போதும் இத்தோடு முடித்துக் கொள்ளலாம்.. இனி மகாலட்சுமி பேச்சை எடுக்காதீங்க.. ரவீந்தருக்கு என்னாச்சு?
சென்னை: 300 பட்டுப்புடவை, 75 லட்ச ரூபாயில் பங்களா இதெல்லாம் பொய், அப்படியெல்லாம் நான் மகாலட்சுமிக்கு வாங்கித் தரவில்லை என தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் மறுத்துள்ளார்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக காதலித்து திடீரென செப்டம்பர் 1 ஆம் தேதி மகாலட்சுமியும் ரவீந்தரும் திருமணம் செய்து கொண்டார்கள். இந்த திருமணம் கடந்த 10 நாட்களாகியும் வைரலாகி பேசும் பொருளாகியுள்ளது.
இவர்களது திருமணம் திடீரென வைரலானதற்கு காரணம் ரவீந்தர் வனிதா விஜயகுமார் திருமணத்தில் கூறிய கருத்துகள், ஒன்றரை ஆண்டுகளாக இவர்களது காதல் ஒரு சொட்டுக் கூட லீக்காகாதது, இப்படி உடல் அமைப்பு கொண்டவருக்கு இத்தனை அழகான மனைவியா என்பது உள்ளிட்டவையே ஆகும்.

திருமணம்
இவர்கள் திருமணம் முடிந்த பிறகு கூட இவர்களது இன்ஸ்டாகிராமில் நெருக்கமாக வெளியிட்ட புகைப்படங்களால் 90 கிட்ஸ்கள் வயிற்றெரிச்சலில் உள்ளார்கள் என சொல்லலாம். இந்த நிலையில் மகாலட்சுமிக்காக ரவீந்தர் ஒரு சில பரிசுகளை கொடுத்துள்ளார் என்ற தகவல்களும் வைரலாகி வருகின்றன.

300 பட்டுப்புடவை
அதாவது மகாலட்சுமிக்காக 300 பட்டுப்புடவைகளையும் தலை முதல் கால் வரை நிறைய நகைகளையும் கொடுத்துள்ளதாகவும் மகாலட்சுமிக்காக 75 லட்சம் மதிப்பில் ஒரு பங்களாவை கட்டி வருவதாகவும், அதில் தங்க முலாம் பூசப்பட்ட கட்டிலும் தயாராகி வருவதாகவும் உறுதிப்படுத்தப்பட முடியாத தகவல்கள் வெளியாகின.

இன்ஸ்டாகிராம்
இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் லைவ்வில் ரவீந்தர் லைவில் வந்து பேட்டி கொடுத்தார். அதில் நான் யாரையும் அழ வைத்துவிட்டு மகாலட்சுமியை திருமணம் செய்யவில்லை. எனவே எனது திருமணத்தை வனிதாவுக்கு நான் செய்த அட்வைஸுடன் ஒப்பிடாதீர்கள். இனி பேட்டிக்காக என்னை யாரும் தொடர்பு கொள்ளாதீர்கள்.

திருமணத்தை பற்றி பேச வேண்டாம்
இத்துடன் போதும் முடித்துக் கொள்ளலாம். மகாலட்சுமியை அசிங்கமாக பேசாதீர்கள். நீங்கள் அசிங்கமான கமென்ட் போடும் முன்பு நீங்கள் அடித்ததை உங்கள் அம்மா, அக்கா, தங்கை, மனைவி, மகள் ஆகியோரை அழைத்து படித்து பார்க்க சொல்லுங்கள். அப்போது அவர்களது மனம் எப்படி கஷ்டப்படுகிறதோ அப்படித்தான் நீங்கள் விமர்சனம் செய்வோரின் மனமும்! எங்கள் திருமணத்தை வைத்து ஆளாளுக்கு எதை எதையோ கிளப்பி வருகிறார்கள். ஒரு யூடியூப் சேனலில் நான் மகாலட்சுமிக்காக 300 பட்டுப்புடவைகளையும் நகைகளையும் கொடுத்தாக கூறுகிறார்கள். அத்துடன் 75 லட்சத்தில் பங்களா என்றெல்லாம் கூறுகிறார்கள்.

கன்டென்ட்
அதெல்லாம் உண்மை இல்லை. உங்களுக்கு கன்டென்ட் வேண்டும் என்றால் என்னிடம் கேளுங்கள். அதை விட்டுவிட்டு நீங்களாக எதை எதையோ எழுதாதீர்கள் என்றார். அப்போது மகாலட்சுமியை அழைத்தார். அவர் நான் பணத்துக்காக திருமணம் செய்து கொண்டேன் என என்னை எதுவேண்டுமானாலும் சொல்லுங்கள். ஆனால் என் கணவரை யாரும் பாடி ஷேமிங் செய்யாதீர்கள் என உருக்கமாக கேட்டுக் கொண்டார்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்












Click it and Unblock the Notifications