கூட்டு அல்லது பொரியல் இருந்தா தாங்க என்று நான் ஏற்கனவே கேட்டு இருக்கிறேன். அப்படி கேட்டும் எனக்கு சரியா சாப்பாடு தரவில்லை. சரியா சாப்பிடாததால் தான் எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது.

உடல்நிலை சரியில்லாமல் போனதும் டாஸ்க்கில் என்னால் சரியாக விளையாட முடியவில்லை. என்னை எல்லாரும் ஒதுக்கி வைக்கிறார்கள் என்று குற்றச்சாட்டு சொல்லி அழுது இருந்தார். அதற்கு அன்ஷிதா மற்றும் அங்கு இருக்கும் சக பெண்கள் எல்லோரும் அதை மறுத்து இருந்தார்கள்.

நாங்கள் யாருக்கும் பாரபட்சம் இல்லாமல் சாப்பாடு கொடுக்கிறோம். ஆனால் சாச்சனா சரியாக புரிந்து கொள்ளாமல் வாக்குவாதம் செய்கிறார் என்று கூறியிருந்தனர். இது பற்றி விஜய் சேதுபதி விசாரித்து இருந்தார். ஆனாலும் இந்த சம்பவம் குறித்து பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு முதல் வாரமே எலிமினேஷன் ஆகி வெளியே வந்த ரவீந்தர் சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

அதில் சாச்சனா அன்னைக்கு சாப்பாட்டுக்காக அழுதது எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும் அது சச்சனாவுக்காக மட்டுமல்ல பிக் பாஸ் வீட்டில் நான் உட்பட பலருக்கு அவமானம் ஏற்பட்டிருக்கிறது. ஒரு சிலர் சாப்பாடு விஷயத்தில் ஒரவஞ்சனை செய்றாங்க. அதனால் பலருக்கும் அந்த அவமானம் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

சாப்பாடு விஷயத்தில் அவமானப்படுவது ரொம்ப கஷ்டமான விஷயம். நான் இருந்த ஒரு வாரத்திற்கு ஒரு சிலர் அந்த குண்டனுக்கு சாப்பாடு போட்டு முடியாது. குண்டன் சாப்பிட வந்துட்டா எல்லா சாப்பாடும் காலி ஆகிடும் என்று சொல்லி சிரித்திருக்காங்க. முதல் நாள் இரவு அவர்கள் பேசியதை கேட்டு தான் நான் அடுத்த நாள் காலையிலும் சாப்பிடவில்லை மதியமும் சாப்பிடவில்லை.

எனக்கு மனசு ரொம்ப கஷ்டமா இருந்ததால் நான் சாப்பிடாமல் இருந்தபோது சிலர் வந்து என்னை சமாதானம் செய்வது இரவு சாப்பிட வைத்தார்கள். அதனாலேயே எனக்கு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தது சந்தோஷம் என்று தெரிகிறது. வெளியிலே பல விஷயங்கள் காட்டப்படாததால் ஒரு சிலர் சாப்பாட்டு விஷயத்தில் முகம் சுளிக்கிறார்கள்‌ அது எல்லோருக்கும் வருத்தத்தை ஏற்படுத்த தான் செய்யும்.

இந்த விஷயத்தை பற்றி நான் இப்போ பேசலாமா? இல்லையா? என்று தெரியவில்லை. ஆனாலும் என்னுடைய மனதில் இருக்கும் குமுறலை நான் சொல்லிவிட்டேன். இது பற்றி விஜய் சேதுபதி இன்னொரு முறை விசாரித்தால் நன்றாக இருக்கும். சாச்சனா பொண்ணு அழுதது அவர் மீண்டும் மீண்டும் அசிங்கப்பட்டதால் தான். வெளியே அவர் அதிகமாக சீன் போட்டது போல தெரிகிறது, ஆனால் உண்மை அதுவல்ல என்று ரவீந்தர் பேசியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+